Thursday, March 15, 2007

நீ இந்து என்றால் சொல் சம்மதமா

சம்மதமா சம்மதமா
நீ இந்து என்றால் சொல் சம்மதமா !
சொல்லிடு உன்னால் முடியுமா !
நீ உண்டு ஒதுங்கும் விலங்கினமா !
சொல்லிடு உன்னால் முடியுமா !

நீ உண்டு ஒதுங்கும் விலங்கினமா !

இல்லை கண்டும் காணாத கல்லினமா!
கண்டும் காணாத கல்லினமா!

சம்மதமா சம்மதமா
நீ இந்து என்றால் சொல் சம்மதமா ?
சம்மதமா சம்மதமா
நீ இந்து என்றால் சொல் சம்மதமா ?

கண்ணில் விழுந்ததும் தூசியல்ல !
என் கண்ணிரும் ஒயவில்லை
நெஞ்சை அறுக்கும் சோகமடா !
அந்த பிஞ்சு முகம் கண்ணில் ஆடுதடா !
தொழுகை முடிந்த வாசலிலே
அந்த அழுகை யாருக்கும் கேக்கலியே !

கேட்டது கொலை வெறி சத்தமடா
அது வேட்டைக்கு அலைந்த கூட்டமடா !
கேட்டது கொலை வெறி சத்தமடா

அது வேட்டைக்கு அலைந்த கூட்டமடா !

குழந்தை மறைந்தது கூட்டத்திலே
பிஞசு குரலும் மறைந்தது கூச்சலிலே
குழந்தை மறைந்தது கூட்டத்திலே

பிஞசு குரலும் மறைந்தது கூச்சலிலே

சின்ன பிஞ்சை பிளக்க மனம் வருமா?
அது முஸ்லீம் என்றால் சம்மதமா
நீ இந்துவென்றால் சொல் சம்மதமா?

சம்மதமா சம்மதமா
நீ இந்து என்றால் சொல் சம்மதமா ?
சம்மதமா சம்மதமா
நீ இந்து என்றால் சொல் சம்மதமா ?

கங்கை சுமந்து மீன்களையா
தலை துண்டாய் போன உடல்களையா !
மண்ணில் விளைந்த கோதுமையே
நீ தின்று வளர்ந்தது பிணங்களையா !

கண்கள் அவிந்த பகல்பூரே
உன் பங்கினை கேள் இந்த பாவத்திலே !
தோட்டத்தின் மேலே பூக்களடா !

தோண்ட தோண்ட தலைகளடா !
கோதுமை கதிர்கள் பொன்நிறமா !
தூர்களின் வேரோ செந்நிறமா !

ஜென்மமடா ராம ஜென்மமடா !
இரத்த கங்கையில் பிறந்த ஜென்மமடா
மனித கறி நர மாமிசமா
உடல் முஸ்லிம் என்றால் சம்மதமா ?

நீ இந்து என்றால் சொல் சம்மதமா ?

சம்மதமா சம்மதமா
நீ இந்து என்றால் சொல் சம்மதமா ?
சம்மதமா சம்மதமா
நீ இந்து என்றால் சொல் சம்மதமா ?

ஒடிவந்தனரே உயிர் பிழைக்க !
இடம் தேடி வந்தனரே உடல் நடு நடுங்க !
துர‌த்தி வந்தது கும்பல் ஒன்று
ஊரில் இருக்க வைத்தது அடைக்கலமென்று !

தேடிய கும்பல் நுழைந்ததடா
மூடிய கதவு திறந்ததடா !
அடைக்கலம் தந்த கைகள் அல்ல
அது ஆட்காட்டிகளின் கைகளடா !

துரோகமடா கொடுந் துரோகமடா
தூக்கத்தில் கொன்ற துரோகமடா
துரோகமடா கொடுந் துரோகமடா
தூக்கத்தில் கொன்ற துரோகமடா

கொடுத்த சோறு செரிக்கும் முன்னே
குடலை அறுத்த துரோகமடா
கொடுத்த சோறு செரிக்கும் முன்னே
குடலை அறுத்த துரோகமடா

துரோகிகள் மதம்தான் உன் மதமா ?

நீ இந்து என்றால் சொல் சம்மதமா ?
நீ இந்து என்றால் சொல் சம்மதமா ?


சம்மதமா சம்மதமா
நீ இந்து என்றால் சொல் சம்மதமா ?
சம்மதமா சம்மதமா
நீ இந்து என்றால் சொல் சம்மதமா ?

சொல்லிடு உன்னால் முடியுமா
நீ உண்டு ஒதுங்கும் விலங்கினமா ?

சொல்லிடு உன்னால் முடியுமா
நீ உண்டு ஒதுங்கும் விலங்கினமா ?


இல்லை கண்டும் காணாத கல்லினமா?

சம்மதமா சம்மதமா
நீ இந்து என்றால் சொல் சம்மதமா ?
சம்மதமா சம்மதமா
நீ இந்து என்றால் சொல் சம்மதமா ?



என்று உலுக்குகிறது கோவனின் குரல்.. ஈரபசையுடைய ஒவ்வொருவர் இதயத்திலும் இந்த பாடல் ஒலித்து கொண்டேயிருக்கும்.

------------------
மக்கள் கலை இலக்கிய கழகத்தின்
பாடல் வெளியிடான
" காவி இருள்" யில் இருந்து பிரசுரிக்கப்பட்டு உள்ளது.

Related Article:

சுயமரியாதையுள்ள(?) இந்துத்துவ வெறியர்களே - இந்த முறையாவது......

இந்து/பார்ப்னிய மத வெறியர்களே பதில் சொல்லுங்கள்!!!...

இந்து/பார்ப்பினிய மதம்-பிரியானி-கறிவேப்பிலை

பொங்கலும், இந்துத்துவ வெறியர்களும்!!

இவை எனது FAQ... பதில் சொல்லுங்க!

பார்ப்பனியம் என்னும் பண்பாட்டு மேலாதிக்கம்

பசுத்தோல் போர்த்திய கேள்விகள்



12 Comments:

Blogger கோபா said...

முதன் முறையாக பாடல் - இருந்து பிரசுரிக்கப் பட்டு உள்ளது.


எழுத்து பிழைகள் சுட்டிக்காட்டவும்

கரும்பலகை

11:37 AM  
Blogger அசுரன் said...

கோபா என்பது நீங்கள்தானா தோழர்,

பாடலை பிரசூரித்தமைக்கு நன்றிகள் தோழர். எழுத்துப் பிழைகள் பார்க்கவில்லை பார்த்து சொல்கிறேன்.

அசுரன்

12:42 PM  
Blogger அசுரன் said...

தமிழ்மணத்தில் இணைக்கவில்லையா?

12:43 PM  
Blogger  said...

இதயத்தையும் இமைகளையும் ஒருசேர ஈரமாக்கும் இந்த பாடலை இங்கு வெளியிட்டமைக்கு நன்றிகள். இணையத்திலும் கவிந்துகொண்டிருக்கும் காவி இருளை விரட்ட இன்னுமொரு ஆயுதமாக நம் கைகளில் இது மின்னிடும். ஏன் தோழர் தமிழ்மணத்தில் இன்னும் தெரியவில்லை..

தோழமையுடன்
ஸ்டாலின்

12:45 PM  
Blogger rajavanaj said...

நெஞ்சைப் பிழியும் வரிகள். கொஞ்சமாவது சொரனை கொண்ட 'இந்துக்கள்' இதன் வரிகளை சிந்தித்துப் பார்க்க வேண்டும்..
நல்லதொரு கவிதையை பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி

2:43 PM  
Blogger லக்கிலுக் said...

இப்பாடலை முதன்முறையாக வாசிக்கிறேன் தோழரே!

//குழந்தை மறைந்தது கூட்டத்திலே
பிஞசு குரலும் மறைந்தது கூச்சலிலே
குழந்தை மறைந்தது கூட்டத்திலே
பிஞசு குரலும் மறைந்தது கூச்சலிலே//

இவ்வரிகளை வாசிக்கையிலே கண்கள் குளமாவதை தடுக்க முடியவில்லை

4:31 PM  
Blogger ╬அதி. அழகு╬ said...

இடித்து விட்டான் மசூதியை இது சரிதானா?

இந்து மக்கள் விருப்பம் என்றான் உன்னைக் கேட்டானா?

காலங் காலமாய் அழியாத நேசம்

கடப்பாரையாலே உடைந்ததென்றால் இது என்ன தேசம்


என்ற 'அசுர' கானத்தையும் முழுதுமாய் வெளியிட வேண்டுகிறேன்.

நன்றி!

4:36 PM  
Blogger ╬அதி. அழகு╬ said...

எழுத்துப் பிழைகள்:


அந்த பிஞ்சு முகம் கண்ணில் டுதடா !
தொழுகை முடிந்த வாசலிலே

மண்ணில் விளைந்த கோதுமையே
நீ தின்று வளர்ந்தது பிணங்களையா !

தோண்ட தோண்ட தலைகளடா !
கோதுமை கதிர்கள் பொன்நிறமா !

ஒடிவந்தரே உயிர் பிழைக்க !
இடம் தேடி வந்தனரே உடல் நடு நடுங்க !
து‌த்தி வந்தது கும்பல் ஒன்று

தூக்கத்தில் கொன்ற துரோகமடா
துரோகமடா கொடுந் துரோகமடா
தூக்கத்தில் கொன்ற துரோகமடா

4:53 PM  
Anonymous Anonymous said...

'மலைகளைப் போன்ற அலை மீது அது அவர்களைக் கொண்டு சென்றது. விலகி இருந்த தன் மகனை நோக்கி 'அருமை மகனே! எங்களுடன் ஏறிக் கொள். ஏக இறைவனை மறுப்போருடன் ஆகி விடாதே!' என்று நூஹ் கூறினார்.
11 : 42 - குர்ஆன்

குர்ஆன் இறை வேதம்தான். அது முகமது நபியின் வார்த்தை அல்ல ....

Hope they will understand this and Islam soon....

5:29 PM  
Blogger Arasu Balraj said...

//இல்லை கண்டும் காணாத கல் இனமா !
கண்டும் காணாத கல் இனமா !//
இல்லை கண்டும் காணாத கல்லினமா !
கண்டும் காணாத கல்லினமா !
//அந்த பிஞ்சு முகம் கண்ணில் அடுதடா !//
ஆடுதடா
//தொழுகை முடிந்த வாசழிலே//
வாசலிலே
//கங்கை சுமந்து மீன்களா//
மீன்களையா
//நீ திண்று வளர்ந்தது பிணங்களையா !//
தின்று
//கண்கள் அவிந்த பகள்பூரே//
பகல்பூரே
//உன் பங்கினை இந்த பாவத்திலே !//
இந்த வரி சரிதானா என சந்தேகமாக உள்ளது.
//தோண்ட தோண்ட தலைகளட !//
தலைகளடா
//கோதுமை கதிர்கள பொன்நிறமா !//
கதிர்கள்
//ஒடிவந்தரே உயிர் பிழைக்க !//
ஒடிவந்தனரே
//துறத்தி வந்தது கும்பல் ஒன்று//
துரத்தி
//முடிய கதவு திறந்ததடா !//
மூடிய
//அடைக்களம் தந்த கைகள் அல்ல//
அடைக்கலம்
//அது ஆள்காட்டிகளின் கைகளடா !//
அது ஆட்காட்டிகளின் கைகளடா !
//துக்கத்தில் கொன்ற துரோகமடா//
தூக்கத்தில்
குறிப்பிட்டுள்ள சில எழுத்துப் பிழைகளை மாற்றியமைக்க வேண்டுகிறேன்.
பதிவிட்டதற்கு நன்றி.

கல்லினங்கள் வாய்திறக்காது,
கருத்தொன்றின இனம்
காரியத்தில் இறங்கலாம்.

5:53 PM  
Blogger கோபா said...

தோழர் அசுரன், ஸ்டாலின் , லக்கிலுக் , அழகு ,arasubalraj அனைவரின் கருத்துகளுக்கும்,
வருகைக்கும் நன்றி..

எழுத்துப் பிழைகள் சுட்டிக்காட்டியமைக்கு நன்றிகள்...

9:44 AM  
Blogger அசுரன் said...

//ஜென்மமடா ராம ஜென்மமடா !
இரத்த கங்கையில் பிறந்த ஜென்மமடா
மனித கறி நர மாமிசமா
உடல் முஸ்லிம் என்றால் சம்மதமா ?///

வெறி பிடித்த நரபலி கூட்டத்திற்க்கு இந்த வரிகள் உரைக்காது. ஆனால் அவர்களுடன் உரசிக் கொள்ளும் சில அல்பைகள் இந்த வரிகளை உண்ர வேண்டும். எவனொருவனும் தான் ஒரு RSSக்காரன் என்றூ சொல்ல வெட்க்கப்படும் அளவு சமூக புறக்கணிப்பு இருக்க வேண்டும்,.

அசுரன்

12:02 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home