Saturday, April 07, 2007

"அழகி" அற்ப மனிதனின் அவலம் !


"சண்முகம் ஒன்றும் புரட்சிக்காரனல்ல; உங்களையும் என்னையும் போன்று குறைகளும் பலவீனங்களும் கொண்ட ஒரு நல்ல மனிதன் - அவ்வளவுதான்" என்று ரசிக சண்முகங்கள் வாதிடலாம். "சண்முகம் ஏன் சராசரி மனிதனாகச் சித்தரிக்கப்பட்டுயிருக்கின்றான்" என்பதல்ல நம் கேள்வி. "இந்த சராசரி மனிதனின் அற்பத்தனங்கள் இடிந்துரைக்கப் படாமல் அனுதாபத்துடன் சித்தரிக்கப்படுவது ஏன்" என்பதுதான் கேள்வி.


அந்தக் கலக்கமும் , வேதனையும் ஒரு மனிதனின் தவறுகளையும், தடுமாற்றங்களையும் அவனையே உணரச் செய்து, இதயத்தைத் தூய்மைப்படுத்தும் துன்பல்ல. மாறாக அந்தத் தவறுகளையே தான் செய்த தியாகமாகக் கருதுவது, அவனது இதயத்தை மேலும் கறைப்படுத்திக் காரியவாத வாழ்க்கையில் பீடு நடை போட வைப்பதெல்லாம் எப்படி நியாயமாகும்? இது ஒரு மனிதனின் வாழ்க்கையில் நடக்கின்ற போராட்டத்தில் சுயநலனையே முன்னிறுத்துகிறது. இத்தகைய மனிதர்கள் தான் லஞ்சம் வாங்குவதும், லஞ்சம் கொடுத்து மெடிக்கல் சீட் பெறுவது, அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு ஏமாற்றுவது, தெருப்பிரச்சினைக்கே வீட்டுக்கதவை சாத்துவது முதலான காரியங்களைக் குற்ற உணர்வின்றி நியாய உணர்வோடு செய்பவர்கள்.


எனவே சண்முகமும், அவனது கையறு நிலையின் அவ்லத்தை இதயத்தில் சுமந்த சண்முகங்களாகிய நாமும், இன்னமும் அப்பாவிகள் என்று கருதிக் கொண்டுருந்தால் குற்றவாளிகள் என்ற பட்டியலில் ஏதோ ஒரு முகாந்திரத்தில் சேருவதற்குக் காத்திருப்போம். "நாம் அப்பாவிகளல்ல, கடைந்தெடுத்த காரியவாதிகள்" என்று சுய விமர்சனம் செய்துக் கொள்ளும் நேர்மையிருந்தால் எந்தக் குற்றவாளிப் பட்டியலிலும் சேராமல் போராடுவோம்; வாசகர்கள் பரிசீலிக்கட்டும்




































































புதுப்பேட்டை: நிழல் உலகைக் கொண்டாடும் திரை நிழல்

Labels:

1 Comments:

Blogger கோபா said...

அரிப்புகள் பலவிதம். ஒவ்வொன்றும் ஒரு விதம்!


எங்க ஊர் பக்கம் நாயைப் பத்தி சொல்லும் போது இப்படிச் சொல்லுவாங்க - "வயத்த வலிச்சாலும் நாய் காலத் தான் நொண்டும்" என்று..

//சினிமாவை வைத்து அரசியல் ஆதாயம் தேடுவது எத்தனை ஆபத்தானது என்பதற்கு மருதையனின் விமர்சனமே உதாரணம்d:-) இந்த மாதிரி கலைஞனின் கற்பனையில் அரசியல் பண்ணும் விமர்சனங்களை புறக்கணிப்போம்.//

மேலே அடைப்புக்குள்ளே இருப்பது அப்படிப்பட்ட ஒரு நொண்டி அடித்தல் தான்! இந்த டாலர் தாசர்களுக்கும், பார்ப்பனிய பன்னாடைகளுக்கும்எப்போதெல்லாம் அரிப்பு வருதோ அப்போதெல்லாம் முற்போக்குவாதிகளையும், இடதுசாரிகளையும் வம்பிழுத்துத் தான் தங்கள் அரிப்பை ஆற்றிக் கொள்கிறார்கள். எதாவது பேசும் முன்ன யோசித்து பேசுவோமே, இல்ல சொல்ற தகவல்கள் உண்மையானது தானா என்றெல்லாம் யோசிப்பதே கிடையாது.. அப்படியே குன்ஸா ஒரு குத்து விட வேண்டியது.. அப்புறம் என்ன.. அல்லக்கை நொல்லக்கை அல்பைக் கூட்டம் ஓடோ டி வந்து "தல போல வருமா?"என்கிற ரேஞ்சில் மாத்தி மாத்தி முதுகு சொரிந்து கொள்ள வேண்டியது தான்!

இப்பக் கொஞ்ச நாளாக தமிழ்மணத்தில் எழுதும் பதிவர்களில் ஏகாதிபத்திய / பார்பனிய அடிவருடி கூடாரம் பலத்த அடி வாங்கிக் கொண்டிருப்பது நாம் எல்லோரும் பார்த்துரசித்து வரும் நகைச்சுவைக் காட்சிகள் தான். இந்த நிலையில் அதில் ஒரு சிலர் 'சீச்சீ இந்தப் பழம் புயிக்கும்' என்கிற ரேஞ்சில் ஒரு காமக்கதை மன்னன் மாட்டியசம்பவத்தை முன்னிட்டு ஸ்டேட்மெண்ட் விட்டு எஸ்கேப் ஆகிவிட்டனர். ( இதுல இன்னொரு 'காம'டி என்னான்னா.. ஓடிப்போன எவனுமே அந்த டாபர் பண்ணது தப்பா ரைட்டான்னுவாயத் தொறந்தா மாதிரி தெரியலை).. போதாக்குறைக்கு போன வாரம் மின்னிய நட்சத்திரமும் சிவப்பாய் மிளிர்ந்தது. இது வேறு வெந்த புண்ணில் விரலைப் பாய்ச்சியமாதிரி ஆகிவிட்டதா? இப்படி சகட்டுமேனிக்கு கண்டபடி உள்-அரிப்பெடுத்துக் கொண்டிருப்பதால், அதை எப்படி வாய் விட்டுச் சொல்வது என்று தெரியாமல் நொண்டுகிறார்கள்.

சரி இப்ப மேட்டருக்கு வரலாம் - கலை என்பதும் கலைஞர்கள் என்பவர்களும் இந்த சமூகத்தில் தனித்த ஒரு அங்கமா? என்பதற்கு தெளிவான எந்த ஒரு பதிலோ,விளக்கமோ டாலரின் பதிவில் இல்லை .அதே போல் அந்த விமர்சனக் கட்டுரையின் எந்த ஒரு அம்சத்தையும் மறுத்தும் எழுதவில்லை ( அப்படி எழுதி விட முடியாது என்பது இன்னொரு அரிப்பு ;) ) அதற்கு பதில் கலையில் அரசியலா? அய்யய்யோ எல்லாம் போச்சே என்கிற ரீதியில் தான் அந்தப் பதிவு எழுதப் பட்டுள்ளது என்பதால் அதற்கு பதிலளிக்கும் விதமாகவே நம்முடைய எதிர்வினையும் இங்கே அமைகிறது.

ஒரு சமுதாயத்தில் இருந்து வரும் எந்த ஒரு படைப்பும் அதன் பிரதிபலிப்பு இல்லாமல் இருக்க முடியாது. எந்த ஒரு கலைஞனாய் இருந்தாலும் அவன்தான் சார்ந்த வர்க்கத்தின் அடிப்படையில் தான் சிந்திக்க முடியும். கலைஞன் எவனும் சமூகத்தின் தனித்த அங்கமல்ல. மேலும் சினிமா ஊடகங்கம் என்பது பலரால் பார்க்கப்படும் ஒன்று. கதையில் வரும் ஒரு கதாபாத்திரத்தைப் பார்த்து ரசிகன் அழுகிறான் என்றால், அந்த சூழ்நிலையிலோ பாத்திரப் படைப்பிலோதன்னுடைய பண்புகளில் ஏதோ ஒன்றைப் பார்க்கிறான். தன்னை அந்த வித சூழலுக்குப் பொருத்திப் பார்க்கிறான். திரையரங்கை விட்டு வெளியே வரும் ரசிகன் அதனால்பாதிக்கப் பட்டு ஏதோ ஒரு கருத்தை எடுத்து வருகிறான். இவ்வாறான நிதர்சன நிலைகளில் கலைகளில் வெளிப்படும் அரசியலையும் அது எவருக்குசார்ப்பாக இருக்கிறது என்பதை வெளிப்படுத்தியாக வேண்டியுள்ளது. அதன் அரசியலையும் விமர்சிக்க வேண்டியும் இருக்கிறது.

ஒரு படைப்பாளி தனது படைப்பின் ஊடாக ரசிகனை / வாசகனை எந்த காரணங்களுக்காக ( அல்லது கதையில் வரும் எந்த வித சூழ்நிலைகளுக்காக) அழ வைக்கிறான்,சிரிக்க வைக்கிறான், கோபப்பட வைக்கிறான் என்பதும் கதையின் ஊடாக எதை முன்னிலைப் படுத்துகிறான் என்பதும் கவனத்திற்குரியது. அதில் தான் அவன் எந்த வர்க்கத்தின் சார்பாக இருக்கிறான் என்பதும் அதுபோன்ற காட்சிகளில் கிறங்கிப் போகும் ரசிகக் கூட்டங்கள் எந்த வர்க்கத்துக்கன பண்புகளைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்பது வெளிப்படுகிறது.

அப்புறம் நம்ம டாலர் செல்வனின் மேற்படி பதிவின் இன்னொரு வரியில் இப்படிச் சொல்கிறார் - "சண்முகம் நல்லவன்! ஒருத்தன் அப்பாவி மிடில்க்ளாசா இருப்பதில் எந்த தப்புமில்லை"

சண்முகத்தின் ஊசலாட்டங்கள் அதே பதிவில் இருந்த கட்டுரையில் சிறப்பாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. அதனை எந்த விதத்திலும் மறுத்து வாதம்வைக்காமல், "சண்முகம் நல்லவன்" என்று சர்டிபிகேட் கொடுப்பது ஒரு பக்கம் இருக்கட்டும்; அதன் பின்னே ஒட்டிக் கொண்டு "ஒருத்தன் அப்பாவிமிடில்க்ளாசா இருப்பதில் எந்த தப்புமில்லை" என்னும் வரிகளில் தான் டாலர் செல்வன் தான் யாருக்கு சார்ப்பாக சிந்திக்கிறார் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார். இது கூட கொஞ்சம் மங்கலான வெளிச்சம் தான் - இதை விட முன்பு போலியான வருமைக் கோட்டை முன்வைத்துவிவாதித்த போது இன்னும் பளிச்சென்று 100 வாட்ஸ் வெளிச்சத்தில் தான் யாருக்கு சார்பானவர் என்று காட்டினார்.

அப்புறம் செல்வண்ணனுக்கு ஒரு வார்த்தை - நாங்க எப்போதும் எங்கள் கருத்துக்களை டிபெண்ட் செய்து விவாதிக்க தயார்! உங்களுக்கு எரிச்சல் இருந்தா நேரடியாவே காட்டலாம். அத விட்டுட்டு இப்படி சப்பையா பதிவு போட்டு "நொண்டியடிக்க" வேணாமுங்கண்ணா

எழுதியவர் rajavanaj

http://vanajaraj.blogspot.com/2007/04/blog-post_30.html

10:55 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home