Monday, June 04, 2007

இந்திய விவசாயிகள்- வெடிக்கக் காத்திருக்கும் எரிமலைகள்


"வழக்குப் போட்டு என்னைச் சிறையில் தள்ளும் இவர்களின்(ஜென்மி-ஜமீன்தார்களின்) கொடுமையை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது என்று உணர்ந்தேன். தியாகிகளாக மரணம் தழுவப் பலர் ஆயத்தமாக இருப்பதை அறிந்தேன். நான் அவர்களுடன் இணைந்து இவர்களின் கொடுமைகளுக்கெல்லாம் ஒரு முடிவு கட்டுவேன்" - மீள முடியாத கடனில் மூழ்கிய குத்தகை விவசாயி- மாப்ளா கலகத்தில் பிடிபட்ட அம்பாத் அய்த்ரோஸின் வாக்குமூலம் - 16 மார்ச் 1896.

காலங்காலமாய் தங்களை ஒட்டச்சுரண்டி வந்த நம்பூதிரி நாயர் ஜன்மிகளுக்கெதிராக கிளர்ந்தெழுந்து போரிட்டுத் தொடர்ச்சியாக வீரச்சாவெய்தினார்கள் மாப்ளா விவசாயிகள். நூறாண்டுகளுக்கு முன் எக்காரணிகள் மாப்ளாக்களின் கோபத்தைக் கிளறிப் போரிடத் தூண்டியதோ அதே காரணிகள் முன்னைக்காட்டிலும் இன்று துல்லியமாக மேலெழுந்து வந்து கொண்டுள்ளன. நாடெங்கும் இன்று விவசாயிகள் வெடிக்கக் காத்திருக்கும் எரிமலையின் நிலைமையில்தான் உள்ளனர்.

உலகமயமாக்கலின் கோரப்பற்களுக்கிடையில் தினந்தினமும் அரைபட்டுக் கொண்டுள்ளது இந்திய விவசாயியின் வாழ்க்கை. ஆந்திர மாநிலம் திம்மராஜப்பேட்டையில் 1990 வரை 12 ஏக்கரில் திராட்சை பயிரிட்டு நல்ல நிலைமையில் இருந்த நல்லப்ப ரெட்டி 10 ஆண்டுகளுக்கு முன் ஆந்திர கிராமின் வங்கியில் விவசாயத்துக்கு கடன்வாங்கியிருந்தார். 1970 வரை சொந்தமாய் லாரி வைத்து தொழில் நடத்தி வந்த இவர், திடீரென்று விவசாயம் செய்து பார்க்க இறங்கிநார். இவரின் நிலைமை உலகமயமாக்கல் ஆரம்பித்த 1990களுக்கு பின் தொடர் துயரமாகி விட்டது. வட்டி மேல் வட்டி சேர்ந்து கடன் சுமை எகிறிய நிலையில் நல்லப்ப ரெட்டி, 34 ஆயிரம் வரை கட்டி கடனை அடைக்க முயற்சி செய்தார். ஆனால் வங்கியோ ஒரு லட்சத்தை இவரிடம் எதிர்பார்த்தது. தொடர்ந்து வறட்சியாலும், விளைபொருளுக்கு விலையின்மையாலும் நஷ்டமடைந்த நல்லப்ப ரெட்டி ஒரு லட்சத்தை செலுத்த இயலாததால் அவரை சிறைக்குள் தள்ளியது வங்கி.

லட்சக்கணக்கான விவசாயிகளின் நிலைமையும் நல்லப்ப ரெட்டியியைப் போலவேதான் உள்ளது. பத்து வருசத்துக்கு முன்பு, இடுபொருட்கள் விலை உயர்வாலும், வங்கிக்கடன் மறுக்கப்பட்டதாலும் அவர் நஷ்டம் அடைந்தார். "தண்ணீர், மின்சாரம் போன்றவை விலை ஏறியதால் நிலைமை ரொம்பச் சிக்கலாகி விட்டது". பிறகு தண்ணீரும் வற்றி விட்டது. "பத்து ஏக்கர் நிலத்தில் நாலைந்து வருடங்களில் 32 முறை போர் போட்டேன். ஒன்றும் பலனில்லை". இதே வட்டத்தில்தான் சந்திரசேகர் ரெட்டி என்பவர் 2004 ஆம் ஆண்டு 4 போர்களை சுடுகாட்டில் இறக்கி 8 கிமீ தூரத்துக்கு குழாய் போட்டு தண்ணீர் கொண்டு வர முயன்றார். அந்தளவுக்கு நிலத்தடிநீர் வறண்ட பகுதி அது. (ஜூலை 18, 2004, சாய்நாத் கட்டுரை) பிறகு அவரும் செத்துப்போய்விட்டார். அவர் போட்ட அந்த சுடுகாட்டுப் போர்களில் இரண்டில் இப்போது தண்ணீர் வருகிறது. போர் பதித்தவரோ சுடுகாட்டுக்குப் போய்விட்டார்.

நல்லப்பரெட்டியைப் போன்றே சிறைக்கு சென்ற, காதிரி வட்டத்தைச் சேர்ந்த கெங்கி ரெட்டி "நான் முழுசாய் ஒரு மாசம் சிறையில் கிடந்தேன். அப்போ சந்திரபாபு நாயுடுவோட ஆட்சி. நானும் அசலுடன் மேற்கொண்டு கொஞ்சம் சேர்த்துக் கட்டி கடனை அடைக்க முயற்சி செய்தேன். என்னுடைய ஆறு ஏக்கர் நிலத்தில் இருந்து கொஞ்சத்தை விற்றுப் பணத்தை எடுத்துக்கொள்ளக்கூட சொன்னேன். (அதே வங்கியின் காதிரி கிளையை சேர்ந்த) வங்கி மேனேஜரோ முரட்டடியா சொல்லிட்டார் - 'ஒன் நிலம் எங்களுக்கு வேண்டாம். உடனடியா பணம். இல்லாட்டா ஜெயில்'னு. சொன்னபடியே ஜெயிலுக்கு அனுப்பினார். பின்னாடி பாசன வசதி கொண்ட என் நிலம் ஒன்றை விற்றுத்தான் கடனை அடைத்தேன்" என்கிறார்.

"சந்திரபாபு நாயுடு ஆட்சியில் இருந்த காலத்திலும் இது மாதிரி நடந்தது. இப்போது மறுபடியும், முன்னை விடத் தீவிரமாக நிகழ ஆரம்பித்துள்ளது" என்று, ஆந்திர விவசாயிகள் சிறைப்படுத்தப்படுவதைச் சொல்கிறார், ஆந்திர பிரதேச ரயத்து சங்கப் பொதுச் செயலர் மல்லாரெட்டி. "வங்கிகள் விவசாயிகளிடம் மட்டும் விதிமுறைகளைக் கறாராக்கி அவர்களைச் சிறைச்சாலைக்குத் தள்ளுகின்றன. கொஞ்சம் எண்ணிப் பாருங்கள். இவர்கள் எல்லோரும், வறட்சியால் தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகும் பகுதியைச் சேர்ந்தவர்கள். விளைச்சல் ஏதும் இல்லை. கடனைத் திருப்பிச் செலுத்தும் நிலைமையிலும் இல்லை. ஆனால் பல கோடி ரூபாய்களைக் கடனாகப் பெற்றுக்கொண்டு, கடனை அடைக்காமல் இருக்கும் பெரும் தொழிலதிபர்களை இவ்வங்கிகள் ஒன்றும் செய்வதில்லை. ஆயிரக்கணக்கில் மட்டும் பாக்கி வைத்திருக்கும் விவசாயிகளோ சிறைக்குள் தள்ளப்படுகின்றனர்" எனப் பொறுமுகிறார் அவர். மொத்தத்தில் ஆயிரம் கோடி ரூபா வரை கடன் பாக்கி வைத்திருக்கும் தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், ஒப்பந்தக்காரர்கள் என 200 முக்கியப்பிரமுகர்களின் பெயரை ஆந்திரப் பிரதேச கடன் வசூல் தீர்ப்பாயத்தின் இணைய தளம் அண்மையில் கூட பட்டியலிட்டுள்ளது.இந்தப் பணம் ஏதுமே வசூலிக்கப்படவில்லை.

உலகமயம்,தாராளமயம் எனும் பெயரில் மானிய வெட்டு, ஒப்பந்த விவசாயத்தால் சாவின் விளிம்பு நோக்கி இந்த நாட்டுக்கே சோறு போடும் விவசாயிகள் தள்ளப்படுவதும், மழை பொய்த்தும், நிலத்தடி நீர் வளம் வற்றிப்போயும் திருப்பிக்கட்ட முடியாத விவசாயிகளின் கடன்களை வசூலிக்க வங்கிகள் சிறைக்கொடுமை, ஜப்தி எனக் கடுமையைக் காட்டுவதும் ஆந்திராவில் மட்டுமல்ல நாடெங்கும் தொடர்கிறது.

கர்நாடக மாநிலம் பீடார் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், சர்க்கரை ஆலைகள் சொல்லித்தான் கரும்பு பயிரிட்டார்கள். 12 மாதங்கள் கடந்தும் கரும்பு வெட்ட ஆலை உத்தரவிடாமல், பயிர்கள் பூத்தும் விட்டன. நடப்பில் கரும்புப்பயிரை 10ல் இருந்து 12 மாதங்களுக்குள் வெட்டாமல் விட்டு விட்டால் அது முற்றி அதன் இனிப்புத்தன்மையை இழந்து வெறும் விறகாகி விடும். அப்பயிரை உருவாக்க உழைத்த 12 மாத உழைப்பு, உரம், களை எடுப்பு என எண்ணற்ற செலவு இத்தனையும் தாங்குவதற்கு இயலாமல் தன் 7 வயது மகனுடன் மே தினத்தன்று 30 வயது கர்ப்பிணியான மல்லம்மா எனும் விவசாயி செய்து கொண்ட தற்கொலையுடன் சேர்த்து அம்மாவட்டத்தில் இவ்வாண்டு ஜனவரி முதல் இதுவரை 25 பேர்கள் வாழ்க்கையை அழித்துக்கொண்டுள்ளனர். 2007-08 இல் இந்தியாவின் சர்க்கரை உற்பத்தியோ 2.6 கோடி டன்களைத் தாண்டிவிட்டதாலும் கையிருப்பு மட்டும் 1.146 கோடி டன்களாக இருப்பதாலும் விவசாயிகள் இனி கரும்பு பயிரிட வேண்டாம் என்று இத்தனை தற்கொலைகளுக்குப் பின்னர் அறிவுரை கூறுகின்றனர், வேளாண்மை விஞ்ஞானிகள். பல மாநிலங்களிலும் கரும்பு வெட்ட உத்தரவு வராததால், தற்கொலை செய்த விவசாயிகளைத் தவிரப் பலரும் கரும்புக்கொல்லைகளை தீவைத்து அழித்த பின்னர் அறிவுரை சொல்லத்தான் இந்த அறிவாளிகளால் முடிகிறது.

விவசாயிகளின் துயரம் மிக்க இந்தச்சூழலை மாற்றிடுகிறோம் எனும் பெயரில் மிகப்பெரிய சதித்திட்டத்துடன் ஏகாதிபத்தியமும் காலை உள்ளே வைத்துள்ளது.

நூறு கோடி இந்திய மக்களுக்கும் அத்தியாவசியமான உணவுப்பயிரை உற்பத்தி செய்து வரும் பாரம்பரிய விவசாயிகளிடம் 'உணவுப்பயிர் விளைச்சலைக் கை விட்டு தோட்டப்பயிர், மூலிகைப்பண்ணை, பழத்தோட்டம், பயோ டீசல் உற்பத்திக்கு மாற்றுதல்' எனும் சதித்திட்டத்தைப் பல்வேறு உத்திகளுடன் செய்யத் தொடங்கியுள்ளனர்.

இதற்காக ஆந்திர அரசு,'சிறு, நடுத்தர விவசாயிகள் பழச்சாகுபடிக்கு மாறினால் அவர்களுக்கு ஐந்து ஏக்கர் வரைக்கும் 100% மானியம் தரப்போவதாகவும், அவர்கள் பழமரக்கன்றுகள், உரம்,சொட்டுநீர்ப்பாசனம் போன்றவற்றிற்கு 70% மானியம் பெறுவார்கள்' என்றும் அறிவித்துள்ளது. இந்த ஆண்டு மட்டும் சுமார் 1 லட்சம் விவசாயிகளை உணவுப்பயிரில் இருந்து அகற்றிவிட்டு பழங்களை விளைவிக்க ஆந்திர அரசிடம் திட்டமுள்ளது . 19 ஆண்டுகளாக இந்திய மாம்பழங்களை இறக்குமதி செய்யத் தடை விதித்திருந்த அமெரிக்கா திடீரெனத் தடையை நீக்கியதிலிருந்து, ஆந்திர அரசின் இந்த அறிவிப்பு முற்றிலும் ஏற்றுமதிக்காகத்தான் என்பது தெரிகின்றது. அத்துடன் ஆந்திர அரசே 100% மானியத்தை பயோ-டீசல் உற்பத்திக்காக வளர்க்கப்படும் காட்டாமணக்குக்கும் அறிவித்துள்ளது. நெல்லுக்குத் தேவையான யூரியா மானியத்தை வெட்டும் அரசு பணப்பயிருக்கும், காட்டாமணக்குக்கும் மானியம் தந்து நாட்டின் உணவு உற்பத்தியை முடக்கி உணவுக்கு ஏகாதிபத்தியத்தை சார்ந்திருக்கும் நிலைக்கு நம்மைத் தள்ளப்போகின்றது.

ஆந்திரத்துடம் மராட்டியம், ஒரிசா,ராஜஸ்தான், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களையும் இணைத்து உலகவங்கி ஒரு திட்டத்தைத் தீட்டி அமுல்படுத்துகிறது. விவசாயத்துறையில் பெரும் தொழில் நிறுவனங்களை ஒப்பந்த விவசாயத்தில் ஊக்குவிக்கவும், பெரும் சில்லறை விற்பனை நிறுவனங்களான ரிலயன்சு-·ப்ரெஷ், வால்மார்ட் போன்றவை நேரடியாக விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து சிறுவணிகர்களை ஒழித்துக்கட்டவும், தோட்டப்பயிர், பழத்தோட்டங்கள் முதலான வேளாண்-வர்த்தகத்தை ஊக்குவிக்கவும் உலகவங்கி தீட்டி உள்ள இத்திட்டத்திற்கு 'பல்நிலை வேளாண் போட்டித் திட்டம்' என்று பெயர் வைத்துள்ளது. இத்திட்டத்தின் நோக்கங்களுக்கு தக்கபடி மைய அரசும் ஆந்திர அரசும் சந்தைச் சட்டங்களை திருத்தி உள்ளன. பிற மாநிலங்களும் அடுத்து சட்டங்களை இதற்குத் தக்கபடி மாற்றப்போகின்றன.

மே 5 அன்று அமெரிக்க வேளாண்மைத் துறை விஞ்ஞானிகளும் இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கவுன்சிலும் இணைந்து ஒரு கலந்தாலோசனையை நடத்தியுள்ளன. அதில் அடுத்த 5 ஆண்டுகளில் ஒப்பந்த விவசாயத்தை வளரச்செய்து இந்திய விவசாயிகளை, சங்கிலித் தொடர் நிறுவனங்களான வால்மார்ட் போன்ற பெரும் நிறுவனங்களுக்கு கொத்தடிமைகளாக மாற்றவும், அவர்களின் சிறப்பங்காடிகளின் தேவைக்கு ஏற்ப விளைவிக்கவும், பதப்படுத்தப்பட்ட உணவு, பழ வகைகள் உற்பத்தியில் ஈடுபடுத்தவும் ஆலோசிக்கப்பட்டுள்ளன. இந்த வேளாண்-வர்த்தகத்தில் பெருமளவு முதலீட்டைச் செய்யத் தேவையான உள் கட்டுமானங்களை ஏற்படுத்திக்கொடுக்க வேளாண்மை அமைச்சர் சரத்பவார் உறுதியளித்துள்ளார்.

இந்தியாவின் உணவுக்களஞ்சியம் என்று போற்றப்படும் பஞ்சாபில் மாற்று விவசாயத்தை வெகு தீவிரமாக நடைமுறைப்படுத்தி கோதுமை பயிரிடப்படும் நிலப்பரப்பை சுருக்கிக்கொண்டு வருகின்றனர். இதனை வளர்ச்சிப்பாதை எனக் கொண்டாடும் இந்தியா டுடே, பாட்டியாலாவில் 150 ஏக்கரில் காளாண் பண்ணை நிறுவி மெக்சிகோ, அமெரிக்கா, ஜெர்மனி, ரஷ்யாவுக்கு காளான்களை ஏற்றுமதி செய்து கோடீஸ்வரனாகிய மல்வீந்தர் சிங், கோலா போன்ற உற்சாக பானங்களுக்கு தேவைப்படும் கா·பின் எனும் நஞ்சை கரும்புச்சாற்றின் கழிவில் (மொலாசஸ்) இருந்து வடித்தெடுத்து ஏற்றுமதி செய்து கோடிகளை ஈட்டிய ஜிஜேந்திர சிங் போன்றோரையும் கொண்டாடி இவர்களை முன்னோடி விவசாயிகளாகக் காட்டுகின்றது. கா·பின் நஞ்சை பேரளவில் உற்பத்தி செய்ய பஞ்சாபில் ஜிஜேந்திர சிங், 40 ஆயிரம் ஏக்கரில் ஒப்பந்த விவசாயம் மூலம் இனிப்புச் சோளம் பயிரிடப்போகின்றானாம். கோதுமையை விட்டு விட்டு நம்மை, மனிந்தர்பால் சிங் போல 150 ஏக்கரில் ரோஜா பயிரிட்டு, அதில் இருந்து அத்தர் உற்பத்தி செய்யச் சொல்கிறது இந்தியா டுடே.

பயோ டீசலுக்கான சாராயத்தை வடித்தெடுக்க, இனிப்புச் சோளத்தை தென் அமெரிக்காவில் சாகுபடி செய்யச் சொல்லி அமெரிக்கா செய்யும் பிரச்சாரம், மூன்றாம் உலக நாடுகளின் உணவு உற்பத்தியை முடக்கி, அமெரிக்க உணவை வலுக்கட்டாயமாக ஏற்றுமதி மூலம் திணிக்கப்போகும் அமெரிக்க சதி என்று மரணத்தை எதிர் நோக்கிய நிலையிலும் தெளிவாக அம்பலப்படுத்துகிறார், கியூபத் தலைவர் காஸ்ட்ரோ. ஆனால் நமக்கு வாய்த்த குடியரசுத் தலைவரோ காட்டாமணக்கை பயிரிடச் சொல்லி இந்தியா முழுக்க பிரச்சாரம் செய்கிறார்.

தன்மானத்தளபதியின் பெரியார் புரா, தமிழ் நாட்டின் நெற்களஞ்சியத்தை அழிக்க, அவுரி, மூலிகைச் செடிகள், காட்டாமணக்குக்கு மாறச் சொல்லி பிரச்சாரம் செய்கிறது. சமீபத்தில் புரா, மூங்கிலை வளர்க்கப் பயிற்சியும் தந்துள்ளது.

இந்த ஆண்டு முதல் தமிழ் நாட்டில் உள்ள வேளாண்மைக்கல்லூரிகளில் 'மூலிகைச் சாகுபடி' பயிற்சி வகுப்பை கிராமப்புற இளைஞர்களுக்கும், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கும் நடத்த உள்ளனர்.

இவ்வளவு சதிகளும் போதாதென்று, எம்.எஸ்.சுவாமிநாதனும் 'சிறப்புப் பொருளாதார மண்டலங்களை'ப் போன்று நாடெங்கும் 'சிறப்பு விவசாய மண்டலங்களை' உருவாக்கச் செயல்திட்டம் வகுக்கிறார். மரபணு மாற்றம் செய்யப்பட்ட மலட்டு விதைகளை மையமாக வைத்து இந்திய விவசாயத்தை மறுபடியும் சூறையாட வந்துள்ள இரண்டாம் பசுமைப் புரட்சியை சிறப்பாக அமுல்படுத்தவே இம்மண்டலங்கள் உருவாக்கப்பட உள்ளன. கடன் வசதி, காப்பீட்டு வசதி போன்ற கவர்ச்சிகளைக் காட்டி விவசாயிகளை மரபீனி விதைகளுக்குள் தள்ளி, விவசாயத்தை லாபவெறியூட்டும் 'வேளாண்-வர்த்தகமாக்க' சுவாமிநாதன் திட்டம் வகுத்து வருகிறார்.

இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர், பூச்சிக்கொல்லி மருந்துகள், உரங்கள் போன்றவற்றை மூன்றாம் உலக நாடுகளில் தள்ளின ஏகாதிபத்தியங்கள். சுற்றுச் சூழலையும் ஆரோக்கியத்தையும் நாசமாக்கும் இவற்றிற்கு எதிராக 'ஒற்றை வைக்கோல் புரட்சி' இயற்கை வேளாண்முறையை வளர்த்தெடுத்தார், ஜப்பானின் மசானபு ·புக்காகோ.இன்று இம்மாற்றுமுறையில் - இயற்கை உரங்களால் விளைந்தவற்றை ஐரோப்பாவும், அமெரிக்காவும் விரும்பிப் பயன்படுத்துவதால், இயற்கை விளைபொருட்களின் சந்தை வளரத்தொடங்கியுள்ளது. அதே ஏகாதிபத்தியம், இந்தியாவின் பெரும் நிலப்பரப்பில் இயற்கை வேளாண்மையை செய்து தனக்குத் தேவையான விளைபொருட்களை இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்ய விரும்புகிறது. இதற்காகவும் உணவுப்பயிர் விளைவிக்கும் பரப்பு பறிபோகின்றது. இந்தச் சதிக்குத் துணையாக 'பாரம்பரிய வேளாண்மை முறைகள்' பற்றிச்சொற்பொழிவு நிகழ்த்துகிறது, அமெரிக்க போர்டு பவுண்டேசனின் நிதியில் உயிர் வாழும் 'தேசிய நாட்டுப்புறவியல் உதவி மய்யம்'.

ஆக, விவசாயிகளிடம் இருந்து உணவுப்பயிர் உற்பத்தி முடக்கப்படுகிறது. அற்ப சொற்ப கடன்களுக்காக எல்லாம் விவசாயிகள் சிறை, சித்திரவதைக்குள் தள்ளப்படுகின்றனர். விளைச்சல் நிலங்களை சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் பறிக்கத் தொடங்கியுள்ளன. ஆந்திராவில் பருத்தி விவசாயிகளும், கர்நாடகாவில் பாக்கு,கரும்பு விவசாயிகளும் தற்கொலை நோக்கித் தள்ளப்படுகின்றனர். விவசாயிகளுக்கு எதிரிகளாக அரசும், பன்னாட்டு நிறுவனங்களும், வங்கிகளும் அணிவகுத்து தொடர்ச்சியாய் தாக்குதலை நடத்திவருகின்றன. புதுப்புது உத்திகளுடன் விவசாயி நசுக்கப்படுகின்றான். அன்று மலபாரில் இருந்த மாப்ளாக்களின் அதே கொதி நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டு வருகின்றனர். மாப்ளா, புன்னபுரா, வயலார், தெலங்கானா என அனைத்துப் பகுதிகளிலும் நிலவுடைமையையும், ஏகாதிபத்தியத்தையும் முறியடிக்க வலிமையான தாக்குதலைக் கொடுத்தனர் விவசாயிகள். தற்கொலைப்பாதையை விட்டு விட்டு, விவசாயிகளுக்கு எதிராக நடத்தப்படும் அனைத்து சதித்திட்டங்களையும் முறியடிக்க விவசாயிகள் புரட்சிகர இயக்கங்களுடன் கை கோர்த்துப் போராட முன்வரவேண்டும்.


Related Articles:

இந்தியாவின் ஜனநாயகமும் - விவசாயமும், சிறு தொழில் துறையும்

பத்ரியின் கிராமப் பொருளாதாரக் கட்டுரை - ஒரு உட்டோஅடிமை நாடும், போலி சுதந்திரமும்


இழிச்சவாயர்களும், இந்திய விவசாயமும்


அவனுடைய உமியும் - நம்முடைய நெல்லும்!


Labels: , ,

2 Comments:

Blogger அசுரன் said...

வெகு அருமையான நேரம் கருதி வந்த கட்டுரை... சாய்நாத்தின் உழைப்பை தமிழில் எடுத்துச் செல்லும் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

இதோ பார்ப்பன பயங்கரவாதி ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் என்கிற வெறியன் விதர்பா விவசாயிகளுக்கு வாழும் கலை திட்டத்தின் கீழ் வாழக் கற்றுக் கொடுப்பதாக வக்கிரமாக எழுதியுள்ளது பயங்கரவாத பத்திரிகையான இந்தியன் எக்ஸ்பிரஸ்.

உழைக்காம ஊரை ஏமாற்றி சாப்பிடும் இந்த ஜந்து உழைப்பைத் தவிர வேறெதுவும் அறியா அந்த மக்களூக்கு வாழும் கலை கற்றுக் கொடுப்பதாக பெருமை பேசுவதை பார்த்துக் கொண்டு இந்த சமூகம் சும்மாயிருக்கிறதே அதுதான் ஆகக் கேடான வக்கிரமாக உள்ளது.

உழைப்புக்கு ஏற்ற கூலியை பெற்றுத் தர வாழும் கலை என்ன செய்ய முடிய்ம் என்பது நமக்கு தெரியும்.. அப்படியிருக்க விவசாயிகளை ஏமாற்றி போதை மருந்து கொடுத்து மயக்கும் இந்த விசச் ஜந்துகளை களை எடுப்பதுதான் விவசாயிகள் தங்களது உண்மையான பிரச்சனைக்கு எதிராக போராட வழி கொடுக்கும்.

இதே நக்கிப் பிழைக்கும் நாதாரிதான் ஈராக்கிற்க்கும் சென்று வாழும் கலை குறித்து கற்றுக் கொடுக்கிறான். அங்கு ஏதோ ஒரு அமெரிக்க அடிவருடி அமைச்சரை சந்திதுள்ளான் இந்த ஆன்ம வியாபாரி. அந்த அடிவருடி இந்த அல்லக்கை சொறிநாயிடம் பின்வருமாறு சொல்லியுள்ளது: "ஈராக் மக்களுக்கு சாகும் கலை மட்டுமே(Art of Death) தெரிந்துள்ளது" என்று.

என்னவொரு திமிர்த்தனமான பேச்சு. இதனை இங்கு வந்து சொல்கிறான் அந்த வியாபாரச் சாமியான்.

உலகின் முதல் நாகரீகம் தோன்றிய மோசபடோ மியாவின், உலகின் முதல் முதலாக சட்டங்களை தொகுத்த ஒரு நாகரிகத்தை பார்த்து, இன்று வரை நாகரீகமின்றி வக்கிரமாக வர்னாஸ்ரமம் உள்ளிட்டு பல்வேறு பிற்போக்குத் தனங்களையே ஆக முற்போக்கானதாக பேசி வரும் இந்த சாக்கடை ஜீவ்ன் "சாகும் கலை மட்டுமே அவர்களுக்கு தெரியும்" என்று சொல்கிறது.


ஒருவேளை சுயமரியாதையின்றி குண்டி நக்கிப் பிழைப்பதைத்தான் இவனது வாழும் கலை கற்றுக் கொடுக்கிறதோ? ஆம் உண்மையில் அதைத்தான் அந்த பார்ப்பன பண்பாட்டைத்தான் கற்றுக் கொடுக்கிறது.

இவனது சூத்தில் சுடு கம்பி சொருகும் பொழுது இவன் வாழும் கலை கற்பிக்கும் திறமை எப்படி பயனளிக்கிறது என்று பார்க்க ஆவலாக உள்ளது.

அசுரன்

12:39 PM  
Anonymous Anonymous said...

நல்ல கட்டுரை.

1:27 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home