Tuesday, September 04, 2007

நான் விஞ்ஞானி இல்லை கோமாளிதான் !! கலாம்-இன் ஒப்புதல் வாக்குமூலம் !!

இன்று நாடு மறுகாலனியாக்கப்பட்டு வருவதன் உச்சக்கட்டம் தான் அணுசக்தி ஒப்பந்தம் , இந்தியாவின் அரைகுறை இறையாண்மையையும் காவு கேட்கிறது.

2005 இல் அமெரிக்காவுடன் போடப்பட்ட இராணுவ ஒப்பந்தத்தின் ஒரு சரத்து தான் இந்த 123 ஒப்பந்தம். 123 ஒப்பந்தம் உள்பட மத்திய அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் (நாட்டை அன்னியனுக்கு விற்பதில்) ஒத்து ஊதி இருந்திட்டு இப்ப எதிர்க்கிற மாதிரி நடிக்கிற போலி கம்யூனிஸ்டுகளை போல ஒத்து ஊதின இன்னொரு சுகபோகி நம்ம அரசவை கோமாளி கலாம்.

லட்சக்கணாக்கான விவசாயி தற்கொலை செய்த நாட்டில், 83 கோடி பேருடைய தினசரி வருமானம் ரூ 20 ஆக இருக்கும் நாட்டில் அனைத்தையும் மூடி மறைத்து இந்திய நாடு 2020 வல்லரசு ஆகிவிடும் என்று நாடு படுதீவிரமாக மறுகாலனியாக்கப்பட்டு வருவதை மூடிமறைத்த இந்த கோமாளியும் 2005ல் போடப்பட்ட அடிமை சாசனம் (123) பற்றி வாய் திறக்கவே இல்லை.

இப்போது அடிமை சாசனம்(123) அமுல்படுத்த போகிற போது எதிர்க்கிற மாதிரி நாடகம் ஆடுகிற போலிகளை விட அப்பட்டமான அமெரிக்க அடிமை நாயாக காட்டி கொண்டு இருக்கிறார் கலாம்.

விஞ்ஞானிகள், நாட்டுப்பற்றாளர்கள், பத்திரிக்கையாளார்கள் என அனைவரும் 123 என்பது ஒரு அடிமை சாசனம் என்று கிழித்து வருகின்ற இந்த சூழ்நிலையில்; கலாம் நேற்று 'அணுசக்தி ஒப்பந்தம் அபூர்வமானது; முக்கியமானது' என்று கூறி தான் ஒரு கோமாளிதான் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.


இந்த ஆளு விஞ்ஞானியாக இருந்திருந்தால் "அடிமை சாசனம்" பற்றி தெரிந்து இருக்க வாய்ப்பு இருக்கும். கோமாளி யாச்சே ! அதுனால தான் ஒப்பதத்தைப் பற்றியோ அதனுடைய சரத்துகளைப் பற்றியோ வாய்திறக்காமல் ஒப்பந்தம் முக்கியமானது என்று 'மண்' மோகன் சப்பைக்கட்டுகளை விட கேவலமாக சப்பைக்கட்டு கட்டுகிறார்.

இதை விட அபாயகரமானது கோமாளியின் ' 2020 வல்லரசு' கனவு !
.
நாட்டின் நிலை என்னவென்றே தெரியாமல் பேசுகிறார் கலாம். மறுகாலனியாதிக்கத்துக்கு உதரணமாக சென்னையை எடுத்துக் கொண்டால் -
  • சென்னை குடிசைகளில் 86% பேர் ஒரு வேளைதான் சாப்பிட்டு வருகிறார்கள்..
  • 44% குடிசைப்பெண்கள் ரத்த சோகையால் செத்துக்கொண்டிருக்கிறார்கள்...
  • ஆட்சியாளர்களோ நிமிட்ஸ் கப்பலில் வந்திறங்கும் அமெரிக்க கொலையாளிகளுக்கு கோடம்பாக்கத்து துணைநடிகைகளைக் கூட்டிக்கொடுத்துக் காவல் நிற்கிறார்கள்
  • சென்னை குடிசைகளில் 21 சதவீதம் இளைஞர்களுக்கு ஒரு வேளை பட்டினிதான் பரிசாகக் கிடைக்கிறது.
  • நகர விரிவாக்கம் என்று அவர்களில் 75000 குடும்பங்களை சென்னையை விட்டுத் துரத்த உத்தரவு போடுகிறது உலக வங்கி..


இப்ப வேலை கொடு என்கிற மக்களை பார்த்து அணுகுண்டு தர்றேன் என்கிறார்கள் ஆட்சியாளர்கள்;

கனவு காணச்சொல்லுகிறார் கலாம்.

இப்படிப்பட்ட கோமாளியின் யோசனைகளை வைத்தும் சிலர் கட்சி ஆரம்பித்து ஆட்சியை பிடிக்க (மக்களை கொள்ளையிட) கிளம்பி இருப்பது; கலாம் ஒப்புதல் வாக்குமூலத்தை விட நாட்டிற்கு அவர் ஏற்படுத்திய '2020' அபாயம் பயங்கரமானது என்பதை காட்டுகிறது.

Related:
..
அமெரிக்க அடிமை நாய் மன்மோகன் வழங்கும் 123 அல்லது அடிமை சாசனம் !!.

123 ஒப்பந்தமும் போலி கம்யூனிஸ்டுகளின் நீலிக் கண்ணீரும் !
..
60 ஆண்டு கால சுதந்திரம் யாருடைய நலன்களுக்காக பயன்பட்டு இருக்கிறது !!

மலபார் பன்னாட்டு கப்பல் பயிற்சியும் திரிபுவாதி சந்திப்பின் பித்தலாட்ட புரட்சியும்

Labels: , ,

2 Comments:

Blogger அசுரன் said...

Good One...

Well Timed one...

Asuran

5:08 PM  
Blogger சிவபாலன் said...

நல்ல வாதம்..

// நாட்டிற்கு அவர் ஏற்படுத்திய '2020' அபாயம் பயங்கரமானது //

சொல்ல வரும் கருத்தில் ஆழம் அதிகம்.. வாதம் புரிய இந்த விடயத்தைப் பற்றிய விரிவான புரிதல் தேவை.

உங்கள் சிந்தனை ஓட்டத்திற்கு எனது வணக்கங்கள்.

நன்றி

9:41 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home