Friday, May 18, 2007

சிதம்பரம் கோயிலில் தேவாரம் பாட மீண்டும் அனுமதி மறுப்பு


நேற்று(மே 17) மனித உரிமை பாதுகாப்பு மையம் மற்றும் தமிழ் அமைப்பினருடன் சிவனடியார் ஆறுமுகச்சாமி மீண்டும் சிதம்பரம் நடராசர் கோயிலில் தேவாரம் பாட நுழைய முயன்ற போது போலீசார் தடுத்து நிறுத்தி அனைவரையும் கைது செய்தனர்.
Related :

Labels: ,

3 Comments:

Blogger Haran said...

ஜாதியின் பெயரால் மனிதரை துன்புறுத்துபவர்கள் கேவலமானவர்கள்... அவர்களுக்காக அனைவரும் இறைவனிடம் கேட்டுக் கொள்ள வேண்டியது, மனதால் தாழ்ந்திருக்கும் இவர்களுக்கு நல்ல ஒரு புத்தியைக் கொடு இறைவா என்பதே.

அந்தக் காலம் தொட்டு இந்தக் காலம் வரை நாம் ஆரியருக்கு அடிமை போன்றே வாழ்கின்றோம்... நமது வரலாறுகளையே திரிபு படுத்தி அதனையே தமக்குச் சாதகமாக மாற்றி எழுதி... புராணங்களிலும் இதிகாசங்களிலும் தமிழர்களை இராட்சதர்கள் எனச் சித்தரிக்கின்றார்கள்.

என்ன கேவலமான விடயம் என்றால் நாமே அவற்றை வாசித்து, நாமே ஆமோதித்து அவர்களுடைய நயவஞ்சகமான நாசகார வேலைகளுக்குத் துணை போகின்றோம்...

இந்திய அரசினால், இன்னும் ஏன் இந்தியா பற்றிய ஆய்வுகள் பெரும்பான்மையாக நடை பெறவில்லை... ஏன் குமரிக் கண்டத்தினைப் பற்றி எவ்வளவோ இலக்கிய நூல்களில் எடுத்துக் கூறப் பட்டும் அது சம்மந்தமாக எவ்வித ஆய்வினையும் இந்தியா நடத்தவில்லை?? இவை அனைத்தும் நடந்தால், தமிழரே அனைத்துக்கும் ஆதியானவர்கள் என்பது தெரிந்து விடும், ஆகவே தமது சாயம் வெளுத்து எம்மீது தாம் பூசிய கரி தம்மீது பூசப்படும் என்ற பயமே.

நான் ஈழத்தவன்... என்னைப் பொறுத்தவரையில் ஈழம் எமக்குக் கிடைத்த பின்பு எமது வரலாறினை ஆதாரங்களுடன் உலகிற்குச் சொல்லத் தொடங்குவோம். நிச்சயமாக அது நடக்கும் என்பது எனது நம்பிக்கை.

11:40 AM  
Blogger அசுரன் said...

இந்த வழக்கினுடைய தீர்ப்பு நகல் படித்தீர்களா?

அப்பட்டமான மனுவாதம் அது (மனு)நீதிமன்றம் என்பது மிகச் சரியே

கேவலத்திலும் கேவலம் தமிழ்நாட்டில் தழிழில் பாடு என்று ஒரு கோசம் அதை செய்ய ஒரு போராட்டம்....

குஷ்புவின் கற்பு குறித்து விளக்குமாறுடன் போராடிய சிறுத்தைகளும், மரம் வெட்டிகளும் எங்கே காணோம்?

இல்லாத பொய் கற்புக்கு போராட்டம் நடத்திய மாலடிமைகள் இருக்கும் தமிழின் அவமானத்திற்க்கு எங்கே போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்?

சிதம்பரம் கோவிலின் முன்னால் ஒரு விளக்குமாறு போராட்டம் நடத்த வேண்டியதுதானே?

தமிழ் தமிழ் சார்ந்த அனைத்திற்க்கும் மொத்தமாக குத்தகை எடுத்து பார்ட்னர்ஷிப் பிசினஸ் தொடங்கிய இவர்களின் ஒப்பந்தத்தில் இந்த விசயங்கள் விடுபட்டுவிட்டனவோ?


அசுரன்

5:10 PM  
Blogger கோபா said...

test

8:57 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home