Monday, April 30, 2007

"நந்திகிராம் படுகொலை" பற்றிய டாக்குமென்ட்ரி


மேலும் இந்த டாக்குமென்ட்ரியை இங்கும் காணலாம்google video.



Labels: ,

Wednesday, April 25, 2007

பாரதிதாசன் பாடல்கள் "பெண் குழந்தை தாலாட்டு "

பெண் குழந்தை தாலாட்டு

ஆராரோ ஆரரிரோ ஆரரிரோ ஆராரோ

ஆராரோ ஆரரிரோ ஆரரிரோ ஆராரோ

சோலை மலரே ! சுவர்ணத்தின் வார்ப்படமே !
காலை இளஞ் சூரியனைக் காட்டும் பளிங்குருவே !

வண்மை உயர்வு மனிதர் நல மெல்லாம்
மெண்மையினால் உண்டென்று பேச வந்த பெண்ணழகே !

நாய் என்று பெண்ணை நவில்வார்க்கும் இப்புவிக்குத்
தாய் என்று காட்டத் தமிழர்க்கு வாய்த்தவளே !


வெண்முகத்தில் நீலம் விளையாடிக் கொண்டிருக்கும்
கண்கள் உறங்கு ! கனியே உறங்கிடுவாய் !

அன்னத்தின் தூவி அனிச்ச மலரெடுத்துச்
சின்ன உடலாகச் சித்திரித்த மெல்லியலே !

மின்னல் ஒளியே, விலைமதியா ரத்தினமே !
கன்னல் பிழந்து கலந்த கனிச்சாறே !

மூடத்தனத்தின் முடை நாற்றம் வீசுகின்ற
காடு மணக்க வரும் கற்பூரப் பெட்டகமே !

வேண்டாத சாதி இருட்டு வெளுப்பதற்குத்
தூண்டா விளக்காய்த் துலங்கும் பெருமாட்டி !

புண்ணிற் சரம் விடுக்கும் பொய்ம் மதத்தின் கூட்டத்தைக்
கண்ணிற் கனல் சிந்திக் கட்டழிக்க வந்தவளே !

தெய்விகத்தை நம்பும் திருந்தாத பெண் குலத்தை
உய்விக்க வந்த உவப்பே ! பகுத்தறிவே !

எல்லாம் கடவுள் செயல் என்று துடை நடுங்கும்
பொல்லாங்கு தீர்த்துப் புதுமை செய வந்தவளே !

வாயில் இட்டுத் தொப்பை வளர்க்கும் சதிக்கிடங்கைக்
கோயிலென்று காசு தரும் கொள்கை தவிர்ப்பவளே!

சாணிக்குப் பொட்டிட்டுச் சாமி என்பார் செய்கைக்கு
நாணி உற்ங்கு ; நகைத்து நீ கண்ணுறங்கு !

Labels:

Friday, April 20, 2007

"லெனின்"- புகைப்படங்கள்

"லெனின்"- இறக்கவில்லை-நம்முடன் வாழ்கிறார்.





























































"தோழர்களே, புலம்பாதீர்கள்.நாம் வெற்றி பெற்றே தீருவோம்.ஏனெனில், நம்முடைய நிலைப்பாடு சரியானது."
- தோழர் லெனின்

Labels:

Monday, April 16, 2007

எதையும் காணவில்லை.... இன்னும்

நல்லகாலம் கெட்டகாலம்
இரண்டையும் பார்த்துவிட்டோம்

சன்னலின் வழியே
தப்பிப் பறக்கிறது நம்பிக்கை

அதிருஷ்டம் - அதுவோ

கதவைத் திறந்து கொண்டு
வெளியேறுகிறது.

புரிந்து கொண்டோம்
போகப்போக எல்லாம்
சரியாகிவிடும்
என்பதை மட்டும்
நம்பக்கூடாதெனப்
புரிந்து கொண்டோம்

ஏனென்றால்
நாங்கள் இன்னும்
எதையும் காணவில்லை.

கைகள் கட்டப்படவில்லை
சுதந்திரம் !

ஆட்டம் என்னவோ
பழைய கோமாலி ஆட்டம்தான்.

ஒட்டம்....கால்கள் தரிக்காத ஒட்டம்
எங்கும் போய்ச் சேராத ஒட்டம்

புதிய பக்கம்- பழைய புத்தகம்
புதிய ஆட்டம்-அதே பழைய விதிகள்

விளக்கொளி தணிந்து
இருள்கிறது மேடை

இன்னும் எதையும் காணவில்லை நாங்கள்

சேணத்தில் பூட்டப்பட்டிருக்க்கிறது
நொறுங்கிப் போன வாழ்க்கை

நாற்பது ஏக்கர் நிலம்
நாற்பது அவுன்சு சாராயமாகித்
தொண்டையில் இறங்குகிறது.
இதுதன் நீதி போலும் !

போலீஸ் வண்டிகளின் ஊளைச் சத்தம்
அழுகுரலாய்த தேய்ந்து கரைகிறது
சுதந்திரதேவிக் கைச்சுடரின்
நிழல் மறைவில்

அதோ... கரைக்கு அப்பால்
தொடுவானத்தில்
மெல்லக் கடலில் ழூழ்குகின்றன
எங்களைப் பிணைத்து வந்த படகுகள்

இன்னும்
நாங்கள் எதையும் காணவில்லை.

குற்றமாய்க் கனக்கிறது வாழ்க்கை

இது வரமா இல்லை சாபமா
என் விருப்பமா இல்லை வெறுப்பா
இதைக் கைப்பற்றினேனா
பிடுங்கியெறியப்பட்டேனா

ஓடிவிடத் துடிக்கிறேன்
எங்கே ஓடுவேன்
போகுமிடம் எதுவுமில்லை

நின்றுதான் தீர வேண்டும்
முழந்தாளில் சரியமாட்டேன்
நிற்பேன் போராடுவேன்

உன்னதமான காலம் வரத்தான் போகிறதென்று
நம்பிக்கை கொள்வேன்
இறைஞ்சுவேன்

ஏனென்றால்
நாங்கள் எதையும் காணவில்லை
இன்னும்.

- டிரேஸி சாப்மன்

அமெரிக்கக் கருப்பினப் பாடகி

Labels:

Saturday, April 07, 2007

"அழகி" அற்ப மனிதனின் அவலம் !


"சண்முகம் ஒன்றும் புரட்சிக்காரனல்ல; உங்களையும் என்னையும் போன்று குறைகளும் பலவீனங்களும் கொண்ட ஒரு நல்ல மனிதன் - அவ்வளவுதான்" என்று ரசிக சண்முகங்கள் வாதிடலாம். "சண்முகம் ஏன் சராசரி மனிதனாகச் சித்தரிக்கப்பட்டுயிருக்கின்றான்" என்பதல்ல நம் கேள்வி. "இந்த சராசரி மனிதனின் அற்பத்தனங்கள் இடிந்துரைக்கப் படாமல் அனுதாபத்துடன் சித்தரிக்கப்படுவது ஏன்" என்பதுதான் கேள்வி.


அந்தக் கலக்கமும் , வேதனையும் ஒரு மனிதனின் தவறுகளையும், தடுமாற்றங்களையும் அவனையே உணரச் செய்து, இதயத்தைத் தூய்மைப்படுத்தும் துன்பல்ல. மாறாக அந்தத் தவறுகளையே தான் செய்த தியாகமாகக் கருதுவது, அவனது இதயத்தை மேலும் கறைப்படுத்திக் காரியவாத வாழ்க்கையில் பீடு நடை போட வைப்பதெல்லாம் எப்படி நியாயமாகும்? இது ஒரு மனிதனின் வாழ்க்கையில் நடக்கின்ற போராட்டத்தில் சுயநலனையே முன்னிறுத்துகிறது. இத்தகைய மனிதர்கள் தான் லஞ்சம் வாங்குவதும், லஞ்சம் கொடுத்து மெடிக்கல் சீட் பெறுவது, அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு ஏமாற்றுவது, தெருப்பிரச்சினைக்கே வீட்டுக்கதவை சாத்துவது முதலான காரியங்களைக் குற்ற உணர்வின்றி நியாய உணர்வோடு செய்பவர்கள்.


எனவே சண்முகமும், அவனது கையறு நிலையின் அவ்லத்தை இதயத்தில் சுமந்த சண்முகங்களாகிய நாமும், இன்னமும் அப்பாவிகள் என்று கருதிக் கொண்டுருந்தால் குற்றவாளிகள் என்ற பட்டியலில் ஏதோ ஒரு முகாந்திரத்தில் சேருவதற்குக் காத்திருப்போம். "நாம் அப்பாவிகளல்ல, கடைந்தெடுத்த காரியவாதிகள்" என்று சுய விமர்சனம் செய்துக் கொள்ளும் நேர்மையிருந்தால் எந்தக் குற்றவாளிப் பட்டியலிலும் சேராமல் போராடுவோம்; வாசகர்கள் பரிசீலிக்கட்டும்




































































புதுப்பேட்டை: நிழல் உலகைக் கொண்டாடும் திரை நிழல்

Labels:

Tuesday, April 03, 2007

"மரத்துப் போதல் "




"என்ன மாமா கீத்து வுடுறீங்களா?" விசாரித்துக் கொண்டே ராமசாமி மாமாவை நெருங்கினேன். "ஆ....வா சரவணா...எங்க வயித்துக்கு சோத்த வுடுறதே பெரிய பாடாயிருக்கு.இதுவ எங்கேயிருந்து கீத்த வுடுறாது. எல்ல கீத்தும் மக்கிப் போயி உளுத்து மொட்டுது. நம்ம கிருஷ்ண மூர்த்தி வைக்கலு குத்தான். அதான் பரப்பிவுட்டுகிட்டு இருக்கன். அப்புறம் ஊருல பாப்பா , கொளந்தையெல்லாம் ந்ல்லா இருக்கா ? "



"உக்காரு. என்ன மண்ண கெடக்கேன்னு பாக்குறியா? எல்லாம் இந்த உள்ளார வலை வச்சிகிட்டு தெனம் ஒரு கூடை மண்ண நோண்டி தள்ளுது . உனக்கும் எனக்கும் இந்த வூட்ல ஒண்ணும் இல்லன்னு தெரியும். எலிக்கும் பூனைக்கும் தெரியுதா? பூனை மேல பிரிகட்டி அடிக்குது. எலி கீழே வேல பாக்குது. எத்தன மொறதான் பொகை வச்சி பிடிக்கிறது. சனியன் அத்து போவனாங்குது. மூட்டை மூட்டையா நெல்லு வெச்சிருக்குறவன் வீட்லகொட இத்தன எலி நம்மளகத்துது. ஹா...ஹா... "தனது தூய சோகமாக எப்பொழுதுமே சொல்லியது கிடையாது இராமசாமி மாமா.



இந்த வருஷம் ஒரு பவுனு வாங்கியே ஒரு நல்லது கெட்டது செஞ்சிக்கல என்று புதிதாக எதையும் அடைய முடியாத சோகத்தைப் பிறரைப் பாதிக்கும் வண்ணம் உடுக்கமாகச் சொல்லும் நடுத்தர வர்ககப் பேர்வழிகளுக்கு மத்தியில் விவசாய வாழ்க்கையின் சோகத்தை விளையாட்டகச் சொல்லும் மாமாவின் பேச்சு எனக்கு வியப்பாக இருக்கும்.



"என்னமோ போ சரவணா...எங்க தாத்தா , அப்பாரு, இப்ப எங்ககாலம். இன்னமும் இந்த மண்ணு தரய மாத்த முடுயல. நாங்களும் மூணு தலமொறய உழை உழைன்னு உழைக்கிறோம். இந்த வீட்ட பிரிச்சும் வெல பார்க மூடியல, நம்ம ஒடம்ப பிரிச்சும் வேலை பாக்க முடியல. என்ன சரவணா சிரிக்கிற, ஒரு ஆறு மாசமாகவே கழித்துல விலி கொட டொடைன்னு டொடையிது. டாக்டாரு வேற பாரம் வெக்ககூடாதுன்னு சொல்லிட்டாரு. அமயஞ்சமயத்துக்கு நாத்துகட்டு தூக்கக் கூப்புடுவானுவ, இப்ப அந்த வேலயுங் கெடையாது. ஏதாவது தலைல தூக்குற மாதிரி வேலையிருந்தா, பசங்க கூப்புடவும் மாட்டேங்குறானுவ. ஏதோ கை, கால், நரம்பு இதுக்கு தனி வைத்தியம் இருக்காமல, எங்க வருமானம் வந்து ஒரு நோட்டை தேத்திகிட்டுத்தான் போய்ப் பாக்கனும்.


பாரு நாம்பாட்டுக்குப் பேசிக்கிட்டே இருக்குறேன். டீத் தண்ணி குடிக்கிறியா? உங்க அத்த கள்ளி ஒடைக்கப் போயிருக்கு. குழந்தை கொல்லபக்கம் நிக்கிறான்னு நெனக்கிறேன்." - எழுத்திருக்கப் போன மாமாவை கையைப் பிடித்து, " நீங்க ஒக்காருங்க, நான் எதுத்த வீட்டு குமார வுட்டு வாங்கி வரச் சொல்றேன்" என்று வலுக்கட்டாயமாக அவரை உட்கார வைத்தேன்.


முன்னமாதிரி கிராமத்துல ஒரு வேலையும் இல்ல சரவணா. நானும் பொட்டபுள்ளைய பெத்துட்டமேன்னு ஒரு வேலையும் பாக்கி வெக்கிறதில்ல. கும்மோணம் போயி காய்கறி வாங்கிட்டு வந்தும் யாவாரம் பண்ணி பாத்துட்டேன், நம்மள மாதிரிதான் ஊரு சனமும்? எங்க உருளக்கிழங்கை வாங்குறதுன்னு அதது பேசாம புளித் தண்ணிய கரைச்சி பொழுத ஓட்டிகிட்டு ஒருக்கு . வாழக்கொல்ல பத்துற வேலைக்கி இங்கேர்ந்து கத்ராமங்கலம் வரைக்கும் நடந்தே போயிருக்கேன் பாரு. நம்மதான் நாலெழுத்து படிக்காம கண்ணவிஞ்சி பெய்ட்டோம். இந்த காலத்து பொட்ட புள்ளைக்கி பவுனப் போட்டு அழகு பாக்குறத விட படிக்க வைக்கிறது நல்லதுன்னு படுது. வளர வளர அவள் நல்லவிதமா ஒருத்தன் கையில் பிடிச்சி குடுக்குணும்னா நாலு படியே சொல்றன் இந்த புள்ளைக்காகத் தான் உயிர வெச்சிகிட்டு வாழணும்னு தோணுது. இல்லனா இருக்கற நெலமைக்கி நாமள்ளாம் இருந்து என்னாவப் போவுதுன்னு தோணுது.


மாமா பேசிக் கொண்டே போதும் போது ஒரு இரண்டு மூன்று முறை அவருக்குப் பின்பக்கத்திலிருந்து ஏழு வயது மலர்க்கொடி அவர் தோளில் தொடர்ந்து தட்டிக் கூப்பிட்டுக் கொண்டே இடிந்தது. துயரத்தில் என்ன சொல்வதென்று வாயடைத்துக் கிடந்த நான் ஒரு கட்டத்துக்கு மேல் குழந்தை கூப்பிருவதைச் சொல்ல வேண்டிய நிலை வந்தது. "என்ன மாமா பாப்பா அப்பயிலேர்ந்து தோள்ல அடிச்சி கூப்பிட்டுகிட்டே இருக்குறா....முதல்ல அத என்னான்னு கேளுங்க. கொளந்த கைபடறது தெரியல," வெடுக்கெனத் திரும்பிப் பார்த்தவர்," ஆட ஆமா சரவணா.ஒரு மாசமா டீக்கடைக்கி தண்ணி துக்கி ஊத்தறனா அந்த எடமே மரத்துப் போச்சி அதான். என்னமோப்பா நீங்கள்லா, ஒரு வழியா ஊரவுட்டு நவுந்துட்டீங்க, நாங்க எங்க போறது? யாரு இடுக்கா?"

மாமாவின் தோள் மரத்துப் போனதை விட இப்படி கிராமத்தில் மாட்டிக் கொண்டவிவசாயிகளுக்காக ஏதுமே செய்யாமல் எனது வாழ்க்கை மரத்துப் போயிருக்கும் கொடுமை பயங்கரமாக இருக்கிறது எனக்கு. உங்களுக்கு?


சுடர்விழி

Labels: ,