Tuesday, March 20, 2007

சில்லறை வணிகத்தில் ரிலையன்ஸ் ?

கோயம்பேடு மார்கெட் வியாபாரிகள் - தொழிலாளர்களின் வாழ்வை சூறையாடும் ரிலையன்சை விரட்டியடிப்போம்


மக்களுக்கெதிரான கொள்கை மூலம் :

உழைப்பில் ஈடுபடும் மக்களுக்கு சேவைத் துறையாக அளிக்கப்பட வேண்டிய கல்வியும் (அறிவை மேம்படுத்தவும், அறிவியல் தொழில் நுட்பத்தை கற்று தரவும்), மருத்துவமும் ( உழைப்பின் போது பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு மருத்துவம் அளித்து மீண்டும் உற்பத்தில் ஈடுபடுத்த ) இன்று பணமுதலைகள் கொள்ளை லாபம் சம்பாதிக்க கூடிய தொழிலாக மாறி விட்டது. இது தனியார்மயம்.

நம் நாட்டுக்குத் தேவையான உணவு பொருட்கள் எவ்வளவு என்ற திட்டமிட்ட விவசாய உற்பத்தி, தேவை பொறுத்து இறக்குமதி என்பதை அழித்து தனியார் லாபத்தை அடிப்படையாக கொண்ட விவசாய உற்பத்தி,எதை வேண்டுமானாலும் இறக்குமதி செய்யலாம் என்று மாறிவிட்டது. இது தாராளமயம்.

நம் நாட்டுக்கு உள்ளேயே இன்னொரு தனி நாடாக சிறப்பு பொருளாதார மண்டலம் என்ற பெயரில் பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்களை பறித்து; இந்தியனும் & இந்திய சட்டங்களும் நுழைய முடியாத பகுதிகளை உருவாக்கி பன்னாட்டு நிறுவனங்களுக்கு கொடுப்பது, லட்சக்கனக்கான சிறு வியாபாரிகளுக்கும், சிறு காய்கறிக் கடைக்காரர்களுக்கும் வாழ்வாதாரமாக விளங்கும் சில்லறை வணிகத்தில் ரிலையன்ஸ், வால்மார்ட் போன்ற கம்பெனிகளை நுழையவிட்டு ஒட்டு மொத்த சில்லறை வணிகத்தையும் அழித்து ஒருசிலர் லாபம் அடையக்கூடியதாக மாற்றுகின்றனர். இது உலகமயம்.

கோயம்பேடு மார்கெட் வியாபாரிகள் -தொழிலாளர்களின் சூறையாட வரும் கொலைக்கருவியும் இதுதான்.


ஊர்வலம், உண்ணாவிரதத்துக்கு அடங்கமாட்டான் ரிலையன்ஸ் கம்பெனி. சட்டம், போலிஸ் , கோர்ட் எல்லாம் அவனுக்குக் காவலாளி !
இந்த வழிமுறைகளை நம்புவதற்கு என்ன அடிப்படை இருக்கிறது ?

களத்திலிறங்கி அவன் கடையை முற்றுகையிடுவதை தவிர வேற வழியில்லை.

சிறு வணிகர்கள், தரைக்கடை, தள்ளுவண்டி வியாபாரிகளை ஆதரிப்போம் !
ரிலையன்ஸ், டாடா, பிர்லா, வால்மார்ட்- போன்ற
பெருமுதலாளிகளையும், பன்னாட்டு முதலாளிகளையும் புறக்கணிப்போம் !தஞ்சை இசை விழாவில் தோழர் மருதையன் உரையிலிருந்து,

ரிலையன்சு போன்ற உள்நாட்டு களவாணிகளுக்கும் ,வால்மார்ட் போன்ற பன்னாட்டு கம்பெனிகளுக்கும் சில்லறை வணிகத்தின் கதவை திறந்துவிட்டிருக்கிறது அரசு. ரிலையன்சு கடையில் 'சீப்'பாகக் கிடைக்கிறதாம். முலாயம் சிங் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களை இலவசமாக கொடுத்தால் ஏன் அவன் 'சீப்'பாக கொடுக்கமாட்டான். என்ன ஒரு பத்து ரூபாய் குறைத்து கொடுத்து விடுவானா? நீங்கள் யோசிக்கவேண்டும்.

உங்கள் தெருமுனையில் உள்ள அண்ணாச்சிக் கடையில் கவனித்திருப்பீர்கள். அந்த கடையில் ஒரு குடும்பமே உழைத்துக்கொண்டிருக்கும். காலை நான்கு மணிக்கு சந்தைக்கு சரக்கெடுக்க செல்வதில் ஆரம்பிக்கிறது அவனது நாள். பகல் முழுதும் உழைத்துக் களைத்து அவர்கள் உறங்கச் செல்லும் போது இரவு பன்னிரெண்டாகிறது. இவ்வளவு உழைக்கிற அந்தக் குடும்பம் கோடிகோடியாக சேர்த்து விட்டதா என்ன?? யோசியுங்கள்.. அந்த அண்ணாசிக் கடையில் எத்தனை நாள் கடன் வைத்திருக்கிறீர்கள்? எத்தனை முறை 'புளி சரியில்லை' என்று சண்டை போட்டிருப்பீர்கள்? எத்தனை விசேஷங்களுக்கு அழைப்பு விடுத்திருப்பீர்கள்?? இன்று விலை மலிவாக கிடைக்கிறதென்று கோடிகளைச் சேர்த்துவைத்திருக்கிற அந்த கொள்ளையர்களுக்கு இன்னும் கொஞ்சம் கொட்டிக்கொடுக்கப் போகிறீர்களா? விலை அதிகமானாலும் எளியவனான நம்மவனையே ஆதரிக்க வேண்டுமென்ற எண்ணம் நமக்கு எழ வேண்டாமா?


Related Articles:

கோடீசுவரக் கொள்ளையன் ரிலையன்ஸ் அம்பானியை விடாதே, விரட்டியடி!!!

அழிவை நோக்கித் தள்ளப்படும் சில்லறை வியாபாரம்

மறுபடியும் காலனியாகுது தேசம்! மறுமலர்ச்சியடையுதாம் விவசாயம்.

இந்தியாவின் ஜனநாயகமும் - விவசாயமும், சிறு தொழில் துறையும்

தேசத் துரோக அடிவருடிகளும், சுதந்திர வர்த்தகமும் - உலகமயம்!!

கோக்கை அடி கொண்டாடு..!!

தனியார்மயம் தாராளமயம் உலகமயமும் - மறுகாலனியாதிக்கமும்


5 Comments:

Blogger அசுரன் said...

நல்ல கட்டுரை தோழர்,

தலைப்பை சில்லறை வணிகம் என்ற வரிகள் வருமாறு வையுங்கள். அல்லது மறூகாலனியம் குறித்து இங்கு பதிக்கப்படும் பல கட்டுரைகளில் ஒன்றூ என்று நினைத்து விடுவார்கள்.

தமிழ்மணத்தில் இணைய வில்லையா நீங்கள்? உங்களது கட்டுரைகள் தமிழ்மணத்தில் வருவதில்லையே?

அசுரன்

3:43 PM  
Anonymous Anonymous said...

ஓரம் ஓரம் ஓரம் !!!
அவனை (ரிலையன்சை) ஓட்ட வேனும் தூரம் !!!
முதுகு சுமக்கும் பாரம் !!!
இது வாழ்க்கையோட ஈரம் !!!

3:11 PM  
Anonymous Anonymous said...

sathipukaaka
------------
இன்னா தலிவா யாரு இன்னா கேட்டாலும் ஒரே
மாரி சொல்லிகினே கீர அரசு பால்ராஜ் கேட்ட
கேள்விக்கு பதிலே சொல்லாம எஸ்கேப்பு ஆயிட்ட.

அப்பால
நான் தான் உண்மையான
கம்னிஸ்டு,கம்னிஸ்டுனு வாயி வலிக்க
நீயே கத்திகினுருக்க,
அங்க இன்னாடானா
ஒரு அரை டவுசரு கம்யூனிச்டுகளயும்,
மர்க்சையும் திட்டிக்கினுருக்கான்,
வேலைக்காகாதுன்ரான்,
ஒன்னான்ட இத்த
அன்னிக்கே லெனின் தோழரும் சொல்லிக்கினாரு
ஆனாலும் நீ இத்த கண்டுக்கவே இல்லியே
இன்னா தலிவா மேட்டரு.
ஒன் வாய கொஜ்சம் தொரயேன்
யெல்லாரும் காத்திகினுருக்காங்க

12:39 PM  
Anonymous Anonymous said...

சந்திப்புக்கு
-----------
ஏன் சார் உங்களுக்கு கொஞ்சம் கூட
வெட்கமாக இல்லயா ?

ஏன் ?

என்று கேட்கிறீர்களா !

அந்த அரை டவுசர் நீல்ஸ் கட்டுரைக்கு பதில்
கூறுங்கள் என்று லெனின் என்கிற தோழர் உங்களிடம்
கேட்டாரே உங்களுக்கு நினைவு இல்லையா ?

ஆனால் நீங்கள் அவருடைய கேள்விக்கும் பதில் கூறவில்லை,
அரை டவுசரின் கட்டுரைக்கும் பதில் கூறவில்லை.
ஏன் ?
எங்காவது காட்டுக்குள் போய் பதுங்கிக்கொண்டீர்களா ?

சரி பரவாயில்லை வெளியே வாருங்கள்

நெஞ்சில் துனிவுள்ள வீரர்கள்,
தோழர் லெனினுடைய மாணவர்கள்,
கம்யூனிஸ்டுகள் பதில் கூறியிருக்கிறார்கள்
பாருங்கள்.

சரி,சரி வெட்கப்படாமல் வந்து கொஞ்சம்
எட்டிப்பாருங்கள், அப்படியே
உங்களுடைய கருத்துக்களையும் கூறுங்கள்

12:15 PM  
Anonymous Anonymous said...

ச்சீ,ச்சீ வெட்கக்கேடு

கூலிக்கு மாரடிக்கும் சந்திப்பு !

வெட்கக்கேடு, வெட்கக்கேடு


பாவெல்

12:30 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home