Friday, August 31, 2007

ரிலையன்ஸ் பிரஷ்-யை மூட முடியாது - இந்திய சட்டம் சொல்கிறதாம் ! அப்ப என்ன வெங்காய மக்களாட்சி !!

இன்று இந்தியாவில் 4 கோடி மக்கள் சிறு வணிகத்தில் ஈடுபட்டு உள்ளனர். மொத்தம் 20 கோடி மக்களின் வாழ்வாதாரமாக சில்லரை வணிகம் உள்ளது.

இதனை அழித்து மொத்த இந்திய சில்லரை வணிகத்தை ஒரு சில பெரிய பன்னாட்டு & தரகு முதலாளி நிறுவனங்கள் கைப்பற்ற இன்றைக்கு இந்த சில்லரை வணிகத்தில் நுழைந்து பல சங்கிலி தொடர் கடையினை திறந்து வருகின்றனர்.

இதனை எதிர்த்து பாதிக்கப்பட்ட சிறு வணிகர்கள் ஆங்காங்கே சில தன்னிச்சையான போராட்டங்கள், அவனுடைய கடையினை சூறையாடுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.

இந்நிலையில் நேற்று பேட்டியளித்த வேளான் துறை அமைச்சர் பவார் "ரிலையன்ஸ் கடைகளை மூட முடியாது" என்றும்; உத்திரப்பிரதேசத்திலும், கேரளாவிலும் ரிலையன்ஸுக்கு விதித்த தடை நிரந்தரமாக இருக்காது என்றும் கூறியுள்ளார்.

"இந்திய நாட்டின் சட்டங்கள் எதையும் மீறாத எந்த ஒரு அமைப்பையும் நிரந்தரமாக மூடுவதற்கு, தடை செய்வதற்கு எந்த மாநில அரசுக்கும் அதிகாரம் கிடையாது" என்று அவர் சொல்கிறார்.

சரத்பவாரின் வாயிலிருந்தே இந்த நாட்டின் சட்டங்கள் எல்லாம் பணமுதலைகளின் நலனுக்கானவை மட்டுமே என்பது அம்மணமாக வெளிப்பட்டு விட்டது!!
..
சமீபத்திய சி.என்.என் தொலைக்காட்சியில் அணுசக்தி ஒப்பந்தம் குறித்து நாடாளுமன்ற எம்.பி க்களிடம் கேட்டபோது பெரும்பான்மை எம்.பி க்களுக்கு இந்த ஒப்ப்ந்தம் பற்றி ஒரு விவரமும் தெரியவில்லை.

ஆட்சியாளர்கள் மட்டுமல்ல, நாளுமன்றத்துக்கே அதிகாரம் இல்லை என்று நிரூபணமாகி விட்டது; 123 யை பற்றி விவாதிக்க நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்று சபாநாயகர் அறிவித்துள்ளார்.

காரணம், இந்திய ராணுவ & வெளியுறவு ஒப்பந்தத்தை விவாதிக்க நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்று 'இந்திய சட்டம்' வரையுறுக்கப்பட்டுள்ளது.

இந்த விஷயத்திலிருந்து தெரியவருவது என்ன? இந்திய அரசியல் சட்டம் இந்திய மக்களுக்கானது அல்ல.அது பன்னாட்டு கொள்ளையர்களுக்கும், தரகு முதலாளிகளுக்கும் ஆனது என்பதும் 'நாடாளுமன்றம்' அதிகாரம் ஏதுமற்ற வெற்று அரட்டைமடம் என்பதும் தான்.
..
இந்த உண்மை எல்லா அரசியல்வாதிகளுக்கும் தெரியும், இரண்டு வருஷமாக எதிர்க்காமல் இப்ப 123 யை எதிர்க்குறோம் என்று பம்மாத்து காட்டி கூட்டுகுழு என்று சமரசம் செய்துகொண்ட் போலிக் கம்யூனிடுகளுக்கும் தெரியும்.
..
அடிமை சாசனம் (123) பற்றி வாயே திறக்காமல் 'இந்தியா 2020' வல்லரசு ஆகிவிடும் என்று பொய் பேசிக் கொண்டு திரிந்த முன்னாள் 'அரசவை கோமாளி' அப்துல்கலாமுக்கும் தெரியும்.
Related:
..
..

Labels: , ,

2 Comments:

Blogger அசுரன் said...

அது சரி....நம்ம சொம்நாத சேட்டர்ஜி அண்ணாச்சி (பாராளுமன்ற புனிதம் காக்கும் போலி கம்யுனிஸ்டு சிங்கம்) அணு ஆயுத ஒப்பந்தத்தில் முடிவெடுக்க நாடாளுமன்றத்திற்க்கு அதிகாரம் இல்லை என்று சட்டவாதம் பேசினாரே, அதேநேரத்துலதான் கோமணத்துணி கழற CPM போலிகள் சாண்டமருதம் செய்து கொண்டிருந்தது. என்னவோ போங்க.... அல்ரெடி டெட்பாடி ஆனவனுக்கு மேக்கப் போடுறதா வேணாமா என் கிற் விசயத்தில்தான் இவர்களிடையே சண்டை. உண்மையில் எல்ல அம்சங்களிலும் இவர்களின் போலி ஜனநாயகம் அம்பலப்பட்டுநிற்கிறது. இதோ சில்லறை வணிகத்ட்கிலும் கூட...

Asuran

5:00 PM  
Blogger  said...

வெளியுறவு கொள்கைகளை விவாதிக்ககூட வக்கில்லாத இந்த அரட்டை மடம்தான் இந்திய் ஜனநாயகத்தின் ஊற்றாம் நல்ல கேலிக்கூத்து. பதிவிற்கு வாழ்த்துக்கள் தோழர்

தோழமையுடன்
ஸ்டாலின்

6:16 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home