Friday, September 14, 2007
Tuesday, September 11, 2007
ஊரும், சேரியும் தனித்தனி - மனுதர்மம்....................! சென்னையும், செம்மஞ்சேரியும் பிரி பிரி - ஏகாதிபத்தியம் !!
சென்னை மாநகரம் விழித்தெழும் முன்பே விழித்தெழிந்து இயங்கத் தொடங்கும் கூறு கட்டிக் காய்கறி விற்பவர்கள், வீட்டுக்கு வீடு பால் பாக்கெட் போடுபவர்கள், நடுத்தர, மேட்டுக்குடி கனவான்களின் வீட்டு பத்துப்பாத்திரங்களையும் பளிங்குத்தரையையும் சுத்தம் செய்பவர்கள், மாநகரின் வனப்பை செதுக்கித் தரும் கொத்தனார்கள், சித்தாள்கள், மண்டல வாரியாக குப்பை அகற்றுபவர்கள், அடைத்து நாறும் பாதாளச் சாக்கடைக்குள் இறங்கி சுத்தம் செய்பவர்கள் என லட்சத்துக்கும் மேற்பட்டவர்களின் இயக்கம் இல்லை என்றால் சென்னை மாநகரமே இல்லை எனலாம்.
நகருக்குள் கிடைக்கும் வேலைகளை-அதுவும் நிச்சயமில்லாத வேலையை- நம்பித்தான் இவர்களின் அன்றாடக் காலைப்பொழுதுகள் விடிகின்றன. இக்குடிசைவாசிகளில் 86 சதவீதம் பேருக்கு ஒருநாளைக்கு ஒருவேளைதான் உணவு. போதிய வருமானம் இல்லாததால் குடிசைவாழ் பெண்களின் உணவில் சத்து குறைந்து அவர்களில் 44 சதம் பேருக்கு இரத்த சோகை உள்ளது. இருப்பினும் எண்சாண் வயிறை நம்பி வாழவே தகுதியில்லாத குடிசைகளில் குடியிருப்பதால்தான் இவர்களுக்கு குடிசைகளை ஒட்டிய நாகரீகக் குடியிருப்புகளில் வீட்டு வேலைகளோ, குப்பை அள்ளுவதோ, கட்டிட வேலைகளோ கிடைக்கின்றன.
அதேபோல்தான் மெரீனா கடற்கரை, சாந்தோம் கடற்கரையை ஒட்டிக் குடியிருக்கும் மீனவர்களின் குடியிருப்புக்களும். மீன் பிடிக்கப் பயன்படும் வலைகள், கட்டுமரங்களை எளிதில் கடலுக்குள் கொண்டு செல்லவும், வலைகளை உலர்த்தவும், விரைவில் தொழிலுக்குச் செல்லவும் எனத் தேவையை ஒட்டிப் பல நூற்றாண்டுகளாக அவ்விடங்களில் மீனவர்கள் பாரம்பரியமாகக் குடியிருந்து வருகின்றனர்.
நிச்சயமில்லாத இந்த வாழ்க்கையிலும் மண்ணை அள்ளிப் போட வந்துள்ளது, சென்னை-2026 எனச் சொல்லப்படும் மாஸ்டர் பிளான் திட்டம்.
குடிசைவாசிகள் வாழத்தகாத இடங்களில் வாழ்கிறார்கள் என்று சொல்லி, அதனால் அவர்களை சென்னையில் இருந்து அகற்றி மாநகர எல்லைக்கு வெளியே செம்மண்சேரிக்கு விரட்டத் திட்டமிட்டுள்ளனர்.
இம்மக்களால்தான் சென்னையின் நீர்நிலைகள் மாசுபடுவதாகவும், அவர்கள் நகரின் வளர்ச்சித் திட்டங்களுக்கு இடையூறாக இருப்பதாகவும் மாஸ்டர் பிளான் குற்றம் சாட்டுகிறது.
கழிப்பறைகள் இல்லாத குடிசைமக்கள் திறந்தவெளியில் மலம் கழிப்பதால் நகரின் சுகாதாரமே கெடுவதாயும் குற்றம் சாட்டுகிறது.
நீர்நிலைகளை மாசுபடுத்துவதாகக் குற்றம் சாட்டி சென்னையை விட்டுத் துரத்த வேண்டும் என்றால் முதலில் துரத்த வேண்டியவர்கள், லட்சக்கணக்கான லிட்டர் கழிவை சுத்திகரிக்காமல் வெளியேற்றும் டைடல் பார்க் உள்ளிட்ட பல பன்னாட்டு சாப்ட்வேர் நிறுவனங்களும், நட்சத்திர விடுதிகளும்தான். மூன்று நாளைக்கு ஒருமுறை வரும் நீரை சிக்கனமாக செலவளிக்கும் குடிசைகளால் நீர்நிலை கெடுகின்றது என்பதை குடிசைகளைப் பற்றி அறிந்த எவருமே நம்ப மாட்டார்கள்.
பின் எதற்காக குடிசைகளைக் காலி செய்யச் சொல்லுகிறார்கள்?
மாஸ்டர் பிளானிலேயே இதற்கான காரணம் தெளிவாக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டுப்பயணிகளின் கண்களுக்கு இக்குடிசைகள் வெறுப்பை உண்டுபண்ணுகின்றனவாம்.
வளர்ந்து வரும் சென்னையை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தகுந்த வண்ணம் மாற்றி அமைக்க உருவாக்கப்பட்ட திட்டம்தான் மாஸ்டர் பிளான். இதனை டாக்டர் கலைஞரோ,புரட்சித் தலைவியோ சிந்தித்து உருவாக்கவில்லை.
இனிமேல் சென்னைக்குள் மாவரைக்கும் ஆலைகளோ, ஆடு மாடு வளர்ப்போ, குடிசைகளோ, மீனவர்களின் கட்டு மரங்களோ, சென்னை கடற்கரையின் பலூன், சோளக்கதிர் கடைகளோ இருக்கக் கூடாது. வெளியேறுங்கள் எனக் கட்டளை இட்டுள்ளது, உலக வங்கி. அதனை இந்த அரசு நிறைவேற்றுகிறது. சென்னையின் குடிசை மக்களில் 75 ஆயிரம் பேரை செம்மண்சேரிக்கு அப்பால் குடியேற்றப் போகின்றனர். ஏற்கெனவே அடையாறு நதிக்கரை ஓரக் குடியிருப்புக்களை புல்டோசர்களால் தரை மட்டமாக்கி 1500 குடும்பங்களை இடம் பெயரச் செய்தும் விட்டனர். 7300 பேருக்கு வெளியேற்ற நோட்டீசு வழங்கி விட்டனர். படிப்படியாக அனைத்து குடிசைவாசிகளையும் துரத்தி விட்டு சென்னையை அழகுபடுத்தப் போகிறார்களாம்.
குடிசைகளை அகற்றச் சொல்லும் அரசால், அதே குடிசைகளை இருக்கும் இடங்களிலேயே காங்கிரீட்டுகளாகக் கட்டித்தர இயலாதா?அடையாறு பூங்கா எனும் ஊதாரித் திட்டத்துக்கு மட்டும் ரூபாய் 100 கோடி ஒதுக்க இயலுகிற அரசால் குடிசைகளை மேம்படுத்த இயலாதா?
போலீசுக்காரர்களுக்கு மட்டும் பளபளப்பான அடுக்கு மாடிக்குடியிருப்புகள் கட்டும் அரசுக்கு குடிசைகளை நகருக்குள்ளேயே நவீனமாக்கித்தர வக்கில்லையா?
திறந்த வெளியில் மலம் கழித்து நோயைப் பரப்புகிறதாய் குடிசை மக்கள் மீது குற்றம் சாட்டும் சென்னை மாநகராட்சி ஏன் இதுவரை போதிய அளவில் கழிவறைகளைக் குடிசை மக்களுக்குக் கட்டித் தரவில்லை?
பொதுக்கிணறு, குளங்களை தலித்களுக்கு மறுத்து விட்டு தலித்களை சுத்தமற்றவர்கள் எனக் கூறும் பார்ப்பனீய வஞ்சகத்துக்கும் இதற்கும் என்ன வேறுபாடு?
அங்கீகாரம் பெறாமல் விதிகளை மீறி கோடிக்கணக்கில் கட்டிடம் கட்டியவன் கூட உள்ளே இருக்கலாம். உழைக்காமல் தரகு வேலை பார்ப்பவன் உள்ளே இருக்கலாம். முழுக்க முழுக்க அந்நிய நாட்டுக்கு சேவை செய்யும் நிறுவனங்கள் உள்ளே இருக்கலாம். ஆனால் இந்த மாநகரின் மைய நரம்பாய் உழைக்கின்ற குடிசைவாசிகள் மட்டும் நகருக்குள்ளே இருக்கக் கூடாதா?
செம்மண் சேரியில் இருந்து பிழைப்பு தேடி சென்னை வருவதும் இனி சுலபமில்லை எனும்படிக்கு, மாநகரப் பேருந்துகளைக் கூட மாற்றி அமைத்து வருகின்றனர். 4ரூபாய் கொடுத்து பயணம் செய்த வெள்ளைப் பலகை (ஒயிட் போர்டு) பேருந்துகளைக் குறைத்து அதே தடங்களில் சொகுசுப் பேருந்துகளை விட்டு 11 ரூபாய் வரை கொள்ளை அடிக்கத் தொடங்கி விட்டது, அரசு. ஆக, செம்மண் சேரியில் இருந்து தினமும் பயணித்து, கிடைக்கப் போகும் கொஞ்ச நஞ்ச ஊதியத்தையும் வழிப்பறி செய்யப் போகிறது அரசு.
இக்கொடுமைகளை அடுத்து வரும் அரசு தீர்த்து விடும் என்றோ, அல்லது வேறு ஏதாவது ஓட்டுக் கட்சி இதனைப் போராடிப் பின் வாங்க வைக்கும் என்றோ நம்ப இடமில்லை.
உலக வங்கியின் கட்டளைப்படி ஆடுபவர்கள்தான் கருணாநிதியும், ஜெயலலிதாவும். உலகவங்கி போட்டுத்தந்திருக்கும் மாஸ்டர்பிளானில் இச்சதித் திட்டம் பற்றிக் குறிப்பிட்டிருப்பது தெளிவாகத் தெரிந்திருந்தும் கேப்டன் முதல் ராமதாசு வரை, வலது இடது கம்யூனிஸ்ட்கள் முதல் பாஜக வரை எந்த ஓட்டுக் கட்சியாவது இந்த அநியாயத் திட்டத்தைக் கண்டித்திருக்கின்றதா?
25000 கோடிகள் வழங்கும் உலக வங்கியின் கட்டளைக்கெல்லாம் அடிபணியும் அரசு நமக்கு இனியும் தேவையா?
கிழக்கு கடற்கரை சாலை, ராஜீவ் காந்தி சாலை, பத்துக்கும் மேற்பட்ட மேம்பாலங்கள் என அனைத்திலும் உலக வங்கி கடனுதவி செய்து அதற்கான கப்பத்தை அள்ளிக்கொண்டு செல்கிறது.
மாஸ்டர்பிளானை மட்டும் தனியே எதிர்ப்பதனால் இச்சதியை முறியடித்திட இயலாது. உலகமயம்,தனியார் மயம், தாராளமயம் ஆகியவற்றின் துணையுடன் உலக வங்கி மூலமாக நம் நாடு காலனியாக்கப்பட்டு வருகிறது. காலனியாக்கத்தை எதிர்த்து விடுதலைப்போர் நடத்த வேண்டிய சூழலில் நாடு இன்றுள்ளது.
உழைக்கும் மக்களின் இருப்பிடங்கள் அகற்றப்படுவதை எதிர்த்து போராடவும், மாஸ்டர் பிளானைக் கைவிடவும்,பன்னாட்டுக் கம்பெனியின் கந்துவட்டி நிறுவனமான உலக வங்கியின் சதியில் இருந்து நம் மக்களையும் நாட்டையும் காப்பாற்றவும் உழைக்கும் மக்கள் அனைவரும் இணைந்து போராட வேண்டியதன் அவசியம் உருவாகி உள்ளது.
Labels: இந்திய ஆட்சியாளர்கள், இன்றைய இந்தியா, மறுகாலனியாதிக்கம்
Saturday, September 08, 2007
சென்னை பாண்டிபஜாரில் அணுகுண்டு விழுந்தால் !
ராணுவ ஒப்பந்தம் என்ற பெயரில் 123 உள்பட நாட்டையே அடிமையாக்க கூடிய சரத்துகளுடன் அமெரிக்காவுடன் போட்ட ஒப்பந்தத்தை நடைமுறைப் படுத்த ஓட்டுக் கட்சிகள் அனைத்தும் ஒன்றாக வேலை செய்கிறார்கள்.
வெள்ளைக்காரனுங்க ஆரம்பித்த காங்கிரஸ் என்கிற கம்பெனி நாட்டை விற்பதை வெகு விரைவாக செய்துகிட்டு இருக்கார்கள். பா.ஜ.க என்கிற மதவெறி கட்சி இதையே சொல்லி மீண்டும் ஆட்சியை பிடிக்க தயாராகி வருகிறார்கள். எதுக்கு இதே பணியை தொடரந்து செய்யத்தான்.
'என்ரான்' என்கிற கொள்ளைக்காரனை கொண்டுவருவதற்கு இந்த இரண்டு பேரும் சேர்ந்தே வேலை செய்ததை திரும்பி பார்த்தால் புரியும். அன்றைக்கு நரசிம்ம ராவ், அலுவாலியா, அடுத்து வந்த வாஜ்பாய், பால்தாக்ரே என்ற அடிவருடி லிஸ்டே என்ரானுக்கு வக்காலத்து வாங்கியது. குறிப்பாக இன்றைக்கு 123 யினால் ஆபத்து இல்லை என கூட்டம் போட்டு திரிகிற கார்த்திக் சிதம்பரம் என்கிற புதிய அடிமையின் அப்பா சிதம்பரம் தான் என்ரானின் வழக்கிலாக இருந்தவர்.
அடுத்து போலி கம்யூனிஸ்டுகள்...கேட்கவே வேண்டாம்...அப்பட்டமாக எதிரியாக மாறி ஆளும் வர்க்கத்துக்கு வேலை செய்கிறார்கள். 2 வருஷமாக ஒப்ப்ந்தத்தை பற்றி வாய்திறக்காமல் இப்ப எதிர்க்கிற மாதிரி நடிச்சுட்டு...அடுத்து கூட்டு ராணுவ நடவடிக்கையினை எதிர்க்க கூட்டம் போட்டு கொண்டு இருக்கிறாரகள். இப்படி கம்யூனிஸ்டு பெயரில் ஆளும் வர்க்க அடியாள் வேலை செய்கிறதுக்கு ஒரு கட்சி இந்தியாவில....இப்ப மட்டுமா...போலி சுதந்திர காலத்துல இருந்தே காங்கிரஸ் க்கு வாலாக செயல்பட்டவர்கள் ஆயிற்றே.
கூட்டு குழுவின் முடிவினை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று கபில்சிபில் சொல்ல போலிகள் அப்படியெல்லாம் கிடையாது என்று இவர்களாகவே சமாதானம் சொல்லிக் கொள்கிறார்கள்.
123 ஒப்ப்ந்தமா? நிர்பந்தமா? என்று வெளியீடு போட்டு மக்களை குழப்புகிறாரகள். இவர்கள் அயோக்கியத்தனத்தை மூடி மறைக்க எப்படியெல்லாம் வித்தை காட்டுகிறார்கள் பாருங்க.
சரி விஷயத்துக்கு வருவோம்...அணுசக்தி ஒப்பந்தம் என்பது நாட்டை அடிமையாக்க கூடிய பல சரத்து இருக்கு, தற்போது வெறும் 3 சதவீதம் அணுசக்தி மூலம் கிடைக்கும் மின்சாரத்தை 7 சதவீதம் என்று 2020 ல் மாற்ற 5 லட்சம் கோடியினை போடப்போறேன் என்பது என அனைத்தையும் விட்டுட்டு பாதுகாப்பு என்கிற ஒரு விஷய்த்தை பார்க்கலாம்.
சுனாமி வந்தப்ப பார்த்தோமானால் 10 நாட்களுக்கு பிணத்தை கூட அப்புறப்படுத்த வக்கில்லாமல் இருந்தது அரசு.
- படிப்பறிவு அற்ற மக்களுக்கு
- பாதுகாப்பு பற்றி ஒன்றும் தெரியாத மக்களுக்கு
இவர்கள் அதிகப்படிய கொண்டு வர இருக்கும் அணுசக்தி உலைகள் என்பது நாளை விபத்துகுள்ளானால் என்ன நடக்கும் என்பதற்கு ஒரு உதாரணம் கீழே உள்ளது. இது கூட நாங்கள் சொல்லவில்லை, இப்படி நாட்டை மறுகாலனியாக்குவதற்கு தோல் கொடுத்து வரும் போலிக் கம்யூனிஸ்டுகளின் இதழ் ஒன்றில் தானுங்க இந்த செய்தி வந்துள்ளது.
Related:..
அமெரிக்க அடிமை நாய் மன்மோகன் வழங்கும் 123 அல்லது அடிமை சாசனம் !!
.123 ஒப்பந்தமும் போலி கம்யூனிஸ்டுகளின் நீலிக் கண்ணீரும் !..
60 ஆண்டு கால சுதந்திரம் யாருடைய நலன்களுக்காக பயன்பட்டு இருக்கிறது !!
மலபார் பன்னாட்டு கப்பல் பயிற்சியும் திரிபுவாதி சந்திப்பின் பித்தலாட்ட புரட்சியும்
Labels: அடிமை சாசனம், மறுகாலனியாதிக்கம்
Tuesday, September 04, 2007
நான் விஞ்ஞானி இல்லை கோமாளிதான் !! கலாம்-இன் ஒப்புதல் வாக்குமூலம் !!
2005 இல் அமெரிக்காவுடன் போடப்பட்ட இராணுவ ஒப்பந்தத்தின் ஒரு சரத்து தான் இந்த 123 ஒப்பந்தம். 123 ஒப்பந்தம் உள்பட மத்திய அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் (நாட்டை அன்னியனுக்கு விற்பதில்) ஒத்து ஊதி இருந்திட்டு இப்ப எதிர்க்கிற மாதிரி நடிக்கிற போலி கம்யூனிஸ்டுகளை போல ஒத்து ஊதின இன்னொரு சுகபோகி நம்ம அரசவை கோமாளி கலாம்.
லட்சக்கணாக்கான விவசாயி தற்கொலை செய்த நாட்டில், 83 கோடி பேருடைய தினசரி வருமானம் ரூ 20 ஆக இருக்கும் நாட்டில் அனைத்தையும் மூடி மறைத்து இந்திய நாடு 2020 வல்லரசு ஆகிவிடும் என்று நாடு படுதீவிரமாக மறுகாலனியாக்கப்பட்டு வருவதை மூடிமறைத்த இந்த கோமாளியும் 2005ல் போடப்பட்ட அடிமை சாசனம் (123) பற்றி வாய் திறக்கவே இல்லை.
இப்போது அடிமை சாசனம்(123) அமுல்படுத்த போகிற போது எதிர்க்கிற மாதிரி நாடகம் ஆடுகிற போலிகளை விட அப்பட்டமான அமெரிக்க அடிமை நாயாக காட்டி கொண்டு இருக்கிறார் கலாம்.
விஞ்ஞானிகள், நாட்டுப்பற்றாளர்கள், பத்திரிக்கையாளார்கள் என அனைவரும் 123 என்பது ஒரு அடிமை சாசனம் என்று கிழித்து வருகின்ற இந்த சூழ்நிலையில்; கலாம் நேற்று 'அணுசக்தி ஒப்பந்தம் அபூர்வமானது; முக்கியமானது' என்று கூறி தான் ஒரு கோமாளிதான் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.
இந்த ஆளு விஞ்ஞானியாக இருந்திருந்தால் "அடிமை சாசனம்" பற்றி தெரிந்து இருக்க வாய்ப்பு இருக்கும். கோமாளி யாச்சே ! அதுனால தான் ஒப்பதத்தைப் பற்றியோ அதனுடைய சரத்துகளைப் பற்றியோ வாய்திறக்காமல் ஒப்பந்தம் முக்கியமானது என்று 'மண்' மோகன் சப்பைக்கட்டுகளை விட கேவலமாக சப்பைக்கட்டு கட்டுகிறார்.
இதை விட அபாயகரமானது கோமாளியின் ' 2020 வல்லரசு' கனவு !
நாட்டின் நிலை என்னவென்றே தெரியாமல் பேசுகிறார் கலாம். மறுகாலனியாதிக்கத்துக்கு உதரணமாக சென்னையை எடுத்துக் கொண்டால் -
- சென்னை குடிசைகளில் 86% பேர் ஒரு வேளைதான் சாப்பிட்டு வருகிறார்கள்..
- 44% குடிசைப்பெண்கள் ரத்த சோகையால் செத்துக்கொண்டிருக்கிறார்கள்...
- ஆட்சியாளர்களோ நிமிட்ஸ் கப்பலில் வந்திறங்கும் அமெரிக்க கொலையாளிகளுக்கு கோடம்பாக்கத்து துணைநடிகைகளைக் கூட்டிக்கொடுத்துக் காவல் நிற்கிறார்கள்
- சென்னை குடிசைகளில் 21 சதவீதம் இளைஞர்களுக்கு ஒரு வேளை பட்டினிதான் பரிசாகக் கிடைக்கிறது.
- நகர விரிவாக்கம் என்று அவர்களில் 75000 குடும்பங்களை சென்னையை விட்டுத் துரத்த உத்தரவு போடுகிறது உலக வங்கி..
இப்ப வேலை கொடு என்கிற மக்களை பார்த்து அணுகுண்டு தர்றேன் என்கிறார்கள் ஆட்சியாளர்கள்;
கனவு காணச்சொல்லுகிறார் கலாம்.
இப்படிப்பட்ட கோமாளியின் யோசனைகளை வைத்தும் சிலர் கட்சி ஆரம்பித்து ஆட்சியை பிடிக்க (மக்களை கொள்ளையிட) கிளம்பி இருப்பது; கலாம் ஒப்புதல் வாக்குமூலத்தை விட நாட்டிற்கு அவர் ஏற்படுத்திய '2020' அபாயம் பயங்கரமானது என்பதை காட்டுகிறது.
Related:
..
அமெரிக்க அடிமை நாய் மன்மோகன் வழங்கும் 123 அல்லது அடிமை சாசனம் !!.
123 ஒப்பந்தமும் போலி கம்யூனிஸ்டுகளின் நீலிக் கண்ணீரும் !
..
60 ஆண்டு கால சுதந்திரம் யாருடைய நலன்களுக்காக பயன்பட்டு இருக்கிறது !!
மலபார் பன்னாட்டு கப்பல் பயிற்சியும் திரிபுவாதி சந்திப்பின் பித்தலாட்ட புரட்சியும்
Labels: அடிமை சாசனம், கோமாளி, மறுகாலனியாதிக்கம்
Saturday, September 01, 2007
வேணாம், குதிக்காத, மானம் போவுது.......·ப்ளீஸ், இதயாவது கட்டிக்கோ, சொல்றத கேளு, இல்லேன்னா அழுதுடுவேன்....! அழுதுடுவேன்....!!
Friday, August 31, 2007
ரிலையன்ஸ் பிரஷ்-யை மூட முடியாது - இந்திய சட்டம் சொல்கிறதாம் ! அப்ப என்ன வெங்காய மக்களாட்சி !!
இதனை அழித்து மொத்த இந்திய சில்லரை வணிகத்தை ஒரு சில பெரிய பன்னாட்டு & தரகு முதலாளி நிறுவனங்கள் கைப்பற்ற இன்றைக்கு இந்த சில்லரை வணிகத்தில் நுழைந்து பல சங்கிலி தொடர் கடையினை திறந்து வருகின்றனர்.
இதனை எதிர்த்து பாதிக்கப்பட்ட சிறு வணிகர்கள் ஆங்காங்கே சில தன்னிச்சையான போராட்டங்கள், அவனுடைய கடையினை சூறையாடுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.
இந்நிலையில் நேற்று பேட்டியளித்த வேளான் துறை அமைச்சர் பவார் "ரிலையன்ஸ் கடைகளை மூட முடியாது" என்றும்; உத்திரப்பிரதேசத்திலும், கேரளாவிலும் ரிலையன்ஸுக்கு விதித்த தடை நிரந்தரமாக இருக்காது என்றும் கூறியுள்ளார்.
"இந்திய நாட்டின் சட்டங்கள் எதையும் மீறாத எந்த ஒரு அமைப்பையும் நிரந்தரமாக மூடுவதற்கு, தடை செய்வதற்கு எந்த மாநில அரசுக்கும் அதிகாரம் கிடையாது" என்று அவர் சொல்கிறார்.
சரத்பவாரின் வாயிலிருந்தே இந்த நாட்டின் சட்டங்கள் எல்லாம் பணமுதலைகளின் நலனுக்கானவை மட்டுமே என்பது அம்மணமாக வெளிப்பட்டு விட்டது!!
சமீபத்திய சி.என்.என் தொலைக்காட்சியில் அணுசக்தி ஒப்பந்தம் குறித்து நாடாளுமன்ற எம்.பி க்களிடம் கேட்டபோது பெரும்பான்மை எம்.பி க்களுக்கு இந்த ஒப்ப்ந்தம் பற்றி ஒரு விவரமும் தெரியவில்லை.
ஆட்சியாளர்கள் மட்டுமல்ல, நாளுமன்றத்துக்கே அதிகாரம் இல்லை என்று நிரூபணமாகி விட்டது; 123 யை பற்றி விவாதிக்க நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்று சபாநாயகர் அறிவித்துள்ளார்.
காரணம், இந்திய ராணுவ & வெளியுறவு ஒப்பந்தத்தை விவாதிக்க நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்று 'இந்திய சட்டம்' வரையுறுக்கப்பட்டுள்ளது.
இந்த விஷயத்திலிருந்து தெரியவருவது என்ன? இந்திய அரசியல் சட்டம் இந்திய மக்களுக்கானது அல்ல.அது பன்னாட்டு கொள்ளையர்களுக்கும், தரகு முதலாளிகளுக்கும் ஆனது என்பதும் 'நாடாளுமன்றம்' அதிகாரம் ஏதுமற்ற வெற்று அரட்டைமடம் என்பதும் தான்.
அடிமை சாசனம் (123) பற்றி வாயே திறக்காமல் 'இந்தியா 2020' வல்லரசு ஆகிவிடும் என்று பொய் பேசிக் கொண்டு திரிந்த முன்னாள் 'அரசவை கோமாளி' அப்துல்கலாமுக்கும் தெரியும்.
..
123 ஒப்பந்தமும் போலி கம்யூனிஸ்டுகளின் நீலிக் கண்ணீரும் !
Labels: தாராளமயம், மறுகாலனியாதிக்கம், ரிலையன்ஸ் முற்றுகை
Friday, August 24, 2007
அமெரிக்க அடிமை நாய் மன்மோகன் வழங்கும் 123 அல்லது அடிமை சாசனம் !!

மனித குலத்தையே வேரறுக்கக் கூடிய இந்த அணு ஆயுதத்தை முதன்முதலில் மனிதன் மீது பிரயோகித்த பெருமையைத் தன்னுடைய தாக்கிக் கொண்டாலும், அந்த அணுசக்தியிலிருந்து பலன் பெற்று மின்சாரம் தயாரிக்கும் வழிமுறை அமெரிக்காவிடம் இல்லை. சோவியத் ரஷ்யாவில்தான் 1954 ஆம் ஆண்டு முதன் முதலில் அணுசக்தியிலிருந்து மின்சாரம் தயாரிக்கப்பட்டது. ஆனால் அதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, 1951 ல் இருந்தே இந்தியாவில் அணுசக்தி குறித்த ஆராய்ச்சிகளையும், அணு உலைகளை அமைத்து அணுசக்தியை மக்கள் நலனுக்குப் பயன்படுத்துவது பற்றியும் இந்திய அணுசக்தித் துறையின் தந்தை என அழைக்கப்படும் ஹோமி பாபா திட்டமிட்டு செயல்படுத்தியுள்ளார்.
அப்போதிருந்தே உலக அளவில் அணுசக்தித் துறையில் மற்ற நாடுகளுடன் இந்தியா போட்டி போட்டு வளர்ந்து வருகிறது. இன்றளவும் அதிவேக ஈனுலைகள் என்ற அணுசக்தித் தொழில்நுட்பத்தில் இந்தியா தான் முதலிடத்தில் உள்ளது. தோரியம் எனும் தனிமத்தைக் கொண்டு இயங்கக் கூடிய இந்த "அதிவேக ஈனுலைகள்" யுரேனியம் கொண்டு இயங்கும் மற்ற நாட்டு அணு உலைகளை விட 600 மடங்கு அதிக சக்தியைக் கொண்டது என்று முன்னாள் இந்திய அணுசக்தித்துறைத் தலைவர் சிதம்பரம் கூறியுள்ளார்.
இது மட்டுமின்றி வேறெந்த நாட்டின் உதவியுமின்றி சொந்தநாட்டிலேயே தயாரித்து, இதுவரை இரண்டு முறை அணு குண்டு வெடித்துச் சோதனை நடத்தியுள்ளது இந்தியா.இவ்வாறு மின்சாரத் தேவைக்கான அணுசக்தி ஆராய்ச்சி தொடங்கி, பக்கத்து நாடுகளை மிரட்டி அணுகுண்டு வெடிப்பது வரை இந்தத் துறையில் சொந்தத் தொழில்நுட்பத்தையே இந்தியா பயன்படுத்தி வந்துள்ளது.
ரஷ்யாவின் உதவியுடன் கல்பாக்கத்திலும், அமெரிக்காவின் உதவியுடன் தாராப்பூரிலும் அணுமின் நிலையங்களை நிறுவினாலும் அவை முற்றிலும் இந்திய அரசின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டவையாகவே இருந்துள்ளன.
ஆனால் இப்போது '123 ஒப்பந்தம்' என்ற பெயரில் அமெரிக்காவுடன் இந்தியா செய்துள்ள அணுசக்தி ஒப்பந்தம் இந்தியாவின் இறையாண்மைக்கு ஆப்பறையும் விதத்தில் வந்துள்ளது.
இந்த ஒப்பந்ததின்படி அடுத்த 40 ஆண்டுகளுக்குத் இந்தியா அமெரிக்காவிடமிருந்து யுரேனியத்தை இறக்குமதி செய்து கொள்ளும். அப்படி இறக்குமதி செய்யும் யுரேனியத்தைக் கொண்டு மின்சாரம் மட்டுமே தயாரிக்க வேண்டும், அணுகுண்டு தயாரிக்கக் கூடாது. மீறி அணுகுண்டு தயாரித்தால் அமெரிக்கா கொடுத்த யுரேனியத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளும். இந்த யுரேனியத்தை நம்பி இந்தியா பல லட்சம் கோடி செலவில் அணு உலைகளை உருவாக்கியிருந்தாலும் அது பற்றி அவர்களுக்குக் கவலையில்லை. அணுகுண்டு வெடிக்காவிட்டாலும் அமெரிக்காவின் அனைத்து ராணுவ நடவடிக்கைகளுக்கும், வெளிநாட்டுக் கொள்கைகளுக்கும் இந்தியா ஒத்துழைப்புத் தரவேண்டும்.
ஏற்கனவே இரண்டு முறை ஈரான் -க்கு எதிராக ஐ.நா வில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்துக்கு இந்தியா வாக்களித்து உள்ளது.
இப்போது ஈரானை தாக்க அமெரிக்கா திட்டமிட்டு வருகிறது. அவ்வாறு தாக்குதல் தொடுக்குமானால் அப்போது இந்தியா கூலிப்படை அனுப்பி உதவ வேண்டும்.
அதேபோல மற்ற நாடுகள் அனுமதிக்காத 'நிமிட்ஸ்' போர்க் கப்பலை இந்தியக் கடலோரத்தில் இந்தியா அனுமதித்து உள்ளது. அந்த கப்பல் போர்க்கழிவுகளை கொட்டிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.
இதேபோல எதிர்காலத்திலும் இதுபோன்ற கப்பல்களை தங்கு தடையின்றி வந்து போக அனுமதிக்க அமெரிக்கா நிர்பந்திக்கிறது.
அணு ஆராய்ச்சியை இந்திய விஞ்ஞானிகளைக் கொண்டு, குறைந்த விலைக்கு நடத்தித் தர அமெரிக்கா கோருகிறது.அணு உலைகளை கண்காணிக்க நிபுணர்குழுவினை இந்தியாவுக்குள் வந்து போக அணுமதிக்க வேண்டும் என்று நிர்பந்திக்கிறது..
இப்படிப்பட்ட நாசகார, மோசடியான ஒப்பந்தத்தை தாய்நாட்டின் மீது பற்றுக் கொண்ட யாரும் ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார்கள்.
ஆனால் அமெரிக்க அடிமை நாயாய் சேவகம் செய்யும் மன்மோகன் சிங் இதனை ஏற்று கொண்டுவிட்டார். மக்களையே சந்திக்காமல், தேர்தலிலேயே நிற்காமல் இந்த நாட்டின் பிரதம மந்திரியாய் உட்கார்ந்து கொண்டு இப்படி தாய்நாட்டை அமெரிக்காவுக்கு விலை பேசியுள்ளார்.
"நீ என்ன வேண்டுமானாலும் கூறிக்கொள், உன்னால் என்ன செய்ய முடியுமோ செய்து கொள். ஆனால் ஒப்பந்தத்தை திரும்ப பெற முடியாது. குறைந்த பட்சம் இது குறித்து விவாதம் செய்ய முடியாது." என்று மன்மோகன் சிங் கூறிகிறார்.
அமெரிக்க எஜமானன் போட்ட உத்தரவை இந்திய அடிமைகள் பரிசீலிப்பதா என்று இவர் விடும் அறிக்கைகளைப் படிக்கும் போது சிறிதளவேனும் தேசப்பற்றுடைய எவருக்கும் ரத்தம் கொதித்துப் போகும்.
இதையெல்லாம் விட்டுவிட்டு அணு குண்டு வெடிக்க முடியாது என்று கூறி இதனை எதிர்க்கிறது பா.ஜ.க. இந்த தேசவிரோத ஒப்பந்தம் நிறைவேறனுமா, வேண்டாமா என்று இவர்கள் கூறுவதில்லை. என்ன செய்ய முடியும், காங்கிரஸ் அல்சேஷன் என்றால் பா.ஜ.க டாபர்மேன் இல்லையா?
இந்த ஒப்பந்தத்தை குறித்த பேச்சுவார்த்தையை ஆரம்பித்துவைத்ததே வாஜ்பாயிதான் என்று குட்டை உடைத்துவிட்டார் எம்.கே.நாராயணன் (இந்திய பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்) அத்தோடு இவர்களின் குலைக்கும் சத்தம் ஓய்ந்துவிட்டது.
"ஒப்பந்ததை ரத்து செய்யாவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என மிரட்டிய போலிக் கம்யூனிஸ்டுகளைப் பார்த்து" மன்மோகன் சிங் "உங்களால் என்ன செய்ய முடியும், ஆட்சிக்கு ஆதரவை வாபஸ் வாங்கிக் கொள்வீர்கள்; வாங்கிக் கொள்ளுங்கள்" என்று கூறிவிட்டார்.
எனது எஜமானனுக்குச் சேவை செய்ய முடியாத ஆட்சி இருந்தாலென்ன போனால் என்ன கருதுகிறார் போலும்.
இந்தப் பிரதமர் பதவி அமெரிக்கா எனக்குப் போட்ட பிச்சை, 123 ஒப்பந்தத்திற்காக அதனை இழக்கவும் நான் தயங்கமாட்டேன் என்று கூறிய உடன் போலிக் கம்யூனிஸ்டுகளுக்கு பா.ஜ.க வின் மதவெறி நினைவுக்கு வர ஆட்சியையெல்லாம் கவிழ்க்க மாட்டோம் சும்மா இது பற்றி விவாதம் மட்டும் பண்ணினால் போதும், ஓட்டெடுப்பு கூட வேண்டாம் என்று இறங்கிவந்தார்கள்.
ஆனால் மன்மோகன் சிங்கோ தான் பிடித்த அமெரிக்க உச்சாணிக் கொம்பில் நின்று கொண்டு சிறிது கூட இறங்காமல் உனக்கும் பெப்பே உங்கப்பனுக்கும் பெப்பே என விவாதம்கூட செய்ய முடியாது என்று கூறிவிட்டார்.
உடனே 'தோழர்கள்' கடுமையான விளைவுகள் நேரிடும் என்று திரும்பவும் லாவணிபாட ஆரம்பித்து விட்டனர்.
கடந்த 100 ஆண்டுகளில் 50க்கும் மேற்பட்ட போர்களில் ஈடுபட்டு, உலகம் முழுவதிலும் பல லட்சம் மக்களைக் கொன்று குவித்த ஒரு ரத்தவெறி பிடித்த ஏகாதிபத்திய மிருகம் அமெரிக்கா. அதன் காலடியில் நமது நாட்டை,அதன் இறையாண்மையை, நமது எதிர்காலத்தை, மற்ற நாடுகளுடன் நமது உறவை அடமானம் வைக்கும் அடிமைச்சாசனம்தான் 123 ஒப்பந்தம்.
இந்த உண்மை எல்லா அரசியல்வாதிக்கும் தெரியும்.
Related:
ஈராக் : அமெரிக்கப் பயங்கரவாதத்தின் இரத்தச் சாட்சி
அமெரிக்க பயங்கரவாதத்தின் வரலாறு
உலகில் அதிகமாக தூக்கு தண்டனையினை நிறைவேற்றி மனிதர்களை கொல்வதும் அமெரிக்காதான் !!
Labels: அடிமை சாசனம், மறுகாலனியாதிக்கம்
Wednesday, August 15, 2007
Saturday, August 11, 2007
எங்க நாடு ஆகுது வல்லரசு அமெரிக்கா போலே...
நாட்டை பகுதி பகுதியாக அந்நியனுக்கு சிறப்பு பொருளாதார மண்டலம் என்ற பெயரில் தாரை வார்க்கிறார்கள், இன்னொருபுறம் அனைத்து துறைகளிலும் பன்னாட்டு நிறுவனங்களை அனுமதிச்சு உள்நாட்டு தொழில்களை நாசமாக்குகின்றனர்,அனுசக்தி ஒப்பந்தம் என்ற பெயரில் அமெரிக்கனுக்கு அடிமை சாசனம் எழுதிக்கொடுக்கின்றனர்.
இதில் எந்த ஓட்டுக்கட்சிக்கும் கருத்துவேறுபாடு என்பதே கிடையாது.
உதாரணமாக தனியார்மய, தாராளமய, உலகமய கொள்கையினை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நடைமுறைப்படுத்த மாட்டோம், உலக வர்த்த கழகத்தில் இருந்து இந்தியா வெளியேறும் என்பது போன்ற வாக்குறுதிகளை எந்த ஓட்டுக்கட்சிக்கார்களும் சொல்வது கிடையாது.
இன்றைக்கு சிறப்பு பொருளாதார மண்டலத்தை எதிர்க்குறோம்; அனுசக்தி ஒப்பந்தத்தை எதிர்க்குறோம்; ரிலையன்ஸை எதிர்க்குறோம் என சொல்கிற எவரும் இதற்கனைத்துக்கும் அடிப்படையான மேலே உள்ள விஷயத்தை பற்றி மூச்சு கூட விடுவதில்லை.
ஏன்னா இவர்கள் ஆட்சிக்கு வந்தாலும் இதையேதான் நடைமுறைப்படுத்த போகிறார்கள்.இப்பவே மற்ற மாநிலங்களிலும் தங்களுடைய கட்சி ஆட்சியிலும் இத்தகைய கொள்கைகள் தான் நடைமுறைப்படுத்துகிறது என்றும் இந்த ஓட்டுக்கட்சி ஆட்சியாளர்களுக்கு தெரியும்.
ஆக நாடு காலனியாக்கப்பட்டு வருவதில், காலனியாக்குவதில் காங்கிரஸ், பா.ஜ.க, போலி கம்யூனிஸ்டுகள், தி.மு.க, அ.தி.மு.க, பா.ம.க, தே.மு.தி.க, சரத்குமார் என அனைவருக்கும் முழு சம்பந்தம்.
இனியும் இந்திய ஆட்சியாளர்கள் மற்றும் கலாம்களின் பேச்சை நம்பிக்கொண்டு கனவு காண முயல்வதற்கு எந்த அடிப்படையும் இல்லை.
போராடுவதை தவிர வேறு மாற்று இல்லை என முகத்தில் அறைந்து சொல்கிறது தினமும் வரும் செய்திகள்.
Labels: இந்திய ஆட்சியாளர்கள், செய்தி விமர்சனம், மறுகாலனியாதிக்கம்
Friday, July 27, 2007
உலக வங்கியிடம் ஏன் கை ஏந்துகிறாய்?
2) தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளின் மூலம் கடந்த ஆண்டு வருமானம் ரூ 7000 கோடி.
டாஸ்மாக் கடை மூலம் இவ்வளவு வருமானம் வரும்போது உலகவங்கியிடம் கடன் கேட்பது எதற்காக?
அவ்வாறு பணம் வாங்கினால் வட்டி கட்டப்போவது யார்?
இந்த கடனுக்காக உலகவங்கி போட்ட உத்தரவுகள் என்னென்ன?
Labels: இந்திய ஆட்சியாளர்கள், மறுகாலனியாதிக்கம்
Thursday, June 21, 2007
திமுக-பாஜக வழங்கும் 'ராமன் கட்டிய பாலம்' அரட்டை அரங்கம்
மன்னாருக்கும் தனுஷ்கோடிக்கும் இடையில் ஆதாம் பாலம் என்றும் ராமன் பாலம் என்றும் அழைக்கப்படும், கடலுக்கடியில் கிடக்கும் மணல்திட்டுகளை வெட்டி எடுக்கும் பணி சேது சமுத்திரத் திட்டத்திற்காக ஆரம்பித்திருக்கும் இவ்வேளையில் பார்ப்பனர்கள் அனைவரும் ஒரே அணியில் இணைந்து கொண்டு 'ராமர் கட்டிய பாலத்தை இடிக்காதே!' என ஓலமிட ஆரம்பித்துள்ளனர்.
பாஜக, விஸ்வ இந்து பரிசத் போன்ற இந்து மதவெறிக் கூட்டத்துடன் சுப்பிரமணிய சாமியும், பார்ப்பன ஜெயலலிதாவும் அறிக்கை மேல் அறிக்கை விடுகின்றனர். பதிலுக்கு ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் இருந்தும் பதில் அறிக்கை என லாவணிக்கச்சேரி களை கட்டி உள்ளது.
இந்த லாவணிக்கச்சேரியை ரசிப்பவர்கள் சில குறிப்பிட்ட விசயங்களை மறந்து விடும் செலக்டிவ் அம்னீசியா நோயாளிகளாகவே இருந்து விட்டால்தான் எவ்வளவு நல்லா இருக்கும்!
'வெடிகுண்டு வைத்து ராமர் பாலத்தைத் தகர்க்கப் போகின்றார்கள்' என இல.கணேசன் பீதியூட்டி 'தொன்மையான வரலாற்று சின்னமாகவும் மக்களின் நம்பிக்கைக்கு ஆதாரமாகவும் விளங்கும் பாலம்' என்று மணல்திட்டைக் காப்பாற்றத் துடிப்பதைக் கேட்பவர்கள், திட்டப்பணி நடைபெறும் பாதை எண்-6 வழியாக (ஆதாம் பாலம்) கால்வாய் வெட்டச் சொன்னதே முந்தைய பாஜக அரசின் திருநாவுக்கரசர் தலைமையிலான அமைச்சகம்தான் என்பதை மறக்க வேண்டும்.
பாராளுமன்றத்தில் பாஜகவின் மல்ஹோத்ரா 'பாலத்தை இடித்தால் அரசு கவிழ்ந்துவிடும்' என சாபமிட்டபோது டி.ஆர்.பாலு முழங்கினாரே '400 ஆண்டு காலப் பழைமை வாய்ந்த மசூதியை இடித்த நீங்கள் இப்போது இல்லாத பாலத்தை இடிப்பதாக என்மீது பழி போடுகிறீர்கள்' என்று! மசூதி இடித்த பின்னர்தான் தேஜகூ அரசில் இதே பாலு மந்திரியாய் இருந்து ஒரே குட்டையில் புரண்டார் என்பதை மறக்க வேண்டும்.
'ஆங்கிலேயர்கள் வரைந்த படங்களில்கூட ராமர் பாலம் இருந்தது. தற்போது இடிக்கப்படும் பாலத்தின் கற்களை இரகசியமாக கப்பலில் எடுத்துச் செல்கின்றனர். பிரதமரும் ஜனாதிபதியும் உடனே தலையிட வேண்டும்' என்று ஊளையிடும் ஜெயா மாமியின் அதிமுகதான் 2001 தேர்தல் அறிக்கையில் 'ஆதாம் பாலத்து மணலை அகற்றி கால்வாய் அமைக்கப்படும்' என்று சொன்னதென்பதை மறக்க வேண்டும்.
இந்த வாதப்பிரதிவாதத்தில் கருணாநிதி 'அயோத்தியில் ராமர் கோவில் என்று சொல்லி பாபர் மசூதியை இடித்து அதன் காரணமாக ரத்த ஆறு ஓடக் காரணமானவர்கள்'தான் சேதுக்கால்வாயை எதிர்க்கிறார்கள் எனச் சாடினார். அதே மதவெறியர்கள் 2002ல் குஜராத் முஸ்லிம்களை மாதக்கணக்கில் கொன்று போட்டபோது 'அது உள் மாநிலப்பிரச்சினை' என்று அவர் சொன்னதை மறக்க வேண்டும்.
இந்த அரட்டைகளைக் காது கொடுத்துக் கேட்பபவர்கள் இந்த அறிக்கைப்புலிகளைக் கேள்வி எதுவும் கேட்கப் போவதில்லைதான்.
தயானந்த சரஸ்வதி எனும் பண்டாரம் 'ராமேஸ்வரம் கடல் பகுதியில் உள்ளது இயற்கையான பாலமல்ல. கி.பி. 15 ஆம் நூற்றாண்டு வரை அப்பாலத்தில் மக்கள் சென்று வந்தனர்' என்று சொல்கிறார். 'அப்படியென்றால் 11ஆம் நூற்றாண்டில் ராஜராஜ சோழன் ஏன் அப்பாலத்தைப் பயன்படுத்தாமல் கடற்படையை ஏவி ஈழம் வென்றான்?' என்று அவரை யாரும் கேட்கப் போவதில்லை.
'பலகோடி இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் ராமர் பாலத்தை இடிப்பதை மைய அரசு செய்யக்கூடாது. சேதுக்கால்வாயால் வெளி நாட்டவருக்குதான் அதிகப்பலன்' என்று திடீர் தேசப்பற்றை விதைக்கும் விஷ்வ இந்து பரிசத், தனக்கு நன்கொடைகளை அமெரிக்கா, பிரிட்டனில் இருந்து ஏன் பெறுகின்றது? என யாரும் கேட்கப்போவதில்லை.
சேதுக்கால்வாய்க்காக வாதாடுவதற்கென்றே திமுக,மதிமுக,அதிமுக,திமுக, மீண்டும் மதிமுக எனப் பலமுறை கட்சி மாறிய மதிமுக அறிவுஜீவி கே.எஸ்.ராதாகிருஷ்ணனிடம் 'ஜெயாவின் சேதுக்கால்வாய் எதிர்ப்பு' பற்றி யாரும் கருத்து கேட்கப் போவதில்லை.
சொல்லி வைத்த மாதிரி எல்லோரும் 'அமெரிக்காவின் நாசாவே வெளியிட்டிருக்கும் செயற்கைக்கோள் படத்தில் ராமர் பாலம் இருக்கிறது' என்கிறார்கள். அவர்களிடம் 'நாசாவின் இணைய தளமோ, கடலில் நடக்கும் இயற்கை மாற்றத்தால் உண்டான மணல்திட்டுக்களே அவை. அங்கு மனிதனால் உருவாக்கப்பட்ட எவ்விதமான கட்டிடங்களும் இல்லை' எனச் சொன்னதையும், 'நாசா சொன்ன மணல் திட்டுக்களைப் பாலம் எனத் திரித்தவர்கள் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்கத்தினர்தானே!' என்பதையும் யாரும் கேட்கப் போவதில்லை.
ராமர் பாலம் கட்டினாரா? அது பாக் நீரிணைப்பில் (இலங்கை-இந்தியாவைப் பிரிக்கும் நீர்ச்சந்தி)தான் உள்ளதா? என்ற விவாதம் இல.கணேசனுக்கும் திமுகவுக்கும் இடையே நடந்து வருகிறது.
'மொகலாயர் காலத்து நூல்களிலும், தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் உள்ள எண்ணற்ற நூல்களிலும் ராமர் கட்டிய பாலத்துக்கு ஆதாரம் உள்ளது' என இல கணேசன் சொல்லவே, டி.ஆர். பாலு சரஸ்வதி மகால் நூலகத்திற்கு சென்று 4 மணி நேரம் குறிப்பெடுத்தார். பெரியாரை ரவிக்குமார் தொடர்ந்து அவதூறு செய்து வந்தபோது கூட திமுக காரர்கள், அதற்கு மறுப்பு சொல்ல 4 மணிநேரம் பெரியார் நூல்களைத் தேடி இருக்க மாட்டார்கள். உடனே 'நூலகத்தில் நுழைந்து ஆதாரங்களை அழித்தார்' என்று பாசிச ஜெயா சொன்னார். அதையே பாஜகவும் வாந்தி எடுத்தது. பாராளுமன்றத்தில் 'பாலத்தை இதிகாச ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் வாதாடத் தயார்' எனப் பாலு அறிவித்ததும், ஆதாரப்புளுகுகளை நிறுத்தி விட்டு பாஜக 'இது இந்துக்களின் நம்பிக்கை சம்பந்தப்பட்ட விசயம்' எனச் சொல்ல ஆரம்பித்தது.
இதையெல்லாம் காது குளிரக் கேட்ட பிறகு ராமன் கட்டிய பாலம் குறித்து நமது மண்டைக்குள்ளும் சில கேள்விகள் எழுகின்றன.
ராமனே கட்டிய பாலம் என்கிறார்களே! அவன் கட்டியது உண்மை என்றே கொண்டாலும் ஆனானப்பட்ட ராமன் கட்டிய பாலத்தையும் கடல் விழுங்கி விட்டதே.. அதை ஏன் இப்போது இடிக்கக் கூடாது?
தமிழக மக்களின் சிரமத்தைக் குறைத்துப் போக்குவரத்தை மேம்படுத்தவா ராமன் பாலம் கட்டினான்? மாற்றானிடம் சென்று விட்ட அல்லது கடத்தப்பட்ட தன் பெண்டாட்டியை மீண்டும் அழைத்து வரத்தானே அந்தப் பாலத்தைக் கட்டினான்?
இலங்கைக்கு செல்ல, கடலைக் கடக்க பாலம் கட்டிய ராமன், பாம்பனில் இருந்து ராமேஸ்வரம் வரை எப்படிப் போனான்?
ராமன் கட்டிய பாலம் தனுஷ்கோடியில் இருக்கையில் அனுமன் பறக்கையில் கீழே விழுந்ததால் உருவானதாகச் சொல்லப்படும் மருத்துவ மலை மட்டும் ஏன் கன்னியாகுமரிக்கருகில் இருக்கிறது?
'ராமன் பாலத்துக்கு 15 லட்சம் வருச வரலாறுண்டு' என்று ஜெ.யும் பாஜகவும் சொல்கிறார்கள். மனித இனம் உருவாகியே 5 லட்சம் ஆண்டுகள்தானே ஆகின்றன.
ராமன் பாலத்தை உடைப்பது குறித்துக் குதிக்கும் ராம.கோபாலன் கிராமங்களில் இன்னமும் இருக்கும் ரெட்டை டம்ளர்களை உடைக்க எப்போது வருவார்?
ராமநாதபுரம் மாவட்டத்திலே மலைகள் ஏதும் இல்லையே. பாலம் கட்ட பெரும்பாறைகளுக்கு ராமன் என்ன செய்தான்? கரசேவை நடத்திக் கல் வரவழைக்க அன்றைக்கு அத்வானி போன்றவர்கள் இல்லையே!
இவ்வளவு பழமையான பாலத்தைக் காக்க ஏன் இவர்கள் ஆண்ட 6 ஆண்டுகளில் தொல்பொருள் சின்னமாக அதனை அறிவிக்கவில்லை? உமாபாரதி சுரங்கத்துறை அமைச்சராக இருந்தபோது அப்பகுதியில் 21 மீட்டர் வரை தோண்டிப்பார்த்தும் கட்டிடங்கள் ஏதும் தென்படாததாலா?
உண்மையில் பாக் நீரிணைப்பில் பாலம் இருந்ததா? கடலியலாளர் ஜெயகரன் "நூறாண்டுகளுக்கு 1 மீட்டர் வரை கடல் மட்டம் உயர்ந்து வருவதால் 5000 ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழ்நாட்டுடன் தரையால் இணைக்கப்பட்டிருந்த இலங்கை தீவாகிப் போனது" என்பதைப் பல ஆதாரங்களுடன் சொல்கிறார். (ஆதாரம்:- 'குமரி நில நீட்சி' ஜெயகரன்)
லட்சக்கணக்கான வருசங்கள் என்ன, 5000 வருசத்துக்கு முன்னர் வெறும் தரையில் நடந்தே போய்விடக்கூடிய இடத்துக்கு பாலம் கட்டப்பட்டது என்றால் ஒன்று கட்டியவன் கூமுட்டை. இதை நம்புபவன் கேணை.
இத்திட்டத்தை மதக்காரணம் காட்டி எதிர்ப்பவர்களை காங்கிரசின் கிருஷ்ணசாமி 'தமிழகத்தின் துரோகிகள்' என்றால் கருணாநிதியோ 'தேசத்துரோகிகள்' என்கிறார்.
கருணாநிதி எரிந்து விழுகிற மாதிரி பாஜக உண்மையிலேயே இத்திட்டத்தை எதிர்க்கிறதா? என்றால் இல்லவே இல்லை. அவர்கள் 5000 வருடங்களுக்கு முன்னர் ராமன் கட்டிய பாலத்தை இடிப்பதை மட்டுமே எதிர்க்கின்றார்களே தவிர சேதுக்கால்வாயை எதிர்க்கவில்லை. 'எண்ணெய் தடவாமல் தலை சீவ முடியுமா?' எனக் கருணாநிதி கேட்டால் 'எண்ணெய் தடவாமலே தலை சீவுவதுதான் ·பேசன்' என்று இல.கணேசன், மாற்று வழியில் தோண்டச் சொல்கிறார்.
எதிர்முகாமில் இருந்து எதிர்ப்பு வருவதைக்கண்ட கருணாநிதி தன் கூட்டணியை வைத்தே 'சேது சமுத்திரத்திட்டப் பாதுகாப்புக்குழு' ஒன்றை உருவாக்கி, 'சேதுக்கால்வாய் போன்றவற்றை நிறைவேற்றவே திமுக தனிநாடு கேட்டதாகவும், மய்ய அரசே என்னென்ன வேண்டும் சொல்லுங்கள் எனக்கேட்டதும் தனிநாடு கொள்கையைக் கைவிட்டு இந்தியாவில் இருந்து கொண்டே சேதுக்கால்வாய் வெட்டலாமென்று பிரிவினையைக் கைவிட்டதாகவும்' புத்தம் புது திரைக்கதை ஒன்றைச் சொன்னார்.
ராமதாசோ 'இத்திட்டம் நிறைவேற்றி முடிக்கப்பட்டால் தமிழகத்தில் தொழில்வளம் பெருகும். வணிகம் வளர்ச்சி அடையும். பல துறைமுகங்கள் ஏற்பட்டு வேலை வாய்ப்புகள் பெருகும்' என்று கற்பனையைத் தூண்டிவிடுகிறார். மார்க்சிஸ்ட் கட்சியின் சீத்தாராம் யெச்சூரியோ சிறந்ததொரு தரகு முதலாளியின் வார்த்தைகளிலேயே 'உலக அளவில் கப்பல் போக்குவரத்தில் மிகப்பெரிய வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இத்துறையில் மலேசியா, சிங்கப்பூர் நாடுகளுக்கு இணையாக இந்தியாவும் முன்னேற வேண்டும் என்றால் இது போன்ற திட்டங்கள் அவசியம்' என்கிறார்.
துறைமுகங்கள் வளருவதால் வேலை வாய்ப்பு பெருகும் என்பது கடைந்தெடுத்த பொய்யாகும். சேதுக்கால்வாய் திட்டம் வருவதற்கு முன்னரே 80களில் தூத்துக்குடி துறைமுகத்தில் வேலை செய்து வந்த ஆயிரக்கணக்கான டி.எஸ்.ஏ. தொழிலாளர்களை துறைமுக நவீனமயமாக்கம் இன்று வீதிக்கு எறிந்து விட்டது. துறைமுகங்கள் முழுக்க கணிணிகளால் இயக்கப்படுகின்றன. 1990 களுக்குப் பின்னர் பின்பற்றப்படும் மக்கள் விரோதப் பொருளாதாரக் கொள்கையால் பல லட்சம் சிறுதொழில்கள் அழிந்து விட்டன. கிராமங்களின் கைவினைஞர்களும், விவசாயிகளும் பெருநகரங்களை நோக்கி படையெடுக்கின்றனர்.
சேது சமுத்திரத் திட்டத்தை ஆதரிக்கும் கருணாநிதி, 'நாற்கர சாலைகள் போட்ட பின்னர் 2 மணி நேரத்திலேயே சென்னையில் இருந்து வேலூருக்கு போக முடிகிறது. முன்பெல்லாம் 4 மணி நேரம் ஆனது' என்று சொல்கிறார். வெள்ளைக்காரன் ரயில் விட்ட கதை மாதிரிதான் இதுவும். காலனி நாடுகளில் இருந்து சுரண்டப்படும் செல்வத்தை விரைந்து எடுத்துச் செல்லவும் தனது படைகளை விரைவாக நகர்த்தவும் போட்ட இருப்புப்பாதையை சும்மா போட்டு வைக்காமல் மக்களுக்கும் பயன்படுத்தச் சொன்னான், வெள்ளைக்காரன். இன்று துறைமுகங்களை சிறப்புப் பொருளாதார மண்டலங்களுடன் நான்கு வழிச்சாலைகள் மூலம் இணைத்து அதிவேகமாக சரக்கைக் கையாள உலக வங்கி நிதியுடன் போடப்படும் சாலையையே ஏதோ மக்கள் விரைந்து செல்லப் போட்டது போலப் படம் காட்டுகிறார் கருணாநிதி.
சேது சமுத்திரத் திட்டத்தை ஜனநாயக முற்போக்குக் கூட்டணி ஆதரித்தால், 'வேறு இடத்தில் வெட்டுங்களேன்' என்று அதை எதிர்க்கிற மாதிரி பாஜகவும் ஜெயலலிதாவும் ஆதரிக்கின்றனர் . இதனை 'தமிழனின் கனவுத் திட்டம்' என்று சொல்லிடும் கால்வாய்க் கனவையே பிரிட்டிஷ் காரன் தான் உருவாக்கினான். 1860களில் பஞ்சங்களை உருவாக்கிய வெள்ளை ஏகாதிபத்தியம் பருத்தி,அவுரி போன்றவற்றையும் தேக்கு போன்ற மரங்களையும் விரைவாய்க் கொண்டு செல்ல வடிவமைத்த திட்டத்தை 'தமிழனின் கனவு'த் திட்டம் என்று சொல்வதே அடிமைப்புத்தியாகும். அன்று பிரிட்டனால் நிறைவேற்ற முடியாமல் போன இந்தத் திட்டத்தை,இன்று உலக நிதி மூலதனம் நிறைவேற்றக் கிளம்பியுள்ளது.
இத்திட்டத்தின் ஆதரவாளர்கள் 'சேதுவால் நம்நாடு மட்டுமல்ல. தென் கிழக்காசிய நாடுகளும் கடலோரப் பகுதிகளில் அமைந்துள்ள நாடுகளும் பயன்பெறும். வணிகமும் தொழிலும் பெருகும். அன்னிய முதலீடு அதிகரிக்கும். அந்நியச் செலாவணி அதிகரிக்கும். ஏற்றுமதி அதிகரிக்கும். துறைமுகங்களின் சரக்குக் கையாளும் திறன் அதிகரிக்கும்' என்று சேதுவின் உண்மை நோக்கத்தை சொல்லிவிடுகிறார்கள். சென்னைக்கு அருகில் ஹோண்டாவும், ஹ¥ண்டாயும் பல கோடி அந்நிய முதலீட்டில்தான் வந்தன. எத்தனை பேருக்கு வேலை கிடைத்தது? அவர்கள் கார்களை ஒருங்கிணைத்து சென்னை துறைமுகம் மூலமாகத்தான் ஏற்றுமதி செய்கின்றனர். இதன் மூலம் துறைமுகத்தில் வேலை வாய்ப்பு பெருகியுள்ளதா? இல்லவே இல்லை.
அந்நிய முதலீடுகளை வரவேற்க எனச் சாலைகளை அகலப்படுத்துவதற்காக பலரின் வீடுகள், கடைகள் தரைமட்டமாக்கப்பட்டதுதான் மிச்சம். ஜார்க்கண்ட், ஒரிஸ்ஸா,சத்திஸ்கர் முதல் பல மாநிலங்களின் சுரங்கங்கள் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரைவார்க்கப்பட்டு வருகின்றன. வெட்டி எடுக்கும் தாதுக்களையும் சிறப்புப் பொருளாதார மண்டல உற்பத்திப் பொருட்களையும் அதிவிரைவாக எடுத்துக் கொண்டு துறைமுகங்களை நோக்கிக் கொண்டு செல்லத்தான் நான்கு வழிச்சாலைகள் போடப்பட்டு வருகின்றன. இந்தப் பூதாகரமான சாலை விரிவாக்கத்தினால் பல இடங்களில் சிற்றூர்களின் பல தெருக்களே அழிக்கப்பட்டு விட்டன. பல்லாண்டு பழைமையான மரங்கள் பெயர்த்தெறியப்பட்டு விட்டன.
உலகில் அருகி வரும் கடல் ஆமைகள் முட்டையிடும் பகுதி என்றும் பவளப்பாறைகள் செறிந்த பகுதி என்றும் உயிரியலாளர்களால் போற்றப்படும் மன்னார் வளைகுடாவை ஏகாதிபத்தியம் சேதுக்கால்வாய் திட்டத்தின் மூலம் தனது கோரப்பசிக்குப் பலியாக்கி வருகின்றது. ஏகாதிபத்தியத்திற்காகப் போடப்படும் சேதுக்கால்வாயின் மைய நோக்கத்தைப் பற்றி யாரும் யோசிக்க விடாமல் இருக்க ஓட்டுக்கட்சிகள் 'ராமன் பாலம் கட்டினானா?' இல்லையா? என்ற பட்டிமன்றத்தில் இறங்கி விட்டன. 15 ஆண்டுகளுக்கு முன் பாபர், ராமர் கோவிலை இடித்தாரா இல்லையா என்ற விவாதத்தில் மக்களை மோதவிட்டு, ஆட்சியாளர்கள் காட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அதே தந்திரம்தான் இன்று பாலப் பிரச்சினையிலும் பின்பற்றப்படுகின்றது.
ஓட்டுக்கட்சிகளின் திசைதிருப்பும் இந்த உத்திக்குப் பலியாகாமல் சேது சமுத்திரத்திட்டம் மூலம் நம் மண்ணை ஆதிக்கம் செய்யப்போகும் ஏகாதிபத்தியத்தை நாம் எதிர்த்துப் போராடுவோம்.
Labels: ஒட்டுக்கட்சிகள், மறுகாலனியாதிக்கம்
Saturday, June 16, 2007
கார்பரேட் கட்சிகளும் மக்கள் நலனும்

Labels: இந்திய ஆட்சியாளர்கள், உலகமயமாக்கல், ஒட்டுக்கட்சிகள், மறுகாலனியாதிக்கம்












