Thursday, June 21, 2007

திமுக-பாஜக வழங்கும் 'ராமன் கட்டிய பாலம்' அரட்டை அரங்கம்


மன்னாருக்கும் தனுஷ்கோடிக்கும் இடையில் ஆதாம் பாலம் என்றும் ராமன் பாலம் என்றும் அழைக்கப்படும், கடலுக்கடியில் கிடக்கும் மணல்திட்டுகளை வெட்டி எடுக்கும் பணி சேது சமுத்திரத் திட்டத்திற்காக ஆரம்பித்திருக்கும் இவ்வேளையில் பார்ப்பனர்கள் அனைவரும் ஒரே அணியில் இணைந்து கொண்டு 'ராமர் கட்டிய பாலத்தை இடிக்காதே!' என ஓலமிட ஆரம்பித்துள்ளனர்.

பாஜக, விஸ்வ இந்து பரிசத் போன்ற இந்து மதவெறிக் கூட்டத்துடன் சுப்பிரமணிய சாமியும், பார்ப்பன ஜெயலலிதாவும் அறிக்கை மேல் அறிக்கை விடுகின்றனர். பதிலுக்கு ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் இருந்தும் பதில் அறிக்கை என லாவணிக்கச்சேரி களை கட்டி உள்ளது.

இந்த லாவணிக்கச்சேரியை ரசிப்பவர்கள் சில குறிப்பிட்ட விசயங்களை மறந்து விடும் செலக்டிவ் அம்னீசியா நோயாளிகளாகவே இருந்து விட்டால்தான் எவ்வளவு நல்லா இருக்கும்!
'வெடிகுண்டு வைத்து ராமர் பாலத்தைத் தகர்க்கப் போகின்றார்கள்' என இல.கணேசன் பீதியூட்டி 'தொன்மையான வரலாற்று சின்னமாகவும் மக்களின் நம்பிக்கைக்கு ஆதாரமாகவும் விளங்கும் பாலம்' என்று மணல்திட்டைக் காப்பாற்றத் துடிப்பதைக் கேட்பவர்கள், திட்டப்பணி நடைபெறும் பாதை எண்-6 வழியாக (ஆதாம் பாலம்) கால்வாய் வெட்டச் சொன்னதே முந்தைய பாஜக அரசின் திருநாவுக்கரசர் தலைமையிலான அமைச்சகம்தான் என்பதை மறக்க வேண்டும்.

பாராளுமன்றத்தில் பாஜகவின் மல்ஹோத்ரா 'பாலத்தை இடித்தால் அரசு கவிழ்ந்துவிடும்' என சாபமிட்டபோது டி.ஆர்.பாலு முழங்கினாரே '400 ஆண்டு காலப் பழைமை வாய்ந்த மசூதியை இடித்த நீங்கள் இப்போது இல்லாத பாலத்தை இடிப்பதாக என்மீது பழி போடுகிறீர்கள்' என்று! மசூதி இடித்த பின்னர்தான் தேஜகூ அரசில் இதே பாலு மந்திரியாய் இருந்து ஒரே குட்டையில் புரண்டார் என்பதை மறக்க வேண்டும்.

'ஆங்கிலேயர்கள் வரைந்த படங்களில்கூட ராமர் பாலம் இருந்தது. தற்போது இடிக்கப்படும் பாலத்தின் கற்களை இரகசியமாக கப்பலில் எடுத்துச் செல்கின்றனர். பிரதமரும் ஜனாதிபதியும் உடனே தலையிட வேண்டும்' என்று ஊளையிடும் ஜெயா மாமியின் அதிமுகதான் 2001 தேர்தல் அறிக்கையில் 'ஆதாம் பாலத்து மணலை அகற்றி கால்வாய் அமைக்கப்படும்' என்று சொன்னதென்பதை மறக்க வேண்டும்.

இந்த வாதப்பிரதிவாதத்தில் கருணாநிதி 'அயோத்தியில் ராமர் கோவில் என்று சொல்லி பாபர் மசூதியை இடித்து அதன் காரணமாக ரத்த ஆறு ஓடக் காரணமானவர்கள்'தான் சேதுக்கால்வாயை எதிர்க்கிறார்கள் எனச் சாடினார். அதே மதவெறியர்கள் 2002ல் குஜராத் முஸ்லிம்களை மாதக்கணக்கில் கொன்று போட்டபோது 'அது உள் மாநிலப்பிரச்சினை' என்று அவர் சொன்னதை மறக்க வேண்டும்.

இந்த அரட்டைகளைக் காது கொடுத்துக் கேட்பபவர்கள் இந்த அறிக்கைப்புலிகளைக் கேள்வி எதுவும் கேட்கப் போவதில்லைதான்.

தயானந்த சரஸ்வதி எனும் பண்டாரம் 'ராமேஸ்வரம் கடல் பகுதியில் உள்ளது இயற்கையான பாலமல்ல. கி.பி. 15 ஆம் நூற்றாண்டு வரை அப்பாலத்தில் மக்கள் சென்று வந்தனர்' என்று சொல்கிறார். 'அப்படியென்றால் 11ஆம் நூற்றாண்டில் ராஜராஜ சோழன் ஏன் அப்பாலத்தைப் பயன்படுத்தாமல் கடற்படையை ஏவி ஈழம் வென்றான்?' என்று அவரை யாரும் கேட்கப் போவதில்லை.

'பலகோடி இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் ராமர் பாலத்தை இடிப்பதை மைய அரசு செய்யக்கூடாது. சேதுக்கால்வாயால் வெளி நாட்டவருக்குதான் அதிகப்பலன்' என்று திடீர் தேசப்பற்றை விதைக்கும் விஷ்வ இந்து பரிசத், தனக்கு நன்கொடைகளை அமெரிக்கா, பிரிட்டனில் இருந்து ஏன் பெறுகின்றது? என யாரும் கேட்கப்போவதில்லை.

சேதுக்கால்வாய்க்காக வாதாடுவதற்கென்றே திமுக,மதிமுக,அதிமுக,திமுக, மீண்டும் மதிமுக எனப் பலமுறை கட்சி மாறிய மதிமுக அறிவுஜீவி கே.எஸ்.ராதாகிருஷ்ணனிடம் 'ஜெயாவின் சேதுக்கால்வாய் எதிர்ப்பு' பற்றி யாரும் கருத்து கேட்கப் போவதில்லை.

சொல்லி வைத்த மாதிரி எல்லோரும் 'அமெரிக்காவின் நாசாவே வெளியிட்டிருக்கும் செயற்கைக்கோள் படத்தில் ராமர் பாலம் இருக்கிறது' என்கிறார்கள். அவர்களிடம் 'நாசாவின் இணைய தளமோ, கடலில் நடக்கும் இயற்கை மாற்றத்தால் உண்டான மணல்திட்டுக்களே அவை. அங்கு மனிதனால் உருவாக்கப்பட்ட எவ்விதமான கட்டிடங்களும் இல்லை' எனச் சொன்னதையும், 'நாசா சொன்ன மணல் திட்டுக்களைப் பாலம் எனத் திரித்தவர்கள் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்கத்தினர்தானே!' என்பதையும் யாரும் கேட்கப் போவதில்லை.

ராமர் பாலம் கட்டினாரா? அது பாக் நீரிணைப்பில் (இலங்கை-இந்தியாவைப் பிரிக்கும் நீர்ச்சந்தி)தான் உள்ளதா? என்ற விவாதம் இல.கணேசனுக்கும் திமுகவுக்கும் இடையே நடந்து வருகிறது.

'மொகலாயர் காலத்து நூல்களிலும், தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் உள்ள எண்ணற்ற நூல்களிலும் ராமர் கட்டிய பாலத்துக்கு ஆதாரம் உள்ளது' என இல கணேசன் சொல்லவே, டி.ஆர். பாலு சரஸ்வதி மகால் நூலகத்திற்கு சென்று 4 மணி நேரம் குறிப்பெடுத்தார். பெரியாரை ரவிக்குமார் தொடர்ந்து அவதூறு செய்து வந்தபோது கூட திமுக காரர்கள், அதற்கு மறுப்பு சொல்ல 4 மணிநேரம் பெரியார் நூல்களைத் தேடி இருக்க மாட்டார்கள். உடனே 'நூலகத்தில் நுழைந்து ஆதாரங்களை அழித்தார்' என்று பாசிச ஜெயா சொன்னார். அதையே பாஜகவும் வாந்தி எடுத்தது. பாராளுமன்றத்தில் 'பாலத்தை இதிகாச ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் வாதாடத் தயார்' எனப் பாலு அறிவித்ததும், ஆதாரப்புளுகுகளை நிறுத்தி விட்டு பாஜக 'இது இந்துக்களின் நம்பிக்கை சம்பந்தப்பட்ட விசயம்' எனச் சொல்ல ஆரம்பித்தது.

இதையெல்லாம் காது குளிரக் கேட்ட பிறகு ராமன் கட்டிய பாலம் குறித்து நமது மண்டைக்குள்ளும் சில கேள்விகள் எழுகின்றன.

ராமனே கட்டிய பாலம் என்கிறார்களே! அவன் கட்டியது உண்மை என்றே கொண்டாலும் ஆனானப்பட்ட ராமன் கட்டிய பாலத்தையும் கடல் விழுங்கி விட்டதே.. அதை ஏன் இப்போது இடிக்கக் கூடாது?

தமிழக மக்களின் சிரமத்தைக் குறைத்துப் போக்குவரத்தை மேம்படுத்தவா ராமன் பாலம் கட்டினான்? மாற்றானிடம் சென்று விட்ட அல்லது கடத்தப்பட்ட தன் பெண்டாட்டியை மீண்டும் அழைத்து வரத்தானே அந்தப் பாலத்தைக் கட்டினான்?

இலங்கைக்கு செல்ல, கடலைக் கடக்க பாலம் கட்டிய ராமன், பாம்பனில் இருந்து ராமேஸ்வரம் வரை எப்படிப் போனான்?

ராமன் கட்டிய பாலம் தனுஷ்கோடியில் இருக்கையில் அனுமன் பறக்கையில் கீழே விழுந்ததால் உருவானதாகச் சொல்லப்படும் மருத்துவ மலை மட்டும் ஏன் கன்னியாகுமரிக்கருகில் இருக்கிறது?

'ராமன் பாலத்துக்கு 15 லட்சம் வருச வரலாறுண்டு' என்று ஜெ.யும் பாஜகவும் சொல்கிறார்கள். மனித இனம் உருவாகியே 5 லட்சம் ஆண்டுகள்தானே ஆகின்றன.

ராமன் பாலத்தை உடைப்பது குறித்துக் குதிக்கும் ராம.கோபாலன் கிராமங்களில் இன்னமும் இருக்கும் ரெட்டை டம்ளர்களை உடைக்க எப்போது வருவார்?

ராமநாதபுரம் மாவட்டத்திலே மலைகள் ஏதும் இல்லையே. பாலம் கட்ட பெரும்பாறைகளுக்கு ராமன் என்ன செய்தான்? கரசேவை நடத்திக் கல் வரவழைக்க அன்றைக்கு அத்வானி போன்றவர்கள் இல்லையே!

இவ்வளவு பழமையான பாலத்தைக் காக்க ஏன் இவர்கள் ஆண்ட 6 ஆண்டுகளில் தொல்பொருள் சின்னமாக அதனை அறிவிக்கவில்லை? உமாபாரதி சுரங்கத்துறை அமைச்சராக இருந்தபோது அப்பகுதியில் 21 மீட்டர் வரை தோண்டிப்பார்த்தும் கட்டிடங்கள் ஏதும் தென்படாததாலா?

உண்மையில் பாக் நீரிணைப்பில் பாலம் இருந்ததா? கடலியலாளர் ஜெயகரன் "நூறாண்டுகளுக்கு 1 மீட்டர் வரை கடல் மட்டம் உயர்ந்து வருவதால் 5000 ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழ்நாட்டுடன் தரையால் இணைக்கப்பட்டிருந்த இலங்கை தீவாகிப் போனது" என்பதைப் பல ஆதாரங்களுடன் சொல்கிறார். (ஆதாரம்:- 'குமரி நில நீட்சி' ஜெயகரன்)

லட்சக்கணக்கான வருசங்கள் என்ன, 5000 வருசத்துக்கு முன்னர் வெறும் தரையில் நடந்தே போய்விடக்கூடிய இடத்துக்கு பாலம் கட்டப்பட்டது என்றால் ஒன்று கட்டியவன் கூமுட்டை. இதை நம்புபவன் கேணை.

இத்திட்டத்தை மதக்காரணம் காட்டி எதிர்ப்பவர்களை காங்கிரசின் கிருஷ்ணசாமி 'தமிழகத்தின் துரோகிகள்' என்றால் கருணாநிதியோ 'தேசத்துரோகிகள்' என்கிறார்.

கருணாநிதி எரிந்து விழுகிற மாதிரி பாஜக உண்மையிலேயே இத்திட்டத்தை எதிர்க்கிறதா? என்றால் இல்லவே இல்லை. அவர்கள் 5000 வருடங்களுக்கு முன்னர் ராமன் கட்டிய பாலத்தை இடிப்பதை மட்டுமே எதிர்க்கின்றார்களே தவிர சேதுக்கால்வாயை எதிர்க்கவில்லை. 'எண்ணெய் தடவாமல் தலை சீவ முடியுமா?' எனக் கருணாநிதி கேட்டால் 'எண்ணெய் தடவாமலே தலை சீவுவதுதான் ·பேசன்' என்று இல.கணேசன், மாற்று வழியில் தோண்டச் சொல்கிறார்.
பாஜக இந்தப்பிரச்சினையில் ராமன் பெயரைச் சொல்லி தனக்கெனெ ஓர் ஆதரவுத் தளத்தை உருவாக்க முயல்கிறது. ஏற்கெனெவே கரசேவையை ஆதரித்த, மோடிக்காக பரிந்து பேசிய ஜெயா இக்கும்பலுடன் ஐக்கியமாகாமல் இருந்திருந்தால்தான் அது ஆச்சரியம். ஏற்கெனவே, கிறித்துவ மீனவர்கள் வலை காயவைக்கும் பாறையை விவேகானந்தர் பாறை எனக் கைப்பற்றி கன்னியாகுமரியில் காலூன்றியது போல் இவ்விசயத்தையும் இக்கும்பல் கையில் எடுத்துள்ளது.

எதிர்முகாமில் இருந்து எதிர்ப்பு வருவதைக்கண்ட கருணாநிதி தன் கூட்டணியை வைத்தே 'சேது சமுத்திரத்திட்டப் பாதுகாப்புக்குழு' ஒன்றை உருவாக்கி, 'சேதுக்கால்வாய் போன்றவற்றை நிறைவேற்றவே திமுக தனிநாடு கேட்டதாகவும், மய்ய அரசே என்னென்ன வேண்டும் சொல்லுங்கள் எனக்கேட்டதும் தனிநாடு கொள்கையைக் கைவிட்டு இந்தியாவில் இருந்து கொண்டே சேதுக்கால்வாய் வெட்டலாமென்று பிரிவினையைக் கைவிட்டதாகவும்' புத்தம் புது திரைக்கதை ஒன்றைச் சொன்னார்.

ராமதாசோ 'இத்திட்டம் நிறைவேற்றி முடிக்கப்பட்டால் தமிழகத்தில் தொழில்வளம் பெருகும். வணிகம் வளர்ச்சி அடையும். பல துறைமுகங்கள் ஏற்பட்டு வேலை வாய்ப்புகள் பெருகும்' என்று கற்பனையைத் தூண்டிவிடுகிறார். மார்க்சிஸ்ட் கட்சியின் சீத்தாராம் யெச்சூரியோ சிறந்ததொரு தரகு முதலாளியின் வார்த்தைகளிலேயே 'உலக அளவில் கப்பல் போக்குவரத்தில் மிகப்பெரிய வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இத்துறையில் மலேசியா, சிங்கப்பூர் நாடுகளுக்கு இணையாக இந்தியாவும் முன்னேற வேண்டும் என்றால் இது போன்ற திட்டங்கள் அவசியம்' என்கிறார்.

துறைமுகங்கள் வளருவதால் வேலை வாய்ப்பு பெருகும் என்பது கடைந்தெடுத்த பொய்யாகும். சேதுக்கால்வாய் திட்டம் வருவதற்கு முன்னரே 80களில் தூத்துக்குடி துறைமுகத்தில் வேலை செய்து வந்த ஆயிரக்கணக்கான டி.எஸ்.ஏ. தொழிலாளர்களை துறைமுக நவீனமயமாக்கம் இன்று வீதிக்கு எறிந்து விட்டது. துறைமுகங்கள் முழுக்க கணிணிகளால் இயக்கப்படுகின்றன. 1990 களுக்குப் பின்னர் பின்பற்றப்படும் மக்கள் விரோதப் பொருளாதாரக் கொள்கையால் பல லட்சம் சிறுதொழில்கள் அழிந்து விட்டன. கிராமங்களின் கைவினைஞர்களும், விவசாயிகளும் பெருநகரங்களை நோக்கி படையெடுக்கின்றனர்.
ஏற்கெனெவே இருந்த வாழ்வை அழித்து விட்டு சேதுக்கால்வாய் மூலம் தொழில் பெருகும், வணிகம் பெருகும் என்று சொல்வதில் கடுகளவும் பொருளில்லை.

சேது சமுத்திரத் திட்டத்தை ஆதரிக்கும் கருணாநிதி, 'நாற்கர சாலைகள் போட்ட பின்னர் 2 மணி நேரத்திலேயே சென்னையில் இருந்து வேலூருக்கு போக முடிகிறது. முன்பெல்லாம் 4 மணி நேரம் ஆனது' என்று சொல்கிறார். வெள்ளைக்காரன் ரயில் விட்ட கதை மாதிரிதான் இதுவும். காலனி நாடுகளில் இருந்து சுரண்டப்படும் செல்வத்தை விரைந்து எடுத்துச் செல்லவும் தனது படைகளை விரைவாக நகர்த்தவும் போட்ட இருப்புப்பாதையை சும்மா போட்டு வைக்காமல் மக்களுக்கும் பயன்படுத்தச் சொன்னான், வெள்ளைக்காரன். இன்று துறைமுகங்களை சிறப்புப் பொருளாதார மண்டலங்களுடன் நான்கு வழிச்சாலைகள் மூலம் இணைத்து அதிவேகமாக சரக்கைக் கையாள உலக வங்கி நிதியுடன் போடப்படும் சாலையையே ஏதோ மக்கள் விரைந்து செல்லப் போட்டது போலப் படம் காட்டுகிறார் கருணாநிதி.

சேது சமுத்திரத் திட்டத்தை ஜனநாயக முற்போக்குக் கூட்டணி ஆதரித்தால், 'வேறு இடத்தில் வெட்டுங்களேன்' என்று அதை எதிர்க்கிற மாதிரி பாஜகவும் ஜெயலலிதாவும் ஆதரிக்கின்றனர் . இதனை 'தமிழனின் கனவுத் திட்டம்' என்று சொல்லிடும் கால்வாய்க் கனவையே பிரிட்டிஷ் காரன் தான் உருவாக்கினான். 1860களில் பஞ்சங்களை உருவாக்கிய வெள்ளை ஏகாதிபத்தியம் பருத்தி,அவுரி போன்றவற்றையும் தேக்கு போன்ற மரங்களையும் விரைவாய்க் கொண்டு செல்ல வடிவமைத்த திட்டத்தை 'தமிழனின் கனவு'த் திட்டம் என்று சொல்வதே அடிமைப்புத்தியாகும். அன்று பிரிட்டனால் நிறைவேற்ற முடியாமல் போன இந்தத் திட்டத்தை,இன்று உலக நிதி மூலதனம் நிறைவேற்றக் கிளம்பியுள்ளது.

இத்திட்டத்தின் ஆதரவாளர்கள் 'சேதுவால் நம்நாடு மட்டுமல்ல. தென் கிழக்காசிய நாடுகளும் கடலோரப் பகுதிகளில் அமைந்துள்ள நாடுகளும் பயன்பெறும். வணிகமும் தொழிலும் பெருகும். அன்னிய முதலீடு அதிகரிக்கும். அந்நியச் செலாவணி அதிகரிக்கும். ஏற்றுமதி அதிகரிக்கும். துறைமுகங்களின் சரக்குக் கையாளும் திறன் அதிகரிக்கும்' என்று சேதுவின் உண்மை நோக்கத்தை சொல்லிவிடுகிறார்கள். சென்னைக்கு அருகில் ஹோண்டாவும், ஹ¥ண்டாயும் பல கோடி அந்நிய முதலீட்டில்தான் வந்தன. எத்தனை பேருக்கு வேலை கிடைத்தது? அவர்கள் கார்களை ஒருங்கிணைத்து சென்னை துறைமுகம் மூலமாகத்தான் ஏற்றுமதி செய்கின்றனர். இதன் மூலம் துறைமுகத்தில் வேலை வாய்ப்பு பெருகியுள்ளதா? இல்லவே இல்லை.

அந்நிய முதலீடுகளை வரவேற்க எனச் சாலைகளை அகலப்படுத்துவதற்காக பலரின் வீடுகள், கடைகள் தரைமட்டமாக்கப்பட்டதுதான் மிச்சம். ஜார்க்கண்ட், ஒரிஸ்ஸா,சத்திஸ்கர் முதல் பல மாநிலங்களின் சுரங்கங்கள் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரைவார்க்கப்பட்டு வருகின்றன. வெட்டி எடுக்கும் தாதுக்களையும் சிறப்புப் பொருளாதார மண்டல உற்பத்திப் பொருட்களையும் அதிவிரைவாக எடுத்துக் கொண்டு துறைமுகங்களை நோக்கிக் கொண்டு செல்லத்தான் நான்கு வழிச்சாலைகள் போடப்பட்டு வருகின்றன. இந்தப் பூதாகரமான சாலை விரிவாக்கத்தினால் பல இடங்களில் சிற்றூர்களின் பல தெருக்களே அழிக்கப்பட்டு விட்டன. பல்லாண்டு பழைமையான மரங்கள் பெயர்த்தெறியப்பட்டு விட்டன.

உலகில் அருகி வரும் கடல் ஆமைகள் முட்டையிடும் பகுதி என்றும் பவளப்பாறைகள் செறிந்த பகுதி என்றும் உயிரியலாளர்களால் போற்றப்படும் மன்னார் வளைகுடாவை ஏகாதிபத்தியம் சேதுக்கால்வாய் திட்டத்தின் மூலம் தனது கோரப்பசிக்குப் பலியாக்கி வருகின்றது. ஏகாதிபத்தியத்திற்காகப் போடப்படும் சேதுக்கால்வாயின் மைய நோக்கத்தைப் பற்றி யாரும் யோசிக்க விடாமல் இருக்க ஓட்டுக்கட்சிகள் 'ராமன் பாலம் கட்டினானா?' இல்லையா? என்ற பட்டிமன்றத்தில் இறங்கி விட்டன. 15 ஆண்டுகளுக்கு முன் பாபர், ராமர் கோவிலை இடித்தாரா இல்லையா என்ற விவாதத்தில் மக்களை மோதவிட்டு, ஆட்சியாளர்கள் காட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அதே தந்திரம்தான் இன்று பாலப் பிரச்சினையிலும் பின்பற்றப்படுகின்றது.

ஓட்டுக்கட்சிகளின் திசைதிருப்பும் இந்த உத்திக்குப் பலியாகாமல் சேது சமுத்திரத்திட்டம் மூலம் நம் மண்ணை ஆதிக்கம் செய்யப்போகும் ஏகாதிபத்தியத்தை நாம் எதிர்த்துப் போராடுவோம்.

Labels: ,

4 Comments:

Blogger அசுரன் said...

//'மொகலாயர் காலத்து நூல்களிலும், தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் உள்ள எண்ணற்ற நூல்களிலும் ராமர் கட்டிய பாலத்துக்கு ஆதாரம் உள்ளது' என இல கணேசன் சொல்லவே, டி.ஆர். பாலு சரஸ்வதி மகால் நூலகத்திற்கு சென்று 4 மணி நேரம் குறிப்பெடுத்தார். பெரியாரை ரவிக்குமார் தொடர்ந்து அவதூறு செய்து வந்தபோது கூட திமுக காரர்கள், அதற்கு மறுப்பு சொல்ல 4 மணிநேரம் பெரியார் நூல்களைத் தேடி இருக்க மாட்டார்கள். உடனே 'நூலகத்தில் நுழைந்து ஆதாரங்களை அழித்தார்' என்று பாசிச ஜெயா சொன்னார். அதையே பாஜகவும் வாந்தி எடுத்தது. பாராளுமன்றத்தில் 'பாலத்தை இதிகாச ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் வாதாடத் தயார்' எனப் பாலு அறிவித்ததும், ஆதாரப்புளுகுகளை நிறுத்தி விட்டு பாஜக 'இது இந்துக்களின் நம்பிக்கை சம்பந்தப்பட்ட விசயம்' எனச் சொல்ல ஆரம்பித்தது.//

வழக்கம் போல.... பாபர் மசூதியில் இதே போன்றுதான் ஆதரம் எதுவும் இல்லை என்றவுடன் நம்பிக்கை என்று சொல்லியது பர்ப்பன பயங்கரவாத கும்பல்.


//'ராமன் பாலத்துக்கு 15 லட்சம் வருச வரலாறுண்டு' என்று ஜெ.யும் பாஜகவும் சொல்கிறார்கள். மனித இனம் உருவாகியே 5 லட்சம் ஆண்டுகள்தானே ஆகின்றன//

அப்படியென்றால் இவர்கள் சொல்ல்ம் காலத்தில் ராமனும் சீதையும் அம்மண குண்டியாக நின்று கொண்டு பாலம் கட்டிக் கொண்டிருந்திருப்பார்கள். குரங்குகளும் வெட்க்கப்படும் அம்மணம்.



//உண்மையில் பாக் நீரிணைப்பில் பாலம் இருந்ததா? கடலியலாளர் ஜெயகரன் "நூறாண்டுகளுக்கு 1 மீட்டர் வரை கடல் மட்டம் உயர்ந்து வருவதால் 5000 ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழ்நாட்டுடன் தரையால் இணைக்கப்பட்டிருந்த இலங்கை தீவாகிப் போனது" என்பதைப் பல ஆதாரங்களுடன் சொல்கிறார். (ஆதாரம்:- 'குமரி நில நீட்சி' ஜெயகரன்)
//

இந்த மேற்சொன்ன தகவலுடன் சேர்த்து அவதனித்தால், தண்ணீரே இல்லாத இடத்தில் அம்மணக் குண்டியாக ராமனும் சீதையும் பாலம் கட்டியுள்ளனர். என்னே ராமனின் மதியீனம்?.... குரங்குகளும் வெட்க்கப்படும் மதியீனம்.

ஒருவேளை இப்படிக் கூட பார்ப்பன லூசு இராமகோபலன் எனும் குரங்கு ஜல்லியடிக்க வாய்ப்புள்ளது, அதாவது 15 லட்சம் வருடத்திற்க்கு முன்பு டிராபிக் ஜாம் அதிகப்படியாக இருந்தபடியால் பாலம் கட்ட வேண்டிய நிர்பந்தம் ஏற்ப்பட்டது. டிராபிக் ஜாம் காரணமாகத்தான் எரோப்ளேன்(புஷ்பக விமானம்) எல்லாம் நாங்க கண்டுபிடித்தோம் என்று.

இதையும் சில அதி முட்டாள் நீல்ஸ்களும், ஜடாயுகளும் கட்டுரையாக எழுதும் வாய்ப்புள்ளது தோழர்களே. :-))


/மார்க்சிஸ்ட் கட்சியின் சீத்தாராம் யெச்சூரியோ சிறந்ததொரு தரகு முதலாளியின் வார்த்தைகளிலேயே 'உலக அளவில் கப்பல் போக்குவரத்தில் மிகப்பெரிய வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இத்துறையில் மலேசியா, சிங்கப்பூர் நாடுகளுக்கு இணையாக இந்தியாவும் முன்னேற வேண்டும் என்றால் இது போன்ற திட்டங்கள் அவசியம்' என்கிறார்.
//

அதான.... இத்த சொல்றதுக்கு இவரு மார்க்ஸிஸ்டா இருக்கனுமாம். அத்த நாம கஸ்டப்பட்டாவது நம்பனும் என்று சந்திப்பு என்ற கோழை இங்கு தொடர்ந்து கூவிக் கொண்டுள்ளார். அவரை அன்புடன் இங்கு வருமாறு அழைக்கிறேன்.


//உலகில் அருகி வரும் கடல் ஆமைகள் முட்டையிடும் பகுதி என்றும் பவளப்பாறைகள் செறிந்த பகுதி என்றும் உயிரியலாளர்களால் போற்றப்படும் மன்னார் வளைகுடாவை ஏகாதிபத்தியம் சேதுக்கால்வாய் திட்டத்தின் மூலம் தனது கோரப்பசிக்குப் பலியாக்கி வருகின்றது. ஏகாதிபத்தியத்திற்காகப் போடப்படும் சேதுக்கால்வாயின் மைய நோக்கத்தைப் பற்றி யாரும் யோசிக்க விடாமல் இருக்க ஓட்டுக்கட்சிகள் 'ராமன் பாலம் கட்டினானா?' இல்லையா? என்ற பட்டிமன்றத்தில் இறங்கி விட்டன. 15 ஆண்டுகளுக்கு முன் பாபர், ராமர் கோவிலை இடித்தாரா இல்லையா என்ற விவாதத்தில் மக்களை மோதவிட்டு, ஆட்சியாளர்கள் காட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அதே தந்திரம்தான் இன்று பாலப் பிரச்சினையிலும் பின்பற்றப்படுகின்றது.//

இதுதான் உண்மை,. பிரச்சனையின் மூல காரணத்தை மூடி மறைகக் உதவுகிறது என்பதால்தான் தரகு தாத்தா கருணாநிதியும் சரி, அல்லக்கை ராமதாசும் சரி(அவருக்கு அதிருதாம் ரிலையன்ஸ் அம்பானி கால்ல அவரு விழுந்த போது எப்படி, எங்க அதிருச்சின்னு குழலி கொஞ்சம் சொன்னா நல்லாருக்கும்), பார்ப்பன் பாசிஸ்டுகளும் ஒன்று போல ராமன் என்ற கபோதியை முன்னுக்கு கொண்டு வருகீறார்கள்.

இதனால்தான் கொஞ்சம் கூட வெட்கமின்றி முன்னுக்கு பின் முரனாக பேசுகிறார்கள்.

கட்டுரைக்கு நன்றி.

அசுரன்

12:46 PM  
Anonymous Anonymous said...

அசுரன்.. நீங்க சொல்றது முற்றிலும் உண்மை.

பா.ஜ.க. காரனுங்களே ராமனை ரொம்பக்கேவலப்படுத்துறாய்ங்க... விழிப்புணர்வுன்னு ஒரு பத்திரிக்கைல மதிமாறன்னு ஒருத்தரு நல்லா நாக்கப் புடுங்கற மாறி கேட்டுருக்காரு..

1) ராமன் கூட அவன் பொண்டாட்டி நிலையா வாழல..

2) ராமன் கோவில, மானுடப்பிறவி பாபர் இடிச்சிட்டாரு.

3) ராமன் கட்டின பாலத்த கடல் இடிச்சுட்டுது..

பாஜக காரனுகளே ராமாவதாரத்த ரொம்ப கேவலப்படுத்திருக்கானுக.

கோவில் இடிந்து, பாலம் நொறுங்கி, ஓடுகாலிய பொண்டாட்டியா வச்சிருந்த ராமன் என்ன மசுருல கடவுளா இருக்க முடியும்?

கட்டபொம்மன்

7:46 PM  
Blogger கோபா said...

அசுரன்.. மற்றும் கட்டபொம்மன்... ஆகியோரின் வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி

கோபா

8:58 AM  
Anonymous Anonymous said...

தோழர் கேடயத்தின் சரவெடி கட்டுரை

****************

மாமா வீரமணியும் மயங்கிக் கிடக்கும் மாப்பிள்ளைகளும்

http://kedayam.blogspot.com/2007/06/blog-post_930.html

ஜனநாயகம் முற்போக்கு என்று வலம் வந்து கொண்டிருந்த நமது நண்பர்களின் முகத்திரை கிழிந்து தொங்கிக்கொண்டிருக்கிறது. உரிமை என்று நேற்றுவரை பேசியவர்கள் இன்று இரும்புகரம் கொண்டு ஒடுக்கவேண்டுமென பதிவிடுகிறார்கள். புரட்சி, கோபம் இது அசுர குணம் என்று பார்ப்பன குரலில் அலறுகிறார்கள். வன்முறை தீர்வல்ல என்று நமக்கு வக்கனையாய் போதித்துக்கொண்டே “நக்சல்பரிகளை கட்டிவைத்து எரிக்க வேண்டுமென” தங்களுக்குள் உரையாடிக்கொள்கிறார்கள். பிறப்பால் உயர்வு தாழ்வு பேதமை என பேசித்திரிந்தவர்கள் இன்று பிறப்பினை ஆய்வு செய்து கிசுகிசு அறிக்கை சமர்ப்பிக்கிறார்கள். ம.க.இ.க பார்ப்பனீயம் என்ற பதத்தையே 2000த்தில்தான் பயன்படுத்த துவங்கியது என அவதூறுகளையும் அவற்றோடு அள்ளித்தெளிக்கிறார்கள். நேற்றுவரை உற்ற நண்பர்களாய் ஒட்டி உறவாடிவிட்டு இன்று உக்கிரப்பார்வை பார்க்கும் நண்பர்களின் கோபத்திற்கு காரணம் என்ன? எளிமையானது. இந்த நாட்டினுடைய இயற்கை வளத்தையும் மனித வளத்தையும் சுரண்ட ஏகாதிபத்தியத்திற்கு தரகு வேலை பார்க்கும் மாமா வீரமணியை நமது தோழர். அசுரன், மாமா என்றே சொல்லியதுதான்.

ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக இழிவை போக்க ஆயிரமாயிரம் எதிர்புகளுக்கிடையில், கல்லடிகளுக்கும், சொல்லடிகளுக்கும் மத்தியில் பெரியார் கட்டியெழுப்பிய இயக்கத்தின் தலைமை பொறுப்பில் அமர்ந்து கொண்டு தரகு வேலை பார்ப்பதனாலேயே மாமா வீரமணி தன் தவறினை மறைத்துக்கொள்ள முடியாது என்று நாம் திரைகிழித்ததுதான் நண்பர்களின் கோபத்தை தூண்டியிருக்கிறது. ம.க.இ.க பெரிய புடுங்கிகளா என்று பேச வைத்திருக்கிறது.

நாம் வீரமணியை விமர்சிப்பது புதிதல்ல. ஊரையடித்து உலையில் போட்டு உடலேங்கும் நகையோடும் திமிரோடும் ஜெயலலிதா நடத்திய வளர்ப்பு மகன் திருமணத்தில் எச்சில் இலைக்கு அலையும் நாய் போல நமது மானங்கெட்ட வீரமணி நாக்கை தொங்க போட்டுக்கொண்டு சென்ற போது “வீரமணியும் வந்தாரு மானத்த மொய்யா தந்தாரு” என எள்ளி நகையாடி, மாமி ஜெயாவோடு கூடிக்குலவிய மாமா வீரமணியை அம்பலப்படுத்தியது அண்ணன் வர்றாரு என்ற ம.க.இ.கவின் ஒலிபேழை.

“நான் ஒரு பாப்பாத்தி” என்று சட்டமன்றத்திலேயே பேசிய சமூகநீதிகாத்த வீராங்கனை ஜெயலலிதாவை “பெண் பெரியார்” என்று வர்ணித்து மகிழ்ந்தவர்தானே இந்த மாமா வீரமணி.

எதிரியாவது நமது கண்களுக்கு முன்னால் காவிக்கொடியேந்தி தெளிவாக தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறான். இந்த துரோகியோ கருஞ்சட்டையோடு பெரியாரின் பின்னே ஒளிந்து கொண்டு பார்ப்பனீயத்தை வளர்த்துக்கொண்டிருக்கிறார். எவனோ கிளி ஜோசியனின் பேச்சை கேட்டு கொண்டு கண்ணகி சிலையை வீராங்கனை பெயர்த்தெறிந்த போது கற்பு-கண்ணகி என்றெல்லாம் ஆய்வு செய்து அதற்கு சித்தாந்த விளக்கம் கொடுத்தது யார்? மாமா வீரமணிதான். கண்ணகி சிலை அகற்றப்பட்ட காரணம் பெண்ணுரிமைதான் என்று பேசும் அளவிற்கு அப்பாவியா அவர்?

பெரியார் இறந்து போன இந்த 29 ஆண்டுகளில் என்ன பகுத்தறிவு பிரச்சாரம் செய்து புடுங்கியிருக்கிறார் இவர். பார்ப்பனத்தி வாஸந்தியை அழைத்து வைத்து தமது கல்லூரிகளிலே கருத்தரங்கம் நடத்தி கொண்டிருக்கிறார். பகுத்தறிவு சிந்தனைகளை பரப்புவதை விட வாழ்வியல் சிந்தனைகளை பரப்புவதில்தான் வேகமாய் இயங்குகிறார். ம.க.இ.க என்ன புடுங்கியது என கேட்கும் நண்பர்களே தமிழகம் முழுக்க எமது தோழர்களால் நடத்தபடும் ஆதிக்க சாதிவெறி எதிர்ப்பு போராட்டங்களிலும், இன்னும் ம.க.இ.க தோழர்களால் நடத்தப்படும் எத்தனைஎத்தனையோ போராட்டங்களிலும் செயலில் இறங்கி கைகோர்க்க புடுங்க திராணியில்லாத உங்கள் தலைவர். பெரியார் முழங்கிய வீரியமிக்க சொற்களை கூட காரியவாதத்தோடு மறந்துவிட்டாரே. அடக்குமுறைக்கு அஞ்சாமல் அந்த சொற்களை பேசவும் நக்சல்பாரிகள்தானே வந்து புடுங்க வேண்டியிருக்கிறது. பெரியார் சிலை உடைப்பின் போது நடைபெற்ற பூனூல் அறுப்பு சம்பவங்களை வன்முறை என்று கண்டித்தது இந்து முன்னனி. அதற்கு எதிராய் ஒரு வார்த்தை கூட பேசாமல் எங்கு போய் புடுங்கி கொண்டிருந்தார் உங்கள் தலைவரென்று கேட்டீர்களா?. அதற்கு கூட ம.க.இ.க வின் பொதுச்செயலர் மருதையன் தானே “அது வன்முறையைல்ல பூனூல் என்று எம்மை இழிவுபடுத்து ஆதிக்க கருத்தியலின் மெளனமான வன்முறைக்கு எதிர் வன்முறை, போர்” என்று இந்து முன்னனியின் கொழுப்பை புடுங்க வேண்டியிருந்தது. ஆனால் ம.க.இ.க தோழர்கள் திருவரங்கத்து கருவறையில் நுழைந்து கலகக்குரல் எழுப்பிய போதும், தியாகராஜ கீர்தனையில் போர்பறை இசைத்து முழங்கிய போதும் அதனையெல்லாம் வன்முறை என்று கண்டிக்க இந்த புடுங்கி மாமா வீரமணி ஒடோடிவந்துவிட்டார். அவர் இத்தனை முறை தன்னை எந்த பக்கமிருப்பதாக நிரூபித்தாலும் நண்பர்களே நீங்களே அவர் கருப்பு சட்டை கண்டு மயங்கும் அப்பாவித்தனத்தை மாற்றிக்கொள்ள மாட்டீர்களா? இதனை சொன்னால் ஏன் நண்பர்களுக்கு கோபம் பொத்துக் கொண்டு வருகிறது. பெரியாரையும் அவர் கொள்கையையும் காப்பதை விட இந்த சொறிநாயை காப்பதுதான் சரி என்று உங்கள் பகுத்தறிவு சொல்கிறதா?

இதனையெல்லாம் கேட்டால் நம்து நண்பர்கள் சொல்கிறார்கள் “அவர் என்னதான் மாமா வேலை பார்த்தாலும், ஒரு இயக்கத்தின் தலைமையை மாமா என்று சொல்வது தவறில்லையா” “தோழர்கள்!நீங்கள் சொல்கின்ற காரணங்கள் சரிதான் ஆனால் வார்த்தைகளின் வீரியத்தை மட்டும் கொஞ்சம் குறைத்துக்கொள்ளூங்களேன்” என்று நமக்கு அறிவுரை சொல்கிறார்கள். “பார்ப்பனர்” என்று பேசினால் அய்யர்களின் மனம் புண்படுமே அதனால் பிராமணர் என்று பேசுங்களேன் என்று பெரியாருக்கு யோசனைச்சொல்லி மூக்குடைப்பட்டு போனவர்களின் எண்ணிக்கையை கொஞ்சம் எண்ணிவிட்டு வாருங்களேன் என்று நாம் நண்பர்களுக்கு யோசனை சொல்கிறோம்.

“இந்தியாவிற்கு பகத்சிங்கின் கொள்கைதான் உண்மையாக வேண்டியது என்பது நம்து பலமான அபிப்பிராயமாகும். ஏனெனில் நாமறிந்த வரை பகத்சிங்கிற்கு சமதர்மமும், பொதுவுடைமையும்தான் அவரது கொள்கையென்று கருதியிருக்கிறோம்” என்று ஈரோட்டு கிழவன் தனது கூர்தீட்டிய வரிகளோடு வெள்ளை அரசின் அடக்குமுறையை குத்திக்கிழித்த காலம் ஒன்றுண்டு. இன்று உங்களிடம் பெரியாரின் குரலை நாங்கள் எதிர்பார்க்கவில்லையென்றாலும் நண்பர்களே, “நக்சலபாரிகளை ஒழிக்க வேண்டும், எரிக்க வேண்டும்” என்று அத்வானியின் குரலிலே பேசிக்காட்டி எங்களை அசத்துவீர்களென்றும் நாங்கள் எதிர்பார்க்கவில்லை. பல நாட்களாய் வெளியில் உலவிய பார்ப்பனர்களை விமர்சித்து விமர்சித்து உங்கள் மூளையில் ஒளிந்திருக்கும் பார்ப்பனர்களை விட்டுவிட்டீர்களே. இந்த பயங்கரவாத பீதி கலைய பகத்சிங்கை தூக்கிலிட்ட போது பெரியார் வெளியிட்ட அறிக்கையை படியுங்கள். மாமா வீரமணியின் சகவாசம் விட்டுத்தொலையுங்கள்.

ஆனால் உங்கள் தலைவர்கள் போலவே நீங்களும் திடீரென்று எதையாவது புலனாய்வு செய்து புடுங்கிவிடுகிறீர்கள். அப்படி உங்கள் சமீபத்திய புலனாய்வு தோழர்.மருதையன் பிறப்பால் பார்ப்பனர் என்பதுதான் ஆனால் நண்பர்களே நீங்கள் இவ்வளவு பாமரத்தனமானவர்கள் என்று நான் நினைத்ததேயில்லை, ம.க.இ.கவின் நடைமுறையில் விமர்சனம் வைக்க முடியாத சில ஒட்டுண்ணிகள் இந்த வாதத்தை சிற்றிதழ் வட்டாரத்திலும், தமிழின குழுக்களுக்கிடையிலும் எழுப்பிவிட்டு வாங்கிகட்டிக்கொண்டு ஓடினார்கள் என்று உங்களுக்கு தெரியாதா? பாவம் நீங்களும்தான் என்ன செய்வீர்கள் இப்போது இது உங்களூக்கு புது செய்தி. சரி, மாமா வீரமணி நடைமுறையில் ஒரு பச்சைபார்ப்பான் என்று நிறுவிக்காட்ட எத்தனையோ காரணங்களை எம்மால் அடுக்க முடியும் தோழர்.மருதையனை பிறப்பைதவிர நடைமுறையில் அவர் பார்ப்பனர் என்பதற்கு உங்களால் ஒரே ஒரு காரணம் சொல்ல முடியுமா? “அவர் பிறப்பால் பார்ப்பனர் என்பதால் அப்படித்தானிருப்பார்” என்பதன் மூலமாக, வர்ணத்திற்கு ஒரு குணம் “பறை புத்தி அரை புத்தி” போன்ற இழிவான பார்பனீய வரையறைகளில் நின்று கொண்டுதானே உங்கள் மூளை இவ்வளவு கேவலமாய் வேலை செய்கிறது. வெளியில் பார்பனனை ஒழித்துக்கட்டுவதிருக்கட்டும் நண்பர்களே முதலில் உங்கள் மூளைக்குள் இருப்பவனை அடித்து துரத்துங்கள். கூடுதலாய் ஒரு கேள்வி உங்கள் வரையறையின் படி பதிவர் வட்டத்திலேயே எங்கள் தோழர்களிடம் வாங்கிகட்டி கொண்டு ஓடிய இந்து மதவெறியன் அரவிந்த நீலகண்ட நாடாரும், அர்த்தமுள்ள இந்துமதமெழுதிய கண்ணதாசன் செட்டியாரும், பெள்ளாச்சி மகாலிங்க கவுண்டரும் தமிழர்களா? திராவிடர்களா?

இன்னும் சில நண்பர்களுக்கு நம் மீது கோபம் நாம் வெகுமக்களூக்கிடையில் பணி செய்யவில்லையாம்। இதற்கும் உங்களையே குறை சொல்லும் நிர்பந்தத்தை எனக்கு ஏற்படுத்திவிட்டீர்களே நண்பர்களே. தினமலர், தினமணி போன்ற செய்திதாள்களின் கட்டம் கட்டிய செய்தியிலிருந்து உங்கள் பொது அறிவை மீட்டு அதனை வெகுசனங்களுக்கு இடையில் முதலில் இறக்கி விடுங்கள். பேருந்துகளிலும் இரயில்களும் மக்கள் கூடுமிடங்களிலும் கூர்மையான அரசியல் விமர்சனத்தோடு “புதிய ஜனநாயக்த்தையும்” “புதிய கலாச்சாரத்தையும்” விற்கும் எமது தோழர்களின் குரலை ஒருமுறையாவது கேளுங்கள். பிறகு பேசுங்கள்.

“சிலையை உடைத்ததன் மூலம பெரியாரை தமிழகம் முழுவதும் கொண்டு செல்வதற்கான ஒரு அற்புதமான வாய்ப்பைத் தங்கத்தட்டில் வைத்துவழங்கினார்கள் இந்து மதவெறியர்கள்। உடைக்கப்பட்ட பெரியாரின் தலையை தமிழகம் முழுவதும் ஒரு வெடிகுண்டைப்போல ஏந்திச் சென்றிருக்கலாம். தன் வாழ்நாள் முழுவதும் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து மறைந்த அந்த கிழவனை இன்னொரு முறை மக்கள் மத்தியில் பிரச்சாரப்பயணம் அழைத்துச்சென்றிருக்கலாம் “மண்டைச் சுரப்பை உலகு தொழும்” பாரதிதாசன் பாடினாரே அந்த தலையிலிருந்து தோன்றிய சிந்தனையை இளம் தலைமுறையினர் மத்தியில் தீயை போல பற்றவைத்திருக்கலாம். பேசாத கல்லையும், களிமண்ணையும் வைத்து அரசியல் நடத்தும் ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு, பகுத்தறிவுக்கல்லை பேசவைத்துக்காட்டியிருக்கலாம்.” என்று பெரியார் சிலை உடைப்பின் போது பொறி பறக்க எழுதியது “புதிய ஜனநாயகம்” உங்கள் புடுங்கித்தலைவர்களோ ஏ.சி ரூமில் உட்கார்ந்து தங்களுக்குள் விவாதித்துவிட்டு அமைதிகாக்குமாறு அறிவுரை சொன்னார்கள். பூனூலை காக்கமட்டும் ஓடோடி வந்தார்கள். சொல்லுங்கள் நண்பர்களே இதில் எது வெகுசன நடவடிக்கை.


நேற்றுவரை எம்மோடு கூடியிருந்தீர்கள் இன்று விமர்சனம் என்றவுடன் வெகுண்டெழுந்து அடக்க வேண்டும் ஒடுக்க வேண்டும் என்று கூச்சலிடுகிறீர்கள்!! நாங்கள் நேச சக்தி எங்களை விமர்சிக்கலாமா என்று விழுந்து புரள்கிறீர்கள், இந்த தேசம் அடகு வைக்கப்படும் போது, எமது உழைக்கும் மக்களின் வாழ்வு சூறையாடப்படும் போது அதற்கு ஆதரவாய் நிற்கும் எந்த சக்தியையும் எதிர்க்கத் தயங்காது நண்பர்களே எமது குரல்கள். இது ஒடுக்குமுறையை ஒழித்துக்கட்ட வீறிட்டு வெடிக்கும் அசுர கானம் எந்த ஆதிக்கத்தாளத்திற்கும் அடிபணியாது. “கட்டபொம்மன் போராட தொடங்கும் வரை எட்டப்பன் கட்டபொம்மனின் உற்ற நண்பன், கட்டபொம்மன் போராட துவங்கும் போதுதான் எட்டப்பன் வெளிப்பட்டான்” என்று ஒரு கூட்டத்திலே தோழர். மருதையன் குறிப்பிட்டதாக நினைவு. இன்றும் பாருங்களேன் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக கட்டபொம்மனின் வாரிசுகளாய் களத்தில் நிற்கிறோம் நாங்கள், தூக்கில் தொங்கவும் தயார், கட்டி எரிக்கப்பட்டாலும் எங்களுக்கு கவலையில்லை, ஆனால் நாங்கள் போராடத்துவங்கும் போதுதான் “அசுரர்களை அடக்க வேண்டும் ஒடுக்க வேண்டும்” என்று தேவர்களின் குரலில் பேசிகொண்டே எட்டப்பன்கள் வெளிவருகிறார்கள்.

4:13 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home