Monday, August 27, 2007

நாட்டை விற்ற மாறன்களின் புதிய தருமதுரை வேடம் !

2004 ஆம ஆண்டில் 'சன் பவுன்டேசன்' என்ற அமைப்பை உருவாக்கி 'முரசொலி மாறன்' நினைவாக
வருடந்தோறும் ரூபாய் 1 கோடியினை முரசொலி மாறன் மகன்களான கலாநிதி மாறனும், தயாநிதி மாறனும் மக்களுக்கு வழங்கிவருகின்றனர்.
..

..
சமீபத்திய நாட்களில் தயாநிதி மாறனும் அவரது குடும்பத்தினரும் கல்லூரிகளுக்கும், மருத்துவமனை, முதியோர் ஆதரவு காப்பகம் உள்ளிட்ட இடங்களுக்கும் சென்று விழாக்களில் பங்கேற்று பல லட்சங்களை நன்கொடையாகத் தருகிறார்கள்.

இவை நாளிதழ்களிலும், அவர்களது ஊடகங்களிலும் விளம்பரப்படுத்தப்படுகின்றன.

இப்படி தர்மகர்த்தாக்களாக இன்று அவதாரம் எடுத்து இருக்கும் மாறன்களின் பின்புலம் என்ன என்று பார்த்தால் தான் இவர்களின் உண்மையான நோக்கத்தைத் தெரிந்து கொள்ளமுடியும்.

முரசொலி மாறன் வர்த்தகத்துறை அமைச்சராக இருந்த போதுதான் இந்தியாவில் 1029 பொருட்கள் தங்குதடையின்றி வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் WTO வின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இந்தியாவின் லட்சக்கணக்கான சிறு தொழில் கூடங்கள் சீல் வைத்து மூடப்பட்டன.

பின்னர் இவரது மகன் தயாநிதி மாறன் தகவல் தொழில்நுட்ப அமைச்சராக இருந்த போதுதான் நோக்கியா போன்ற பல பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் கொள்ளையடிக்க ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன.

இரு மாறன்களின் பதவியையும், கலைஞர் அவர்களின் பதவியையும் வைத்துக்கொண்டு பல தொலைக்காட்சி அலைவரிசைகளை ஏற்படுத்தித் தங்கள் சொத்தின் மதிப்பை உயர்த்தி இன்று ஆசியாவிலே பெரிய கோடீஸ்வர்களாக மாறி விட்டனர்.

2001இல் ஆசியாவிலேயே 4ஆவது கோடீஸ்வரராக இருந்த கருணாநிதி குடும்பம் தற்போது இரண்டாவது இடத்துக்கு வந்துள்ளது.

1) 1951இல் ஒரு வீடு மட்டுமே இவர்களுக்குச் சொந்தம். ஆனால்

2) 1992இல் 80 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கு அதிபதி

3) 2006இல் 17000 கோடியாக வளர்ச்சி. இது தவிர கருப்பில் 60000 கோடி

4) சன் நெட் 19 அலைவரிசைகள்

5) ஏர்செல்

6) பூங்கி டெக்ஸ்டைல்ஸ்

7) சேஷசாயி காகித ஆலை

8) தினகரன் 480 கோடி

9) விகடன் 100 கோடி

10) தமிழ் முரசு 280 கோடி

11) குங்குமம் 150 கோடி

12) முரசொலி 90 கோடி

குறிப்பு: மதுரை தினகரன் அலுவலகத் தாக்குதல் சம்பவத்துக்கு முன் வந்த மொத்தக்கணக்கு இது. இப்போது இதை இரண்டு தொகுப்பாய்ப் பிரித்துப் பார்த்துக் கொள்ள வேண்டியதுதான்.

(நன்றி: மண்மொழி வெளியீடு 17, 2007 ஜூலை-ஆகஸ்ட்)

முன்பு விழாக்களில் கலைஞர் பங்கேற்று சன் பவுண்டேசன் உதவியினைக் கொடுத்து வந்தார். தற்போது தயாநிதி மாறன், அவரது மனைவி, காவேரி கலாநிதி மாறன் என குடும்பம் சகிதமாக சென்று விழா எடுத்து 5 லட்சம் 10 லட்சம் என்று கொடுத்து தமிழகம் முழுவதும் சுற்று பயணம் செய்து வருகின்றார்.

இவ்வாறு தர்மகர்த்தா வேஷம் தரிப்பது தரகுமுதலாளியாக வளர்ந்துவிட்ட மாறன்களின் புதிய கண்டுபிடிப்பு இல்லை.


கொக்கோக்கோலா, நோக்கியா போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் கண்டுபிடிப்பு தான் இவை . மக்களை தாங்கள் கொள்ளையடிப்பது தெரியாமல் இருப்பதற்காக இன்று வள்ளல்களாக அவதரித்து பள்ளிகளில் குடிதண்ணீர் வசதி செய்து கொடுப்பது ,மருத்துவமனை கட்டிக் கொடுப்பது என்று தருமதுரை வேஷமிடுவதற்கு முன்னோடி இவர்கள்தான்.

இன்று தயாநிதி, மக்களை பார்த்து கூறுகிறார், "உங்கள் முகத்தில் நாங்கள் எங்கள் அப்பாவின் சிரிப்பை பார்ப்பதாக" வென்று.

ஆனால் மக்கள் இன்று வாழவழியற்றுப் போனதற்கு மாறன்கள் அமைச்சர்பதவிகளில் இருந்த போது செய்த 'பொருளாதார சீர்திருத்தத் திட்டங்கள்' தான் காரணம்.

இவை போன்ற எல்லாச் 'சீர்திருத்தவாதிகளை'ப் பற்றி அறியவிடாமல் தங்கள் தொலைக்காட்சி, பத்திரிக்கை மூலம் கலாச்சார, ஆபாச சீரழிவுகளைப் பரப்பி மக்களின் மூளையினை மழுங்கடித்து வருவதும் தான் காரணமாக இருக்கிறது.

இவ்வாறு பல்லாயிரக்கணக்கான கோடியினை கொள்ளையிட்டு சேர்த்த மாறன்கள் ;

வெறும் 1 கோடியினை தருவதற்கு பவுண்டேசன் வைத்து கொள்வதும், யாரிடமும் நன்கொடை வாங்காமல் செய்து வருகிறோம் என்று சொல்லிக் கொள்வதும் தான் சகிக்கமுடியவில்லை.
Related:

Labels: , ,

4 Comments:

Blogger குமரன் said...

நீங்கள் சொல்கிற கருத்தில் நானும் உடன்படுகிறேன்.

ஆனால், மாறன் மற்றும் கருணாநிதியின் சொத்துக்களாக நீங்கள் நிறையவற்றை சொல்வதாகபடுகிறது.

இதற்கெல்லாம் ஆதாரம் என்ன? நீங்கள் குறிப்பிடும் பத்திரிக்கையை இப்பொழுதுதான் கேள்விபடுகிறேன்.

4:48 PM  
Anonymous Anonymous said...

மண்மொழி எனும் பத்திரிக்கை - எழுத்தாளார் இராசேந்திர சோழனால் அவருடைய கட்சியான தமிழ்தேச மார்க்சியக் கட்சிக்காக வெளியிடப்பட்டு வருகிறது.

-----------
http://www.andhimazhai.com/news/viewmore.php?id=2243
---------
தமிழ்த்தேசப் பொதுவுடைமைக்கட்சியில் உட்கட்சி சனநாயகம், கருத்துச் சுதந்திரம் இல்லை, மாற்றுக்¸ருத்துக்கள் ஒடுக்கப்படுகிýறன என்று சொல்லி அக்கட்சியிலிருந்து வெளியேறியவர்கள் இராஜேந்திரசோழனை அமைப்பாளராகக் கொண்டு 'தமிழ்த்தேச மார்க்சியக் கட்சி' என்கிற புதிய அமைப்பைத் தோற்றுவித்துள்ளனர். மார்க்சிய வழியில் தமிழ்த்தேச தன்னுரிமைக்குப் போராடுவதையே நோக்கமாகக் கொண்ட இந்த அமைப்பு 'மண், மொழி' என்கிற மாத இதழைத் தொடங்கியிருக்கிறது. முதல் இதழ் ஜனவரி - பிப் 06இல் வெளிவந்துள்ளது. ஆசிரியர், இராஜேந்திர சோழன். ஆசிரியர் குழு : காஞ்சி அமுதன், சக்தி சுப்பு, பொன் மாயவன் ஆகியோர்.
---------------

ஒரு விசயத்திற்கான ஆதாரத்தை நாம் இதுநாள் வரை கேள்விப்படவில்லை என்பதே அவ்விசயத்தை மறுப்பதற்கான தரவாகி விடாது என்று கருதுகிறேன்.

அறியாமல் இருப்பது தவறல்ல.

கவி

5:05 PM  
Blogger N Senthil Kumar said...

உங்களது குடும்ப சொத்து பட்டியல்லுக்கு போதுமான ஆதாரம் இருப்பதாக தெரியவில்லை.

மேலும் பொது காரியங்களுக்கு வர்த்தக நிறுவங்கள் பண உதவி செய்வதை ஆங்கிலத்தில் Corporate Social Responsibilty (CSR) என்று கூறுவார்கள். இது உலக அளவில் நடக்கும் பெரிய வர்த்தக வளர்ச்சி நாடகம். இதில் மைக்ரோஸாஃப்ட், இன்போஸிஸ், கோகோ கோலா, மித்தல் ஸ்டீல் போன்ற மிக பெரிய நிறுவனகளும் அடக்கம்.

5:09 PM  
Blogger N Senthil Kumar said...

உங்களது மாறன் குடும்ப சொத்து பட்டியல்லுக்கு போதுமான ஆதாரம் இருப்பதாக தெரியவில்லை. மேலும் பொது காரியங்களுக்கு வர்த்தக நிறுவங்கள் பண உதவி செய்வதை ஆங்கிலத்தில் Corporate Social Responsibility (CSR) என்று கூறுவார்கள். இது உலக அளவில் நடக்கும் பெரிய வர்த்தக வளர்ச்சி நாடகம். இதில் மைக்ரோஸாஃப்ட், இன்போ ஸிஸ், கோகோ கோலா, மித்தல் ஸ்டீல் போன்ற மிக பெரிய நிறுவனகளும் அடக்கம். இதில் சன் டீவீ இன்னும் பெரிய அளவுக்கு ஏதும் செய்யவில்லை என்பதே உண்மை

5:15 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home